
சமீபத்தில் நடிகர் விஜய் பேசுவது போல ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்த ஆடியோவில், நடிகர் விஜயின் குரல், காவிரி நதிநீர் விவகாரத்தால், அக்டோபர் 19 வெளியாகவிருக்கும் தனது ‘லியோ’ படத்தை கர்நாடகாவில் திரையிடப் போவதில்லை, என்று பேசியிருந்தது.
இந்த ஆடியோ பரவியதும், நடிகர் விஜயின் தரப்பிலிருந்து, இது போலியானது என்றும், நடிகர் விஜய் அவ்வாறு பேசவில்லை என்றும், அது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) மென்பொருட்கள் மூலம் உருவாக்கப்பட்டது என்றும் விளக்கமளிக்கப்பட்டது.
செயற்கை நுண்ணறிவு மூலம் ஒரு பிரபலத்தின் குரலோ, தோற்றமோ போலி செய்யப்பட்டு அது சர்ச்சைக்குள்ளான ஒரு சம்பவம் இது.
போலிகளை எப்படி கண்டுபிடிப்பது?
இதுபோன்ற போலி ஆடியோக்களை, Adobe Audition, Audacity போன்ற audio editing மென்பொருட்களில் பதிவிறக்கி, அவற்றின் அலை வடிவங்களைப் (wave formats) பார்த்தால், அவற்றிலுள்ள ஒழுங்கின்மை அது அசலா போலியா என்பதை ஓரளவு காட்டிக் கொடுத்துவிடும்.
Unlimited High-Quality Audiobooks
Best Devotional Audiobooks
Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.
Listen DevotionalCrime Series
Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.
Discover Crime SeriesRajesh Kumar Collection
Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.
Listen Nowசைபர் தடயவியல் நிபுணர்கள் இதுபோன்ற ஆடியோக்களை வேகமாக ஓடவிட்டு, மெதுவாக ஓடவிட்டு, அவற்றின் அலை வடிவங்களைப் பார்த்து, அவற்றில் பின்னணியில் கேட்கும் ஓசைகளை வைத்தும் அது அசலா போலியா என்பதை கண்டுபிடிக்கிறார்கள்.
விதிமுறைகளும் விழிப்புணர்வும் தேவை
இதுபோன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பச் செயலிகள் இன்று மக்களிடம் பரவலாகச் சென்று சேர்ந்து இருக்கிறது. ஆனால் அவற்றைப் பயன்படுத்துவதற்கான விதிமுறைகளும், சட்டப்பூர்வமானப் பயன்பாட்டுக் கையேடும் உருவாக்கப்படவில்லை, அது மக்களுக்கும் எடுத்துச் சொல்லப்படவில்லை.
இதனால் பல இளைஞர்கள் இதுபற்றிய விழிப்புணர்வு இல்லாமலேயே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு, வழக்குகளில் சிக்கி, வாழ்க்கையைத் தொலைக்கும் சாத்தியமும் உண்டு.
அரசாங்கமும், ஊடங்களும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், deepfake, போன்றவற்றை எப்படிப் பாதுகாப்பாக, சட்ட வரையறைக்குட்பட்டுப் பயன்படுத்துவது என்பது பற்றிப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்க வேண்டும், என்று சைபர் சமூக ஆர்வலர் வினோத் ஆறுமுகம் கூறுகிறார்.
முடிவுரை
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஒரு கத்தி போன்றது. அதை நன்மைக்கும் பயன்படுத்தலாம், ஆனால் அதன் தீமைகளைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் பயன்படுத்தினால் அது அபாயகரமானது.
இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு முன் அதன் விதிமுறைகளைப் புரிந்துகொண்டு, அதை சட்டப்பூர்வமான முறையில் பயன்படுத்துவது அவசியம்.