• October 7, 2024

வித்யுலேகா ராமனின் கணவராக வரப்போகிறவர் யார் தெரியுமா?

 வித்யுலேகா ராமனின் கணவராக வரப்போகிறவர் யார் தெரியுமா?

நடிகை வித்யு ராமன் தனது சமூக ஊடகங்களில் இனிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆகஸ்ட் 26 ஆம் தேதி உடற்தகுதி மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் சஞ்சய் வத்வானியுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

ஆகஸ்ட் 26 அன்று சென்னையில் உள்ள ஒரு கோயிலில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. முறையான கொரோனா விதிமுறைகளை, சுமார் 50 நபர்களை மட்டுமே கொண்டு, இந்த விழாவை நடத்தினர்.

வித்யுலேகா மற்றும் சஞ்சய் நீண்ட காலமாக நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். மேலும் இரு குடும்பங்களும் இவர்களது திருமணத்திற்கு மகிழ்ச்சியுடன் ஆதரவு அளித்தனர். சஞ்சயின் குடும்பம் ஜவுளித் துறையை சார்ந்தவர்கள். மேலும் சஞ்சய் ஊட்டச்சத்து நிபுணராக மட்டும் இல்லாமல், சர்க்கரை இல்லாத ஐஸ்கிரீம்கள் மற்றும் சர்க்கரை இல்லாத தயாரிப்புகளை உருவாக்கும் ஒரு தொழிலதிபர். கொரோனா பிரச்னை நாடு முழுவதும் தீர்ந்த பிறகே திருமணம் செய்துகொள்வதாகவும், இரு வீட்டாரும் முடிவு செய்துள்ளனர்.

வித்யுலேகா 2012 ஆம் ஆண்டில் வெளியான ‘நீதானே என் பொன்வாசந்தம்’ திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் இவரின் நடிப்பு மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. தமிழ் மட்டும் இல்லாமல், தெலுங்கு சினிமாவிலும், பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் இவர்.