• November 14, 2024

விருப்பத்திற்கும் விலகலுக்குமான ஊசலாட்டங்கள்!

 விருப்பத்திற்கும் விலகலுக்குமான ஊசலாட்டங்கள்!

நினைவுகள் வற்றாத உன் கண்களில்
நிறைந்திருப்பது எனக்கான நேசமா?

நெருக்கம் உணர்ந்த பொழுதுகள்!
நெருஞ்சி முள்ளான காலங்கள்!!

விருப்பத்திற்கும் விலகலுக்குமான
உணர்வின் ஊசலாட்டங்கள்!!!

வெப்பத்தணலாய்… நான்!
வேட்கைக்கான அக்னிப்பிழம்பாய்…நீ!

அகலாத நினைவுகளின்
கொழுந்திட்ட தீயாக…நான்!!

என் சுவாசித்தலின்
சுடராய்…நீ!!
விலகாத…விலக்காத நின்நுதல்;

சுட்டெரிக்கும் சூரியன்!
கானலான நம் நேசங்கள்;
குளிர் நிலவு!!

நித்தம் நெருடிடும் என் மனதின்
நிஜம் நீ என்பதை அறிவிப்பாயா?