• September 13, 2024

Tags :tamil love kavithai

விருப்பத்திற்கும் விலகலுக்குமான ஊசலாட்டங்கள்!

நினைவுகள் வற்றாத உன் கண்களில்நிறைந்திருப்பது எனக்கான நேசமா? நெருக்கம் உணர்ந்த பொழுதுகள்!நெருஞ்சி முள்ளான காலங்கள்!! விருப்பத்திற்கும் விலகலுக்குமானஉணர்வின் ஊசலாட்டங்கள்!!! வெப்பத்தணலாய்… நான்!வேட்கைக்கான அக்னிப்பிழம்பாய்…நீ! அகலாத நினைவுகளின்கொழுந்திட்ட தீயாக…நான்!! என் சுவாசித்தலின்சுடராய்…நீ!!விலகாத…விலக்காத நின்நுதல்; சுட்டெரிக்கும் சூரியன்!கானலான நம் நேசங்கள்;குளிர் நிலவு!! நித்தம் நெருடிடும் என் மனதின்நிஜம் நீ என்பதை அறிவிப்பாயா?Read More

வா காதல் பெருமழையில் நனையலாம்!

மோனத்தின் வலிமைமெல்லிசையின் இனிமைஆன்மாவின் அடியாழத்தில்பேரொலியை எழுப்புகிறது! உயிரளவான என் நேசிப்பை;வாழ்தலுக்கான இருத்தலை;தொலைதூரம் சென்று தேடவில்லை… !களிப்பூட்டும் உன்குரலின்;மாயாஜாலத்தில் வாழ்கிறேன்!! பருகிப் தீர்ந்துவிடநினைக்கும் வாழ்க்கையில்,தீராத காதலைநினைவில் நிறுத்திவிடும்மாயவித்தைக்காரனே!!! இன்று நான்அருகில் வர நினைத்தாலும்சூழலின் கைதியாய்எட்டவே நிற்கிறாய்….!அதனாலென்ன…? மனங்களின் இடைவெளியைத்தகர்த்து நெருக்கிஇணைத்துவிட்ட இதயங்களுக்குதூரமும் தூறல்போலத்தான்வா காதல் பெருமழையில் நனையலாம்!!Read More

நீயே என் ஓளடதம்!!

எனக்கான உன் நினைவுகள்;வேதாளம் போல முதுகு மீதேறிஅமர்ந்து இறங்க மறுக்கின்றன…! நினைத்து புதைந்து போவதற்கானவரிகள்… எழுத்துக்கள்,லாவகமாக விரல் பிடித்துமார்பின் மீது தலை வைத்துசில்லென்ற ஸ்பரிசம் தொடுக்கின்றன…!! கண்ணீர் துளிகள்…பெருமூச்சுகள்,வாழாத வாழ்க்கையின் தேடல்கள்;யாருமற்ற தனிமையின் உணர்வுகள்;எல்லாவற்றிலும் எனதாகிப்போனவனேதூரத்தில் நின்று ஏன்வேடிக்கை பார்க்கிறாய்…?! என் பொழுதுகளைஆக்கிரமித்துக் கொள்ளும்,மறந்திருந்த…மறைந்திருந்தஉணர்வின் நினைவுகளைதட்டி எழுப்பும்… நீநீயே என் ஓளடதம்!!!Read More

இல்லறம் ஆளும் பெண்ணே!

இல்லறம் ஆளும் பெண்ணே!நீ உன் உறவுகளின் நல்லறம் கருதிஉன்னைத் தொலைப்பது ஏனோ? திருமணம் என்னும் தூண்டிலில் நீ சிக்காமல்,உன் சிறகுகளை விரித்துஉன் திறமையை நோக்கி நீ செல்.. வானவில் உன் வாழ்வில்வண்ணம் தூவதூயவள் நீயும் தலைநிமிர்ந்து செல்..!Read More

மனதின் தேடல்

இரவின் மடியில் உன்னை நினைத்தேன்என்னைத் தேடி கண்களை விழித்தேன்நிலவின் ஒளியில் பனி வீசும் பொழுதில்ஓர் நதியாய் நாளும் மிதந்தேன்மழைவீசி மலராட சிறு துளியாக என் கைகளில் சேர்ந்தாய்!Read More

மழைத்துளிகளின் நடுவே!

கட்டி இழுத்திடும்,காற்றினில் கரையாமல்…மின்சாரமாய் தாக்கும்,மின்னலில் மிரளாமல்…இருதயமுறைய இடிக்கும்,இடியினில் இடியாமல்…உயிரே…உறவாய்…உன்னைக் கண்டேனடி!மழைத்துளிகளின் நடுவே!! சனோஃபர் எழுத்தாளர்Read More