• September 9, 2024

வா காதல் பெருமழையில் நனையலாம்!

 வா காதல் பெருமழையில் நனையலாம்!

மோனத்தின் வலிமை
மெல்லிசையின் இனிமை
ஆன்மாவின் அடியாழத்தில்
பேரொலியை எழுப்புகிறது!

உயிரளவான என் நேசிப்பை;
வாழ்தலுக்கான இருத்தலை;
தொலைதூரம் சென்று தேடவில்லை… !
களிப்பூட்டும் உன்குரலின்;
மாயாஜாலத்தில் வாழ்கிறேன்!!

பருகிப் தீர்ந்துவிட
நினைக்கும் வாழ்க்கையில்,
தீராத காதலை
நினைவில் நிறுத்திவிடும்
மாயவித்தைக்காரனே!!!

இன்று நான்
அருகில் வர நினைத்தாலும்
சூழலின் கைதியாய்
எட்டவே நிற்கிறாய்….!
அதனாலென்ன…?

மனங்களின் இடைவெளியைத்
தகர்த்து நெருக்கி
இணைத்துவிட்ட இதயங்களுக்கு
தூரமும் தூறல்போலத்தான்
வா காதல் பெருமழையில் நனையலாம்!!



1 Comment

  • பெண் கவிஞர்கள் ஏன் பெரும்பாலும் காதல் குறித்த கவிதைகளையே அதுவும் அதன் தோல்வி குறித்த கவிதைகளையே எழுதுகிறார்களே என்றெண்ணி வியந்ததுண்டு.நீண்ட காலத்திற்கு பிறகுநேர்மறை எண்ணங்களுடன் ஓர் படைப்பு.மனங்களின் இடைவெளியை நொறுக்கி மகிழ்ந்திருக்கத் தயாரான மங்கையை காண மகிழ்வு.தீராத காதலை நினைவில் நிறுத்திக் களமாடல் சிறப்பு

Comments are closed.