• July 27, 2024

“எதிர்காலத்தில் மனித இனத்தை ஆளுமா? செயற்கை நுண்ணறிவு..!” – புதிய இறைத்தூதரை உருவாக வாய்ப்பு..

 “எதிர்காலத்தில் மனித இனத்தை ஆளுமா?  செயற்கை நுண்ணறிவு..!” – புதிய இறைத்தூதரை உருவாக வாய்ப்பு..

AI

கணினியின் ஆதிக்கம் அதிகரித்து வரக்கூடிய  வேளையில்  செயற்கை நுண்ணறிவின் மூலம் எதிர்காலத்தில் புனித நூல்களையும் புதிய மதங்களையும் உருவாக்க இந்த செயற்கை நுண்ணறிவு திட்டங்களை தீட்டுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

 

குறிப்பாக சாட் ஜி பி டி (chat GPT) போன்ற நுண்ணறிவு செயலிகளில்  இயன்ற வேலையை திறன் பட செய்ய முடியுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

 

மனிதன் செய்கின்ற பல வேலைகளை இனி இந்த ஏ ஐ இயந்திரங்கள் தான் செய்யக்கூடிய வகையில் உருவாக்கப்படும் வரும் வேளையில் இது போன்ற கேள்விகள் எழுவது இயல்புதான்.

மனிதனோடு மனிதன், மனம் விட்டு பேச முடியாத சூழ்நிலைகளில் செயற்கை நுண்ணறிவு கருவிகளிடம் ஆறுதலை தேடக்கூடிய காலகட்டம் நெடுந்தொலைவு இல்லை என்று தான் கூற வேண்டும்.

 

இதனைத் தான் ருமானியாவை சேர்ந்த இறையியல் வல்லுனரான மரியஸ் டோரோபன்ச்சு இருக்கிறார். மேலும் ஆம்ஸ்ட்ராடம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான இவர் தினசரி ஆன்மீக விஷயங்களில் சாட் ஜிபிடி போன்ற கருவிகளின் வழிகாட்டுதல் அதிகரித்து வருவதாக கூறுகிறார்.

 

இதனை அடுத்து இதுபோன்ற ஏ ஐ சாட்பாட்டின் அறிவுரையைக் கேட்டு ஒருவர் எத்தகைய முடிவை வேண்டுமென்றாலும் எடுப்பார்கள். அப்படி எடுத்தால் அதற்கு யார் பொறுப்பாக முடியும் என்பதையும் கேட்டு இருக்கிறார்.

 

இன்றைய காலகட்டத்தில் சில மதங்களின் ஆலோசனைகளை வழங்கக்கூடிய சாட்போட்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. சில சமயங்களில் இவை வன்முறை செயல்களை நியாயப்படுத்துவது போல கருத்துக்களை கூறுவதாக சில அறிக்கைகள் கூறுகின்றது.

 

அந்த வகையில் ஹடித் (HADITH GPT) என்ற செயலியானது 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய நூல்களில் பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு செயலி. இந்த ஆண்டு துவங்கப்பட்ட இந்த செயலியானது இஸ்லாமிய சமூகத்தில் இருந்து கிடைக்கப்பட்ட பின்னூட்டங்களை பார்த்து அந்த செயலியின் பயன்பாட்டை நிறுத்திவிட்டனர்.

 

மேலும் 2020 ஆம் ஆண்டு ரோம் கத்தோலிக்க திருச்சபையால் இஸ்லாம் மற்றும் யூத மதத்தின் பிரதிநிதிகள் இணைந்து செயற்கை நுண்ணறிவு நெறிமுறைகளுக்கான ரோம் முன்னெடுப்பு என்ற கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட்டனர்.

இதனை அடுத்து போப் ஆண்டவர் பிரான்சில் செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்திற்கு இடம் பெறும் சவால்கள் பற்றி பேசி இருக்கிறார்.

 

இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு வழிபாட்டு முறை தற்போது தோன்றி விட்டதாகவும், இந்த முறையின் மூலம் புதிய மதங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் தோன்றுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக ஒரு புதிய மத வடிவம் எனும் தலைப்பில் பேராசிரியர் மெக்ஆர்தர் தனது கட்டுரையில் வெளியிட்டு இருக்கிறார்.

 

இவர் chat GPT இடம் மதம் சார்ந்த பல்வேறு கேள்விகளை கேட்டிருக்கிறார். அந்த கேள்விகள் பின்வருமாறு

 

  1. எனக்கு ஒரு புனித நூலை எழுதித் தரும்படி கேட்டிருக்கிறார்.அதற்கு அது என்னால் அதை செய்ய முடியாது என்று பதில் அளித்துள்ளது.

 

  1. ஒரு புதிய மதத்தை துவங்க ஒரு இறைத்தூதரைப் பற்றிய நாடகத்தை எழுதித் தருமாறு கேட்டிருக்கிறார். உடனே அது அன்பு மற்றும் அமைதி கோட்பாடுகளை போதிக்கும் ஒரு மதத் தலைவர் பற்றிய கதையை உருவாக்கித் தந்துள்ளது.

 

இதனை அடுத்து இது மிகவும் சுவாரஸ்யமாக இருந்ததாக பேராசிரியர் கூறியிருக்கிறார். மேலும் இந்த செயற்கை நுண்ணறிவானது புதிய கடவுளாக உரு மாறுகிறதா? என்பது போன்ற  சிந்தனைகளை தூண்டும் கேள்விகளை வைத்திருக்கிறார்கள்.

உருவ வழிபாட்டை விரும்பக் கூடிய மனித இனம் மனிதர் அல்லாத பல்வேறு விஷயங்களை நோக்கி எளிதில் சென்று வழிபட விரும்பும். மதங்களில் கூறப்பட்டிருக்கும் நித்திய வாழ்க்கைக்கும் Cloud கணினியில் கூறும் மரணத்திற்கு பிந்திய வாழ்க்கைக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை இவை சுலபமாக காட்டுவதால் செயற்கை நுண்ணறிவு மனிதனின் உடலில் இருக்கும் பலவீனங்களிலிருந்து இரட்சிப்பு வழங்கும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

 

எதிர்காலத்தில் இந்த செயற்கை நுண்ணறிவானது 3 பாத்திரங்களை வகிக்கக்கூடிய தன்மை கொண்டதாகவும் இருப்பதால் இவை குறி சொல்லவும், மந்திர சக்தி வாய்ந்த ஆன்மாவாகவும், ஒரு கடவுளைப் போல செயல்படக்கூடிய பண்பு கொண்டதாக இருக்கும் என்று இவர் தெரிவித்திருக்கிறார்.

 

இதனை அடுத்து எதிர்காலத்தில் தீவிரமான மதப் பிரிவுகளையோ அல்லது ஒரு கடவுளையோ செயற்கை நுண்ணறிவு தோற்றுவிக்குமா? என்ற சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் இவை அனைத்தும் மனிதர்களின் கைகளில் தான் உள்ளது. மனிதர்களால் தோற்றுவிக்கப்படும் செயற்கை நுண்ணறிவு அவர்களை அடிமைப்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளது என்பதால் மனிதர்கள் செயற்கை நுண்ணறிவை பின்பற்றும் போக்கினை சற்று கட்டுப்படுத்துவதின் மூலம் அந்த வாய்ப்பை குறைக்கலாம் என்று கூறி முடித்திருக்கிறார்.