• July 27, 2024

துரோணரின் மகன் அஸ்வத்தாமா உயிரோடு உலா வருகிறாரா? – கண்ணனின் சாபம் பலித்ததா?

 துரோணரின் மகன் அஸ்வத்தாமா உயிரோடு உலா வருகிறாரா? – கண்ணனின் சாபம் பலித்ததா?

Ashwatthama

மாபெரும் இதிகாசமான மகாபாரதத்தில் கௌரவர்கள் பற்றியும், பாண்டவர்கள் பற்றியும் அதிக அளவு செய்திகளை நீங்கள் தெரிந்திருப்பீர்கள். இந்த மகாபாரதம் மர்மம் கலந்த கதைகளோடு இன்னும் மக்கள் மத்தியில் பேசப்படுகின்ற அற்புதமான புராண காவியமாக விளங்குகிறது.

 

பங்காளிகளுக்கு இடையே நடக்கின்ற சண்டை இன்று மட்டுமல்ல தொன்று தொட்டு நிகழ்ந்து வந்துள்ளது என்பதற்கு மகாபாரதத்தை ஒரு உதாரணமாக கூறலாம். மகாபாரதத்தோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு கதாபாத்திரமும் கௌரவர்களோடும், பாண்டவர்களோடும் தொடர்பு பட்ட கதாபாத்திரங்களாகவே இருக்கும்.

 

அதுமட்டுமல்லாமல் இந்த இதிகாசத்தில் பாண்டவர்கள், திரௌபதி, கௌரவர்கள் என அவர்கள் சுற்றி கதை நகர்வதால் மற்ற கதாபாத்திரங்கள் பற்றி அதிக அளவு யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

Ashwatthama
Ashwatthama

அந்த வகையில் மகாபாரத போரை நினைத்திருந்தால் ஒரே நாளில் முடித்திருக்கக்கூடிய தன்மை கொண்ட ஒரு மாவீரன் தான் இந்த அஸ்வத்தாமா. அட.. யார் இந்த அஸ்வத்தாமா என்று நீங்கள் யோசிக்கலாம்.

 

இந்த அஸ்வத்தாமா பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களுக்கு குருவாக விளங்கிய துரோணாச்சாரியாரின் புதல்வன் ஆவார். துரோணருக்கும் இவரது மனைவி கிருபிக்கும் பிறந்த அஸ்வத்தாமனின் பிறப்பு முதல் அவருடைய நெற்றியில் ஒரு ரத்தினக்கல் பதிக்கப்பட்டு இருக்கும்.

 

இந்த ரத்தின கல் இவரது சத்திக்கு மூலமாக அமைந்திருந்தது. அஸ்வத்தாமாவும் வில்வித்தை மற்றும் இதரப்போர்  கலைகளில் சிறப்பாக பயிற்சி பெற்ற ஒரு அற்புதமான போர் வீரனாகவே திகழ்ந்தான்.

 

மகாபாரதப் போரில் கௌரவர்களின் முகாமில், தந்தை துரோணரோடு இணைந்து அஸ்வத்தாமா போரிட்டு வந்தார். தன் மகனை உயிரென மதித்த துரோணாச்சாரியார், அஸ்வத்தாமா மீது அபரிமிதமான அன்பினை செலுத்தி வந்திருக்கிறார்.

Ashwatthama
Ashwatthama

இந்த நிலையில் போரின் போது அஸ்வத்தாமா இறந்து விட்டார் என்ற வதந்தியை கேள்விப்பட்ட துரோணர் தன் கைகளை துறந்து தியானத்தில் ஈடுபட்டு இருந்த சமயத்தில் திரிஷ்டட்யூமனால்  கொல்லப்பட்டார்.

 

தன் தந்தையை கொன்றவர்களை பழிவாங்க நினைத்த அஸ்வத்தாமா, மகாபாரத போரின் கடைசி இரவில் பாண்டவர்களை கொல்ல திட்டமிட்டு, அதற்கு பதிலாக திரௌபதியின் ஐந்து புதல்வர்களையும் கொன்றுவிட்டார்.

 

கடைசியாக புதல்வர்களை கொன்றது தெரிய வந்தவுடன் பாண்டவர்களை கொல்ல சக்தி வாய்ந்த ஆயுதமான பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்த முடிவு செய்து எடுத்துவிட்டார். இந்த சூழ்நிலையில் வியாசர் அஸ்வத்தாமாவை தடுத்து நிறுத்தி அந்த ஆயுதத்தை பயன்படுத்த வேண்டாம் என கேட்டு கொண்டதற்கு இணங்க அஸ்வத்தாமா எடுத்த ஆயுதத்தை திருப்பி வைப்பது நல்லதல்ல என்பதால் உத்ராவின் கருவில் இருந்த அபிமன்யுவின் பிறக்காத குழந்தையை கொல்ல ஏவினான்.

 

இதனால் பாண்டவர்களின் பரம்பரை அழிந்து விடும் என்ற நினைப்பில் அஸ்வத்தாமா இருந்தபோது, அஸ்வத்தாமனின் கோபத்தை கண்டு கண்ணன் அந்தப் பாவத்தை சுமக்கும் விதமாக அஸ்வத்தாமா உலகம் முடிவுறும் காலம் வரை இந்த பூமியை சுற்றி வலம் வர வேண்டும் என்ற சாபத்தை அளித்தார்.

 

அதுமட்டுமல்லாது அஸ்வத்தாமாவின் நெற்றியில் இருந்த அந்த ரத்தினக் கல்லை கிருஷ்ணர் எடுத்த விட்டபடியால் நெற்றியில் ஏற்பட்ட புண் ஆறாமல் உதிரம் கொட்டிய நிலையில், சாப விமோசனம் கிடைக்காமல் இன்னும் இந்த உலகத்தில் சுற்றித் திரிவதாக பலரும் கூறுகிறார்கள்.

Ashwatthama
Ashwatthama

மேலும் நெற்றியில் ஆறாத புண்  கொண்ட நோயாளி மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவரிடம் தன் புண்ணுக்கு மருந்துகளை தடவி ஆறவில்லை பல காலமாக இந்த புண் உள்ளது என்று கூறி இருப்பது மருத்துவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

மருத்துவரும் சிரித்தபடியே இந்தப் புண்அஸ்வத்தாமாவுக்கு உள்ளது போல் உள்ளது என்று சிரித்தபடி முதல் உதவி செய்ய பெட்டியை எடுத்த போது அந்த நோயாளியை காணவில்லை என மருத்துவர் கூறியிருக்கிறார்.

 

அது மட்டுமல்லாமல் புர்ஹன்பூர் என்ற இடத்தில் இருக்கக்கூடிய அசிர்கர் கோட்டையில் உள்ள சிவலிங்கத்திற்கு அஸ்வத்தாமா தினமும் வந்து மலர்களால் பூஜை செய்கிறார் என்று உள்ளூர் வாசிகள் கூறி வருகிறார்கள்.

 

மேலும் இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும் பழங்குடியினருடன் அஸ்வத்தாமா வாழ்ந்து வருவதை சிலர் கண்டுள்ளதாகவும் கூறி இருக்கிறார்கள்.