• July 27, 2024

“கண்புரை அறுவை சிகிச்சையை செய்தரா சுஷ்ருதா..!” – வியக்கும் மருத்துவ விஞ்ஞானிகள்..

 “கண்புரை அறுவை சிகிச்சையை செய்தரா சுஷ்ருதா..!” – வியக்கும் மருத்துவ விஞ்ஞானிகள்..

Sushruta

இன்று மருத்துவ உலகில் எண்ணற்ற சாதனைகளை மறுத்தவர்கள் நிகழ்த்தி இருப்பதோடு ஒரு மனிதனை அதிகபட்ச அளவு உயிர் வாழ வைக்கக்கூடிய அறுவை சிகிச்சைகளையும் மேற்கொண்டு வருவது மிகப்பெரிய விஷயமே இல்லை என்று தான் கூற வேண்டும்.

 

எந்த விதமான தொழில்நுட்ப அறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்தில் தக்க முறையில் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு அதுபோன்ற சிகிச்சைகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற அறிய கருத்துக்களை சுஷ்ருதா தனது “சுஷ்ருத சம்ஹிதா” என்ற நூலை எழுதியிருக்கிறார். இதில் ஒரு பிரதி மட்டுமே நமக்கு கிடைக்க கிடைத்துள்ளது.

Sushruta
Sushruta

சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டு இருக்கக்கூடிய இந்த நூல் 19 மற்றும் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி மருத்துவ வரலாற்று ஆசிரியர்களால் அறியப்படவில்லை. எனினும் டாக்டர் ஸ்ரீதர் திருவேதியின் கூற்றுப்படி இந்த நூலானது 184 அத்தியாயங்களை கொண்டுள்ளது.

 

மேலும் 11-க்கும் மேற்பட்ட நோய்களுக்கு 700 வகையான மருத்துவ தாவரங்கள் மற்றும் மருத்துவத் தயாரிப்புகளை பற்றிய விவரங்கள் மிகத் தெளிவாக உள்ளது குறிப்பாக நீரழிவு முதல் ஆஞ்சியோ வரை தேவையான விளக்கங்களை அன்றே தந்திருக்கிறார் என்று சொல்லலாம்.

Sushruta
Sushruta

குறிப்பாக மேற்கு வர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் கண் மருத்துவப் பேராசிரியரான டாக்டர் வி கே ராஜ் என்பவர் இந்த நூலில் கண்ணுக்கு என்று 18 அத்தியாயங்கள் இருந்ததாகவும் 76 வகையான கன் நோய்களைப் பற்றி “சுஷ்ருத சம்ஹிதா” விவரித்துள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

 

அதுமட்டுமல்ல கண் நோய்களை விவரமாக விவரித்து இருக்கும் இந்த நூல் கண்ணுக்கு பல அறுவை சிகிச்சை தேவை என்றும் குறிப்பிட்டுள்ளதாகவும் முதல் முதலில் கண் புரை அறுவை சிகிச்சையை செய்தவர் சுஷ்ருதா என்ற உண்மையை கூறியிருக்கிறார்.

 

மேலும் சுஷ்ருதா மனித உடல்களை பிரிப்பதன் மூலம் மருத்துவத்தை கற்க வேண்டும் என்று வாதிட்டதோடு, மனித கைகளையும் முதல் முதலில் அறுவை சிகிச்சை கருவி என்று கூறியதோடு பல வகையான அறுவை சிகிச்சை கருவுகளையும் உருவாக்கி இருக்கிறார்.

Sushruta
Sushruta

இந்த வகையில் இவர் கண்டுபிடித்த ஒரு கருவி கண்ணுக்குள் நுழைந்து கண் குறையை கண்ணாடி இடைவெளியில் தள்ளுவதற்கு பயன்பட்டுள்ளது. மயக்க மருந்து இல்லாத காலத்திலேயே சவால் நிறைந்த இந்த சிகிச்சையை எப்படி அவர் மேற்கொண்டு இருப்பார் என்பதை பற்றி சிந்தித்துப் பாருங்கள்.

 

இவர் கண் புரை அறுவை சிகிச்சையோடு நின்று விடாமல் பிளாஸ்டிக் சர்ஜரி என்று அழைக்கப்பட கூடிய அறுவை சிகிச்சைக்கும் அடிப்படைக் கொள்கைகளை உருவாக்கித் தந்தவர் சுஷ்ருதா என்பதை இன்றைய மருத்துவ உலகம் ஒப்புக் கொண்டுள்ளது.