கேன்சர் நோயிலிருந்து குணமடைந்த சிறுவனின் Reunion !!!

கேன்சர் நோயிலிருந்து குணமடைந்த 3வயது சிறுவன் தன்னுடன் சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்த தோழியை சந்தித்து நட்பு பாராட்டும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
கேன்சர் என்னும் நோயிலிருந்து குணமடைய உடல் வலிமையை தாண்டி மனவலிமையும் மிகவும் முக்கியமான ஒன்று. சுற்றியிருப்பவர்கள் சொல்லும் ஆறுதலான வார்த்தைகளும் அன்பான அரவணைப்பும் கேன்சர் நோயிலிருந்து குணமடைய நோயாளிக்கு ஊக்கம் அளிக்கும்.
அந்த வகையில் எந்த வித விவரமும் அறியாத 3வயது சிறுவன் தன்னுடன் சிகிச்சை பெறும் சிறுமியிடம் நட்பு மேற்கொண்டு குணமடைந்த பின் தன் தோழியை சந்தித்துள்ளது நெகிழ்ச்சி அளிக்கும் சம்பவமாக பார்க்கப்படுகிறது.

Mack Porter எனும் இந்த மூன்று வயது சிறுவன் தன் தோழியான Payson Altice- ஐ தன் சிகிச்சை முடிந்தபின் சந்திக்கும் இந்த வீடியோவானது நெட்டிசன்களால் பெரிதளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவில் இரண்டு சிறுவர்களும் Bouquet-வை மாற்றிக் கொண்டு நடனமாடி தங்களது அன்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
- Xoxo காதலர் தின சோக வரலாறு… என்ன சொல்கிறது?..
- “வாழ்க்கையில் நம்பிக்கையை தூண்டும் பொன்மொழிகள்..!” – அவசியம் படியுங்கள்..
- “Google-ளின் 25 ஆவது பிறந்தநாள்..!” – கலக்கலான கொண்டாட்டம்..
- லோம ரிஷி குகை எங்கு உள்ளது.. தெரியுமா?.. சிறப்புக்கள் என்னென்ன?..
- “கைகளுடன் கூடிய அதிசய மீன் இனம்..!” – ஆஸ்திரேலியா கடற்கரையில் பரபரப்பு..
கேன்சர் நோயிலிருந்து குணம் அடைந்துள்ள இந்த இரண்டு சிறுவர்களுக்கும் உலகமெங்கும் உள்ள நெட்டிசன்கள் சமூக வலைதளங்கள் மூலமாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இரண்டு சிறுவர்களும் நட்பு பாராட்டி மகிழும் Cute ஆன வீடியோவை கீழே காணுங்கள்.
இது போன்ற சுவாரசியமான பதிவுகளுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள் !!