
வாடகை பணத்தை ஒழுங்காக கொடுக்கவில்லை என்றால் வாடகைக்கு குடியிருப்போருக்கும் வீட்டின் உரிமையாளருக்கும் இடையே பிரச்சனைகள் வருவது சகஜம். ஆனால் லண்டனில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.
லண்டனில் உள்ள ஒரு வீட்டிற்கு குடியிருப்பதற்கான ஒப்பந்தம் மட்டுமே போட்டுக்கொண்டு 12 மாதங்கள் வாடகையே கொடுக்காமல் ஒரு நபர் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அவருக்கும் வீட்டின் உரிமையாளருக்கும் இடையே பலமுறை வாக்குவாதங்களும் சலசலப்பும் ஏற்பட்டு வந்தது. திடீரென ஒரு நாள் வீட்டில் குடியிருக்கும் அந்த நபர் வீட்டை காலி செய்து புறப்பட்டுவிட்டார்.
வீட்டின் நிலையை மேற்பார்வையிட வந்த வீட்டு உரிமையாளருக்கு ஒரு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அந்த வீட்டில் குடியிருந்த வாடகை கொடுக்காத நபர், வீடு முழுக்க குப்பைகளை நிரப்பி வைத்துவிட்டு வீட்டை காலி செய்துள்ளார்.

உரிமையாளர் வீட்டிற்குள் சென்று பார்க்கும்போது அந்த வீட்டில் 8000 பியர் பாட்டில்கள் இருந்துள்ளது. அதுமட்டுமின்றி அழுகிய நிலையில் நிறைய உணவு குப்பைகளும் வீட்டில் இருந்துள்ளது. இதைப் பார்த்த வீட்டின் உரிமையாளர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
Unlimited High-Quality Audiobooks
Best Devotional Audiobooks
Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.
Listen DevotionalCrime Series
Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.
Rajesh Kumar Collection
Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.
Listen Nowகழிப்பறைக்கு சென்று பார்க்கும்போது ஒருமுறை கூட அந்த கழிப்பறையை வீட்டில் தங்கி இருந்தவர் உபயோகித்துவிட்டு Flesh செய்யவில்லை என்பது தெரிய வந்துள்ளது. வீட்டின் எந்த ஒரு இடத்திலும் சுலபமாக கால் வைக்கவே முடியாத அளவிற்கு குப்பைகளும் கழிவுகளும் சேர்ந்து இருந்ததாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
- அதிர்ச்சியான ஒரு வரலாறு இது! கேரளாவில் பெண்கள் இப்படி தான் இருந்தார்களா? யார் இந்த நாயர்கள்?
- முடவாட்டுக்கால் கிழங்கு: மலைவாசிகளின் அற்புத மருத்துவ கருவூலம் – உங்கள் வாழ்வை மாற்றும் அற்புதக் கிழங்கின் ரகசியம் என்ன?
- தர்பூசணி விதைகளின் அற்புத மருத்துவ குணங்கள் – நீங்கள் அறியாத பலன்கள்!
- கல்மா என்றால் என்ன? பஹல்காம் பயங்கரவாதிகள் பாதிக்கப்பட்டவர்களிடம் ஓதச் சொன்னது எது? இஸ்லாத்தில் அதன் முக்கியத்துவம் என்ன?
- சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து – பாகிஸ்தானின் பொருளாதாரம் நிலைகுலையுமா?
தங்கியிருந்தவர் கொடுக்காத வாடகையும், வீட்டை சீரமைக்க தேவைப்படும் தொகையையும் கணக்கிட்டுப் பார்த்தால் வீட்டு உரிமையாளருக்கு ஏறத்தாழ 12,000 யூரோக்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என கணித்துள்ளனர். இந்திய ரூபாய் மதிப்பின் படி வீட்டு உரிமையாளருக்கு 12 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
அந்த லண்டன் வீட்டில் இருந்த குப்பைகளை கீழுள்ள வீடியோவில் காணுங்கள்.
இது போன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழ் உடன் இணைந்திருங்கள் !!