வைரலாகும் Miranda பாணி பூரி !!!
இந்தியா பல்வேறு கலாச்சாரங்களின் பூமி, ஆனால் உண்மையில் நம் அனைவரையும் ஒன்றாக இணைப்பது ஒவ்வொரு மாநிலத்தின் உணவு பழக்கங்களே. பல்வேறு வகையான உணவுகள் கிடைப்பதாலும் உணவு ஆர்வலர்கள் மற்றும் பதிவர்களின் வருகையாலும் நம் நாடு வித்தியாசமான உணவுகளின் சங்கமமாக கருதப்படுகிறது.
கடந்த 2021-ஆம் ஆண்டில் Fanta Maggi, ஃபயர் மோமோ, ஓரியோ பக்கோடா, டிக்கி ரசகுல்லா போன்ற பல்வேறு வினோதமான உணவு வகைகள் சமூக வலைத்தளங்களில் trend ஆனது. இந்த அனைத்து உணவுப் பொருட்களை குறித்த பதிவுகளும் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்தது.
அந்த வினோதமான உணவுப் பொருட்களைப் போலவே, தற்போது ஜெய்ப்பூரை சேர்ந்த ஒருவர் மிராண்டா கோல்கப்பாஸ் தயாரிக்கும் மற்றொரு வீடியோ ஆன்லைனில் வைரலாகி வருகிறது. சாத்தூர் பிரதர்ஸ் எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த மிராண்டா கோல்கப்பாஸ் தயாரிப்பவரின் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.
இந்தப் பாணி பூரி கடைக்காரர் மிராண்டா பாட்டிலை நன்றாக குலுக்கி தான் வைத்திருக்கும் பாணி பாத்திரத்தில் ஊற்றும் வீடியோ அடங்கிய இன்ஸ்டாகிராம் பதிவை கீழே காணுங்கள்.
இந்த வீடியோவின் caption-ல் குறிப்பிட்டபடி இந்த வினோத உணவு வகை ஜெய்ப்பூரில் விற்பனை செய்யப்படுகிறதாம். இந்த வீடியோவை 30 லட்சத்திற்கும் மேற்பட்ட நெட்டிசன்கள் கண்டுகளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோவை பார்த்த பலரும் இது ஒரு முட்டாள்தனமான செயல் என தங்களது ஆக்ரோஷமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மிரண்டா வில் பாணி பூரியை நனைத்து சாப்பிட்டால் அது அவ்வளவு நன்றாக இருக்காது என்பதே இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் கூறும் கருத்து.
- சுனாமியை முன்கூட்டியே கணித்த பண்டைத் தமிழர்கள்!
- இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வீரப்பெண் – கடலூரின் வேலுநாச்சியார் அஞ்சலை அம்மாள் வாழ்க்கை வரலாறு தெரியுமா?
- மதுரை மீனாட்சி கோவிலின் மறைந்திருந்த வரலாறு: 400 கல்வெட்டுகள் வெளிப்படுத்தும் அதிரடி தகவல்கள் என்ன?
- உலகின் மிகவும் பிரபலமான பானம் காபி: நீங்கள் அறியாத அதிசயங்கள் என்னென்ன?
- உகாண்டாவின் கொடூர ஆட்சியாளர் இடி அமீன்: 5 மனைவிகள், 40 குழந்தைகள் – அவரது வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சி தரும் உண்மைகள் என்ன?
என்னதான் நெட்டிசன்கள் காரசாரமாக இந்த வீடியோவுக்கு கருத்து தெரிவித்து வந்தாலும் இந்த மிராண்டா பானி பூரியை சுவைக்கவும் ஜெய்ப்பூரில் குறிப்பிட்ட மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்பகுதி மக்கள் இந்த பானி பூரியை விரும்பி சாப்பிடுவது கூட இதை விற்க காரணமாக இருக்கலாம்.
இது போன்ற தகவல்களுக்கு தீப் டாக்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்.
1 Comment
Very nice website and also I like your voice bro
Comments are closed.