Jogging செய்வதால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா !!!

ஜாகிங் (Jogging) என்பது ஒரு நிலையான மற்றும் மெதுவான வேகத்தில் ஓடுவதாகும். ஜாகிங் செய்வதால் பல நன்மைகள் உண்டு. ஜாகிங்கின் முக்கிய நோக்கம் உடலுக்கு அதிக சிரமத்தை ஏற்படுத்தாமல் உங்களது உடலை பராமரிப்பதாகும்.
ஜாக்கிங் செய்வதால் ஏற்படும் பத்து நன்மைகளை பற்றிய பதிவுதான் இது.
ஜாகிங் உடல் எடையை குறைக்க உதவுகிறது
அரை மணி நேரம் ஜாகிங் செய்தால் சுமார் 300 கலோரிகளை எளிதில் எரிக்கலாம். நடைபயிற்சி செய்வதைவிட ஜாகிங் செய்வதே எடையை குறைக்க சிறந்த வழியாகும். முறையான டயட்(Diet) மேற்கொண்டு ஜாகிங் செய்து வந்தால் உடல் எடையை எளிதில் குறைக்கலாம். எடையை குறைப்பது மட்டுமின்றி சீரான எடையை பராமரிக்கவும் ஜாகிங் உதவுகிறது.
எலும்புகளை மேம்படுத்துதல்
ஜாகிங் செய்வது மூலம் எலும்புகளின் ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது. நீங்கள் ஜாகிங் செய்யத் தொடங்கும்போது உங்களது எலும்புகள் சிறிதளவிலான அழுத்தத்தையும் சுமையையும் பெறுகிறது. இந்த அழுத்தத்தை தங்குவதற்கு உங்களது எலும்புகள் தயாராகும்போது உங்கள் எலும்புகள் பலப்படுகிறது. ஜாகிங் செய்வது எலும்பின் அடர்த்தியை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதில் இருந்தும் நம்மை காப்பாற்றுகிறது.
தசைகளை வளர்க்க உதவுகிறது
ஜாக்கிங் உங்கள் உடலின் தசைகளை வளர செய்வதன்மூலம் உடலை சீராக வைத்திருக்க உதவுகிறது. தொடர்ந்து ஜாகிங் செய்யும்போது தொடை எலும்புகள் ஒரு முறையான வடிவம் பெற்று உடலுக்கு மேலும் பலம் ஊட்டுகிறது.

மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்
ஒரு நபரின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் ஜாகிங் முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் ஜாக் செய்யும்போது உங்கள் உடல் எண்டோர்பின்கள் எனப்படும் ஹார்மோன்களை வெளியிடுகிறது. இது உங்கள் உற்சாகத்தை உயர்த்த உதவுகிறது. அதுமட்டுமின்றி உங்களைப் பற்றி நேர்மறையான உணர்வை உங்களுக்கே ஏற்படுத்துகிறது. ஜாகிங் செய்து முடித்ததற்கு பிறகு நீங்கள் அமைதியாகவும் புத்துணர்ச்சியாகவும் உணர்வீர்கள்.
இதயத்திற்கு நல்லது
ஜாகிங் என்பது உங்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஒரு சிறந்த இருதய பயிற்சியாகும். இதய பிரச்சனைகள் மற்றும் நோய்கள் வராமல் இருக்க உதவுகிறது. ஜாக்கிங், இதயத்திற்கு ரத்த ஓட்டம் வேகமாக செலுத்தப்படுவதை உறுதி செய்கிறது. இதனால் ரத்த அழுத்தம் அளவுக்கு மீறி கூடாமலும் குறையாமலும் பராமரிக்கப்படுகிறது. ஜாக்கிங் செய்வதால் கொலஸ்ட்ரால் மற்றும் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு கட்டுக்குள் இருக்கும்.
சுவாச மண்டலத்தை சீராக்குகிறது
மற்ற ஏரோபிக் workout-களை போலவே ஜாகிங் நுரையீரல் திறனை அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி சுவாச மண்டலத்தின் தசைகளை பலப்படுத்துகிறது. நுரையீரல் அதிக ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்வதையும், கார்பன் டை ஆக்சைடை திறம்பட அகற்றுவதையும் ஜாகிங் உறுதிசெய்கிறது. இதனால் சுவாச தசைகளின் சகிப்புத் தன்மை மேம்படுகிறது.
தொற்று நோய்கள் வராமல் தடுக்கிறது
ஜாகிங் உடலில் தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் லிம்போசைட்டுகள் மற்றும் மாக்ரோஃபேஜஸ் ஆகியவற்றின் உற்பத்தியை தூண்டுகிறது. இது காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் ஆகியவை நம் உடலை தாக்காமல் இருக்க உதவி செய்கிறது.
மன அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது
ஜாகிங் மனதை அமைதிப்படுத்தவும் உதவுகிறது. மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் குறைப்பதோடு தேவையற்ற எண்ணங்களில் இருந்தும் மனதை ஜாகிங் தள்ளி இருக்க வைக்கிறது.
வயதை குறைத்துக் காட்டுகிறது
ஜாகிங் உங்கள் சருமத்தை புத்துணர்ச்சியுடனும் இளமையுடனும் வைத்திருக்க உதவுகிறது. ஜாகிங் செய்வதால் சருமத்திற்கு அதிக ஆக்ஸிஜன் மற்றும் ரத்தம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் நீண்ட நாட்கள் இளமையாக இருக்கலாம்.
நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குகிறது
ஜாகிங் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் மன நலத்தையும் மேம்படுத்துகிறது. நம்மை வலிமையாக்கி, மன சோர்வு மற்றும் மன அழுத்தத்தை எதிர்த்து போராட ஜாகிங் உதவுகிறது. இதனால் வெள்ளை அணுக்களின் உற்பத்தி உடலில் அதிகரித்து நோய்களை எதிர்த்து போராடும் சக்தி உருவாகிறது.

மனிதன் நீண்ட நாட்கள் உயிர்வாழ ஜாகிங் செய்வது ஒரு சிறந்த வழியாகும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த பதிவை படிக்கும் நீங்களும் உங்கள் வாழ்வில் ஜாகிங் செய்து வலிமையை பெறுமாறு Deep Talks தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
- 1999-க்குப் பின்னர் இந்திய அளவில் மிக மோசமான ரயில் விபத்து இதுதான்!
- பொன்னியின் செல்வன் முழு கதை | Ponniyin Selvan Full Story
- Ponniyin Selvan Story Part 05 – பொன்னியின் செல்வன் பாகம் 5
- Ponniyin Selvan Story Part 04 – பொன்னியின் செல்வன் பாகம் 4
- Ponniyin Selvan Story Part 03 – பொன்னியின் செல்வன் பாகம் 3
இது போன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.