• October 5, 2024

1000 வருடங்களுக்கும் மேல் இயங்கி வரும் உணவகம் !!!

 1000 வருடங்களுக்கும் மேல் இயங்கி வரும் உணவகம் !!!

எந்த தொழிலாக இருந்தாலும் குறிப்பிட்ட தலைமுறைக்கு மேல் அது நிலைத்திருக்க கடும் உழைப்பும் ஆர்வமும் தேவை. அந்த வகையில் உலகிலேயே மிகப் பழமையான உணவகத்தை பற்றிய பதிவுதான் இது.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் ஒரு Hotel இயங்கிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது நம்பும்படியாக இருக்காது. ஆனால் உண்மையிலேயே ஜப்பானில் அப்படி ஒரு உணவகம் இருக்கிறது. நிஷியாமா ஒன்சன் கெயுன்காண் எனும் உணவகம் ஜப்பானில் உள்ள Mount Fuji-ல் கி.பி 205 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இயங்கி வருகிறது.

Japan Hotel

ஒரே குடும்பத்தை சேர்ந்த 52 தலைமுறையினர் இந்த ஹோட்டல் தொழிலை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்த உணவகமானது உலகிலேயே மிகப் பழமையான உணவகம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி இந்த உணவகம் கின்னஸ் சாதனைகள் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.

1316 ஆண்டுகளுக்கு முன் பியூஜிவாரா மோஹிட்டோ என்பவரால் இந்த உணவகம் தொடங்கப்பட்டது. இந்த உணவகத்தை சுற்றி அமைந்துள்ள இயற்கை காட்சிகளும், எழில் கொஞ்சும் சுற்றுச்சூழலும் தான் இந்த உணவகத்திற்கு மக்கள் அதிகம் வர காரணமாக இருந்து வருகிறது. இந்த உணவகத்தில் 37 அறைகள் உள்ளது. அனைத்து அறைகளும் ஜப்பானின் பாரம்பரிய கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டிருக்கும்.

Japan Hotel

ஒரு இரவு இந்த ஹோட்டலில் தங்க இந்திய ருபாய் மதிப்பின்படி குறைந்தது 35 ஆயிரம் ரூபாய் செலவாகும். இரண்டு மூன்று தலைமுறைகளாக ஒரு தொழிலைத் தொடர்ந்து செய்தாலே அதை பெரிதாக என்னும் இக்காலத்தில், ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் ஒரு குடும்பம் ஒரே தொழிலை தொடர்ந்து செய்து வருவது உலகில் உள்ள அனைவருக்குமே வியப்பளிக்கும் விஷயமாக இருக்கிறது.

இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு Deep Talks Tamil உடன் இணைந்திருங்கள்.