• July 27, 2024

“எண்ணெய் குளியல் போலவே கல் உப்பு குளியல்..!” – கிடைக்கும் அற்புத நன்மைகள்..

 “எண்ணெய் குளியல் போலவே கல் உப்பு குளியல்..!” – கிடைக்கும் அற்புத நன்மைகள்..

Salt Bath

நாம் அன்றாடம் சாதாரண நீரில் குளிப்பதை போலவே ஒவ்வொரு சனிக்கிழமையும் எண்ணெய் தேய்த்து குளிப்பதை நம் முன்னோர்கள் வழக்கமாகக் கொண்டிருந்ததால் தான் சனி நீர் ஆடு என்ற சொற்றொடரே ஏற்பட்டது என்று கூறலாம்.

எண்ணெய் தேய்த்து குளிப்பது உடலுக்கு எவ்வாறு ஆரோக்கியத்தை தருகிறதோ, அது போல நீங்கள் குளிக்கும் நீரில் கல்லுப்பு கலந்து குளித்து வந்தால் உடலுக்கு பல வகையான நன்மைகள் ஏற்படும் என்பது பலருக்கு தெரியாது.

Salt Bath
Salt Bath

இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் வீட்டில் சமையல் அறையில் பயன்படுத்தப்படும் கல் உப்பு போதுமானது. இந்த கல் உப்பு அயோடைஸ் உப்பாக இல்லாமல் சாதாரண உப்பாக இருந்தால் மேலும் சிறப்பானது.

கல் உப்பில் மெக்னீசியம், கால்சியம், ஜிங்க், இரும்பு பொட்டாசியம் போன்ற மினரல்கள் அதிக அளவு காணப்படுகிறது. எனவே இந்த கல் உப்பை நீங்கள் குளிக்கும் நீரில் சிறிதளவு போட்டுக் குளிப்பதால் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.

அதுவும் நீங்கள் குளிக்க கூடிய நீர் சூடாக இருக்கும் சமயத்தில் கல் உப்பை போட்டு குளிப்பதால் எண்ணற்ற பயன்கள் கிடைக்கும். இந்த நீரில் நீங்கள் குளிக்கும் போது ஆரோக்கியமான பளபளப்பான சருமத்தை பெறலாம் சரும வியாதிகள் அண்டாது.

Salt Bath
Salt Bath

உடலில் ரத்த ஓட்டம் சீராகவதால் தசைகள் பொலிவாகும்.தசைகள் லேசாகவும் மாறி உடலுக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். உங்கள் உடலில் காயம் மற்றும் சரும பாதிப்புகள் இருந்தால் நீங்கள் கல்லுப்பை பயன்படுத்த வேண்டாம் அவ்வாறு இல்லையெனில் நீங்கள் இந்த குளியளை மேற்கொள்ளலாம்.

வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ இந்த கல்லுப்பு குழிகளை மேற்கொள்ளும் போது உங்கள் உடலில் இருக்கக்கூடிய நுண்ணுயிர் தொற்றுகள் நீங்கிவிடும்.

எனவேதான் நமது முன்னோர்கள் ஆரம்ப காலத்தில் கடலில் குளிப்பதை வருடத்திற்கு ஒரு முறையாவது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்கள்.

Salt Bath
Salt Bath

எனவே நீங்களும் உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும் உங்களுக்கும் வாரத்தில் ஒருமுறை ஒரு பிடி அளவு உப்பை எடுத்து நீரில் நன்கு கலந்து குளித்து வந்தால் மேற்கூறிய உபாதைகளில் இருந்து விடுதலை பெறலாம்.

மேலும் கல் உப்பானது உங்கள் எண்ண ஓட்டத்தை மாற்றி நேர்மறை ஆற்றலை அதிகரிக்க கூடிய சக்தி கொண்டது, என்பதால் உங்கள் மனதை எப்போதும் புத்துணர்வோடு வைத்துக் கொள்ள இந்த கல் உப்பு குளியல் கட்டாயம் உதவி செய்யும்.