• September 12, 2024

 “தலையில் இரட்டை சுழி.. இருந்தால் என்ன?” – அறிவியல் சொல்லும் உண்மை..

  “தலையில் இரட்டை சுழி.. இருந்தால் என்ன?” – அறிவியல் சொல்லும் உண்மை..

Rettai Suzhi

பொதுவாகவே தலையில் ஒரு சுழி யோடு இருப்பவர்கள் அதிகம் இருப்பார்கள். இதையும் தாண்டி இரண்டு சுழிகளோடு இருக்கக்கூடிய நபர்களை நீங்கள் காணலாம்.

உலகில் நடந்த ஆய்வு அறிக்கையின்படி உலக மக்கள் தொகையில் சுமார் ஐந்து சதவீதம் பெயருக்கு இரட்டை சுழி உள்ளதாக என்ஹெச்ஜிஆர்ஐ (NHGRI) ஆய்வுகள் தெரிவிக்கிறது.

இரட்டை சுழியோடு இருக்கக்கூடியவர்கள் அதிகமாக குறும்புகள் செய்வார்கள். இவர்களுக்கு இரட்டை திருமணம் நடக்கும் என்றெல்லாம் பேச்சுக்கள் என்றளவும் இந்த சமூகத்தில் நிலவி வருகிறது.

Rettai Suzhi
Rettai Suzhi

இது உண்மையா? இந்த இரட்டை சுழியின் பின்னணி என்ன? இதற்கு ஏதேனும் அறிவியல் காரணங்கள் உள்ளதா? என்பது பற்றி விவரமாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

மிக அரிதாக ஏற்படுகின்ற இந்த இரட்டை சுழிக்கு அறிவியலின் படி மரபணுவே காரணமாக உள்ளது. இந்த இரட்டை சுழி இருக்கும் நபர்களின் தாத்தா, பாட்டி அல்லது அவர்களுக்கு முன்னவர்களுக்கும் இது போன்ற இரட்டைச் சுழி இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அறிவியல் கூறுகிறது.

இரட்டை சுழி உள்ளவர்களுக்கு இரண்டு திருமணம் நடக்கும் என்பதெல்லாம் உண்மை அல்ல. அதற்கு எந்தவிதமான ஆதாரமும் கூறப்படவில்லை.

Rettai Suzhi
Rettai Suzhi

ஜாதக கூற்றின்படி இரட்டை சுழி இருப்பவர்கள் எதையும் நேரடியாக பேசக்கூடிய தன்மையோடும், பொறுமையாகவும், அன்போடும் இருக்கக்கூடிய குணங்கள் நிறைந்தவர்களாக இருப்பார்கள்.

தன்னைச் சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும், என்பதில் இரட்டைச் சுழி உள்ளவர்கள் கண்ணும் கருத்துமாக இருப்பதோடு அதை செயல்படுத்தக்கூடிய சிறப்பான நபர்களாக இந்த சமுதாயத்தில் இருப்பார்கள்.

எனவே இரட்டை சுழி பற்றி கூறப்பட்டு வரும் கருத்துக்கள் அறிவியல் பூர்வமாக இன்று வரை நிரூபிக்க படாத ஒன்றாகவே உள்ளது.

Rettai Suzhi
Rettai Suzhi

உண்மையில் அறிவியல் கூற்றுப்படி சில மரபியல் காரணங்களால் தான் இந்த இரட்டைச் சுழி ஏற்படுகிறது என்ற உண்மையை உணர்வது கட்டாயமாகும்.

அப்படி நீங்கள் உணரும் பட்சத்தில் அவர்களது குணங்கள் தெரியாமல் நீங்கள் சொல்லக்கூடிய கருத்துக்களுக்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லாததால், அதிக சேட்டைகளில் ஈடுபடுவார்கள், இரண்டு திருமணம் நடக்கும் என்பது எல்லாம் கற்பனையானது என்று கூறலாம்.

எனவே இனியாவது இந்த உண்மையை உணர்ந்து கொண்டு இரட்டை சுழி இருப்பவர்களை பார்த்து இரட்டை சுழியா? என்று ஆச்சரியத்தோடு பார்ப்பதை விடுத்து அவர்களும் நம்மில் ஒருவரே என்று எண்ணுங்கள்.