• July 27, 2024

யார் இந்த மூசிக? உண்மையில் விநாயகர் வதம் செய்த அரக்கனா?

 யார் இந்த மூசிக? உண்மையில் விநாயகர் வதம் செய்த அரக்கனா?

Mooshika

உலகிற்கு முதல் முதற்கடவுளாக திகழுகின்ற விநாயகர் பெருமானின் வித்தியாசமான முகத்தோற்றம் பலரையும் ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வணங்கும் தெய்வங்களின் மிக முக்கியமான தெய்வமாக விநாயகர் விளங்குகிறார்.

இவரை துதிக்கும்போது மூஷிக வாகன என்ற ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபடாதவர்களை இல்லை எனக் கூறலாம். பொதுவாகவே எல்லா கடவுளுக்கும் ஒரு வாகனம் இருக்கும். சிவனை எடுத்துக் கொண்டால் காளையும், பெருமாளுக்கு கருடனும், சக்திக்கு சிங்கம் என பல தெய்வங்களுக்கு பல வகையான வாகனங்கள் வரையறுக்கப்பட்டு உள்ளது.

Mooshika
Mooshika

அப்படி இருக்கக்கூடிய பட்சத்தில் மிகத் பெரிய உருவமாக இருக்கக்கூடிய விநாயகருக்கு ஒரு சிறு மூஞ்சூறு எப்படி வாகனமானது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

யானை முகத்தோடு தலையில் இரண்டு கொம்புகள் உடைய கஜமுகாசுரன் என்ற அசுரனின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் கஜமுகசுரனின் அசுர குருவாகிய சுக்ராச்சாரியாரின் போதனைப்படி சிவபெருமானின் திருநாமத்தை சொல்லிக் கொண்டு பல காலம் கடுமையான தவம் இருந்து தனக்கு எந்த ஒரு ஆயுதத்தாலும் மரணம் நேரிடக்கூடாது என்ற வரத்தை பெற்றான்.

Mooshika
Mooshika

அதுமட்டுமல்லாமல் வஞ்சகத்தாலும் தனக்கு எதிரிகளின் சூழ்ச்சி மூலம் மரணம் ஏற்பட்டாலும் மறுபிறவி இருக்கக் கூடாது என்ற மிக அரிய வரத்தை சிவபெருமானிடம் இருந்து பெற்றுக் கொண்டான்.

இந்த வரத்தை பெற்ற பின் கஜமுகசுரர் மதங்காபுரம் என்ற நகரத்தை உண்டாக்கி சீரும் சிறப்புமாக ஆட்சி செய்ததோடு தேவர்களையும், முனிவர்களையும் விட்டு வைக்காமல் அனுதினமும் கொடுமைப்படுத்தினான்.

தேவர்கள் அனைவரும் அந்த அசுரனை மூன்று வேளை ஆயிரம் முறை தொட்டு தோப்புக்கரணம் போட வேண்டும் என்று கட்டளை இட்டார். இதனை அடுத்து கஜமுகசுரனின் கொடுமைகளை பொறுத்துக் கொள்ளாத முனிவர்கள் விநாயகரை வணங்கி காக்கும் படி கேட்டுக் கொண்டார்கள்.

Mooshika
Mooshika

அந்த வகையில் விநாயகப் பெருமானுக்கும் அசுரனுக்கும் போர் மூண்டது. விநாயகர் தனது அம்புகளால் கஜமுகசுரனின் படைகளை திக்கு முக்காட வைத்ததோடு நொடியில் அழித்தெறிந்தார். இதனால் கஜமுகாசுரன் படைக்கு மிகப் பெரிய பின் அடைவு ஏற்பட்டது. எனினும் எந்த ஒரு ஆயுதத்தாலும் கஜமகாசுரனை அழித்து விநாயகப் பெருமானால் வெல்ல முடியவில்லை.

இதை அடுத்து விநாயகப் பெருமான் எந்த ஒரு ஆயிரத்தைக் கொண்டும் கஜமுகசுரனை அழிக்க முடியவில்லையே என்று சிந்தனை செய்யும் போது சிவபெருமான் அவனை எந்த ஒரு ஆயுதத்தாலும் அழிக்க முடியாது என்று கூற விநாயகப் பெருமான் தனது வலது தந்தத்தை உடைத்து கஜமுகசுரனை வதம் செய்தார்.

Mooshika
Mooshika

இதனை சற்றும் எதிர்பாராத கஜமுகன் மூஷிக அவதாரம் எடுத்து மூஞ்சூறு போல் மாறினார். இந்த மூஞ்சூறுவை விநாயகப் பெருமான் தனது ஞானக்கண்ணால் பார்க்க அவை விநாயகரின் பாதத்தில் சரணாகதி அடைந்தது. இதனை அடுத்து தான் மூசிகனை தனது வாகனமாக விநாயகர் ஏற்றுக்கொண்டார்.

இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் யார் இந்த முஞ்சிகன் என்று. எப்படி பிள்ளையாருக்கு வாகனமாக மாறினார் என்ற விஷயம்.