• November 8, 2024

“நடுவானில் காணாமல் போன மலேசிய விமானம் எம் எச் 370..!” – திரில்லர் படங்களை மிஞ்சும் மர்மம்..

 “நடுவானில் காணாமல் போன மலேசிய விமானம் எம் எச் 370..!” – திரில்லர் படங்களை மிஞ்சும் மர்மம்..

MH 370

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகரை நோக்கி செல்லும் மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் போயிங் 777 விமானம் மலேசியா ஏர்லைன்ஸ் பிளைட் 370, 236 பயணிகளோடு கிளம்ப தயாரானது.

இந்த விமானத்தை செலுத்தும் பைலட் சகரியா அகமதுஷா 53 வயது நிறைந்தவர். சுமார் 18,000 மணி நேரம் விண்ணில் பறந்து நல்ல பணி அனுபவத்தை பெற்றிருந்தவர். இவருடன் துணை பயிலாட்டாக பரீக் அப்துல் கமீது 22 வயது நிரம்பிய இளம் பைலட்.

MH 370
MH 370

இந்த விமானம் சீனாவிற்கு போவதற்கு பதிலாக எங்கே செல்கிறது, நாம் எங்கே போகிறோம் என்று தெரியாமல் அனைவரும் சந்தோஷமாக இந்த விமானத்தில் ஏறி இருந்தார்கள். விமானம் கோலாலம்பூரை விட்டு கிளம்பி தெற்கு சீன கடல் பகுதியில் வானில் பறக்க ஆரம்பித்தது.

மலேசிய விமானிகள் இடமிருந்து தரைக்கட்டுப்பாட்டு மையத்திற்கு சிக்னல்கள் வந்து கொண்டு இருந்தது. ஆனால் கடைசியாக மலேசியா எல்லையை கடந்து வியட்நாம் பகுதிக்குள் நுழையும் போது குட்பை எம் ஏ என்று பைலட் கடைசியாக சொன்ன வார்த்தைகளுக்குப் பிறகு விமானம் வியட்நாமுக்குள் புகுந்து இருக்க வேண்டும்.

ஆனால் அங்கு தான் அதிர்ச்சி நிறைந்திருந்தது. நடுவானில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. வியட்நாம் தரைக்கட்டுப்பாட்டு பகுதிக்கும் எந்தவிதமான தொடர்பும் விமானத்தைப் பற்றி கிடைக்கவில்லை.

MH 370
MH 370

இதனை அடுத்து வியட்நாமில் இருந்து மலேசியாவிற்கு தகவல் பறந்த போதும் மலேசியா எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் விமானத்தை தேட ஆரம்பிக்கிறது.

அதிகாலை 6:00 மணி அளவில் பீஜிங் நகரம் சென்றடைய வேண்டிய விமானம், அந்த நகரத்திற்கும் போய் சேரவில்லை. பயணிகளுக்காக அவரது உறவுகள் காத்துக் கொண்டிருக்க விமானம் என்ன ஆனது என்று தெரியாமல் அனைவரும் தவிர்த்து இருந்தார்கள்.

காலை 8 மணிக்கு பிறகு இனி விமானம் வராது என்று உணர்ந்து கொண்டவர்களுக்கு, தொலைக்காட்சிகளில் வந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH470 விண்ணில் மாயம் என்ற செய்தி தான் அது.

MH 370
MH 370

இதனை அடுத்து நான்கு நாட்களுக்குப் பிறகு சீன கடல் பகுதியில் விமானத்தை தேட ஆரம்பிக்கிறது. மலேசியா  பல மணி நேரம் நடந்த தேடலில் இந்த விதமான தடயமும் சிக்கவில்லை.

இதை அடுத்து தான் அவர்கள் ஒன்றை கண்டுபிடித்தார்கள். அதாவது விமானத்திற்கும் தரைக்கட்டுப்பாட்டு தொடர்புக்கும் Transponder போன்ற கருவி மூலம் தான் தொடர்பு கொள்வார்கள். இதை யாராவது நிறுத்தினால் தான் இப்படி நடக்கும்.

ரேடார் கண்ணில் மாயமாய் மறைந்து விட்ட இதனை சாதாரண ரேடார் மூலம் கண்டுபிடிக்க முடியாதால், ராணுவ ரேடார் மூலம் மட்டும் தான் தேடி கண்டுபிடிக்க முடியும் என்று மலேசிய அரசு முடிவு செய்து ராணுவ ரேடாரை கொண்டு தேட ஆரம்பித்தது.

MH 370
MH 370

ரேடார் கண்டுபிடிக்காத நிலையில் சாட்டிலைட்டின் உதவியை நாடி சேட்டிலைட்டை கொண்டு கண்டுபிடிக்க முயற்சி செய்த போது அந்தமானை ஒரு சுற்றி விட்டு தெற்கு புறம் உள்ள தீவுகளை தாண்டி இந்து மகா சமுத்திரம் நோக்கி ஆஸ்திரேலியாவை நோக்கி பறந்தது உறுதியானது.

சீனாவிற்கு செல்ல வேண்டிய விமானம் ஏன் இந்து மகா சமுத்திரத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்று அனைவரும் தலையை பிய்த்து கொண்டார்கள். பிறகு சர்வதேச தேடல் ஆரம்பித்தது.

அதிலும் எந்த விதமான தடயங்களும் கிடைக்காத நிலையில் நான்கு வருடங்கள் கழித்து இந்த கேஸை க்ளோஸ் செய்து விட்டது. நாட்கள் உருண்டோடிய பிறகு தென்னாப்பிரிக்க மடகாஸ்கர் தீவுக்கு அருகில் ரியூனியன் தீவுக்கு அருகில் இருந்த விமானத்தின் பாகங்கள் கரை ஒதுங்கியது.