• March 26, 2024

இதை செய்தால் நிச்சயம் நிம்மதியாக தூங்கலாம் !!!

 இதை செய்தால் நிச்சயம் நிம்மதியாக தூங்கலாம் !!!

மனிதனுக்கு தூக்கம் என்பது மிகவும் அவசியமான ஒன்று. ஆனால் இன்றைய அவசர உலகில் நிம்மதியான தூக்கம் பலருக்குக் கிடைப்பதில்லை.


தூங்குவதற்கு நேரம் இருந்தாலும் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் இவ்வுலகில் ஏராளம். அப்படி தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கான பதிவுதான் இது. இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி உங்களால் 4-8 நிமிடங்களுக்குள் தூங்கி விட முடியும்.

Blood test may determine if kids are sleeping enough

இந்த தூக்க முறைக்கு ஆங்கிலத்தில் Progressive Muscular Relaxation என்று பெயர். நம் உடலில் உள்ள தசைகளை ஓய்வெடுக்க செய்வதன் மூலம் விரைவில் நாம் தூங்கி விட முடியும்.


முதலில் நம் புருவங்களை ஐந்து வினாடிகளுக்கு தூக்கி வைத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது உங்களது நெற்றியின் தசைகளானது இறுக்கமடையும். பின் மெதுவாக தூக்கிய புருவங்களை கீழே இறக்குங்கள். இவ்வாறு செய்யும் போது உங்களுக்கு இருக்கும் Tension ஆனது குறையும்.

அடுத்த படியாக உங்களது கன்னங்கள் நன்றாக விரிவடையும் படி சிரியுங்கள். இவ்வாறு செய்யும் போது உங்கள் முகத்தில் உள்ள தசைகள் இறுக்கமடையும். ஐந்து வினாடிகள் கழித்து அந்தத் தசைகளை மீண்டும் குருக செய்யுங்கள்.

Why Do Babies Smile In Their Sleep?

இப்போது உங்கள் கண்களை மூடி ஐந்து வினாடிகளுக்கு இமைகளை நகர செய்யுங்கள். பின் உங்கள் அறையில் உள்ள உள்கூரையை பார்த்தபடி கழுத்தை நீட்டி வைத்து ஐந்து வினாடிகள் படுத்திருங்கள். ஐந்து வினாடிகள் முடிந்தபின் உங்கள் கழுத்தை Relax செய்யுங்கள்.

இவ்வாறெல்லாம் செய்யும்போது நம் உடலின் தசைகள் ஓய்வெடுக்க தயாராகிவிடும். இந்நிலையில் உடல் இருக்கும் போது, தூங்குவதை தவிர வேறு எந்த விஷயத்தையும் பற்றி யோசிக்காமல் கண்களை மூடினால் தூக்கம் தானாகவே வந்துவிடும்.


இந்த PMR தூக்க முறையை நிச்சயம் முயற்சி செய்து பாருங்கள்.

இதுபோன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.