• October 12, 2024

தாய்மணிக் கொடிக்கான குறியீடுகளும் விதிமுறைகளும் !!!

 தாய்மணிக் கொடிக்கான குறியீடுகளும் விதிமுறைகளும் !!!

இந்தியா முழுவதும் 75-வது சுதந்திர தினம் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நன்னாளில் நம் இந்திய நாட்டின் கொடி குறியீடுகள் பற்றியும் அதை உபயோகிக்கும் விதிமுறைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம்.

நமது இந்திய தேசியக் கொடியானது கைகளால் சுற்றப்பட்ட அல்லது கைகளால் நெய்யப்பட்ட காதி/ பட்டு /கம்பளி/ பருத்தியால் ஆனது. மூவர்ண கொடியின் மையத்தில் இருபத்தி நான்கு கோடுகள் நிறைந்த சக்ரா பொறிக்கப்பட்டிருக்கும்.

Flag of India | History, Design, & Meaning | Britannica

நம் நாட்டு கொடியானது 3:2 என்ற விகிதத்தில் நீளம் முதல் உயரம் வரை செவ்வக (Rectangle) வடிவில் இருக்க வேண்டும்.

தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியோர் இந்த கொடியை தங்களது வளாகத்தில் பறக்கவிடலாம். ஆனால் எந்த நிறுவனமும் / தனிநபரும் நாட்டுக் கொடியை வியாபார ரீதியாக பயன்படுத்தக்கூடாது.

இந்தியக் கொடியின் எந்த ஒரு பகுதியும் நம் உடைகளின் ஒரு அங்கமாக இருக்கக்கூடாது. கொடியை தனியாக நம் உடையில் பொருத்திக் கொள்ளலாம்.

இந்திய அரசாங்கத்தின் அறிவுறுத்தல் இல்லாமல் சூரியன் மறைந்த பின் நாட்டுக் கொடியை பறக்க விடக்கூடாது. மீறி பறக்க விட்டால் அது சட்டப்படி குற்றமாகும்.

Indian Flag Flying National Flags Pole, Size: 20fit To 400 Fit, | ID:  15003282088

கொடியேற்றத்தின் போது கொடி தரையிலோ, மண்ணிலோ, நீரிலோ படாதவாறு கொடியை பறக்க விட வேண்டும்.

ஒருபோதும் கொடியை தலை கீழாக பறக்க விடக்கூடாது. கொடியின் எந்த ஒரு இடத்திலும் கூடுதல் அலங்காரமும் எழுத்துக்களும் இடம்பெறக்கூடாது.

இதுபோன்ற பல கொடி குறியீடுகளையும் கொடியேற்றும் விதிமுறைகளை பற்றியும் Flag Code எனும் சட்டம் கூறியிருக்கிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள வலைதளத்தில் இந்திய தேசிய கொடியின் குறியீடுகள் மற்றும் விதிமுறைகளை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

https://mha.gov.in/sites/default/files/flagcodeofindia_070214.pdf

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் Deep Talks Tamil சார்பில் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.