• October 12, 2024

இனி நமக்கு பதில் வேறொருவர் நம் டிக்கெட்டில் ரயிலில் பயணிக்கலாம் !!

 இனி நமக்கு பதில் வேறொருவர் நம் டிக்கெட்டில் ரயிலில் பயணிக்கலாம் !!

ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டில் ஒருவேளை நாம் பயணிக்க முடியாவிட்டால் அதே டிக்கெட்டில் வேறொரு நபரை பயணிக்க வைக்கும் முறையை இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பு முன்பதிவு செய்து நம்மால் பயணிக்க முடியாமல் போனால் அந்த டிக்கெட்டை ரத்து செய்யும் முறை மட்டுமே இருந்து வந்தது. அப்படி ரத்து செய்யும்போது அதற்கான உரிய Cancellation தொகையை ரயில்வே நிர்வாகம் பிடித்துக்கொள்ளும். ஒருவேளை நமக்கு பதில் வேறொருவர் பயணிக்க வேண்டுமென்றால் நமது டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு பயணம் செய்யும் நபரை புதிதாக முன்பதிவு செய்ய வைக்க வேண்டும்.

IRCTC Latest Update: Railway Introduces Major Changes For Online Ticket  Booking. Details Inside

தற்போது பயணிகளின் நலன் கருதி ரயில்வே நிர்வாகம் ஒரே டிக்கெட்டில் ஒருவருக்கு பதில் இன்னொருவர் பயணம் செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். நாம் முன்பதிவு செய்த டிக்கெட்டில் இன்னொருவரை எப்படி பயணம் செய்ய வைக்கலாம் என்பதை கீழே காணுங்கள்.

ஏற்கனவே நாம் முன்பதிவு செய்த டிக்கெட்-ன் நகலை நமக்கு அருகில் உள்ள ரயில் நிலையத்தின் முன்பதிவு அலுவலகத்தில் பயணத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும். அந்த டிக்கெட் உடன் சேர்த்து யார் நமக்கு பதில் பயணம் செய்ய போகிறார்களோ அவரின் ஆதார் அல்ல வாக்காளர் அட்டை போன்ற அடையாளச் சான்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.

Indian Railways upgradation plan: AC coaches to replace general and sleeper  coaches in high-speed trains

ஒரு டிக்கெட்டில் ஒருமுறை மட்டுமே மாற்றுப் பயணாளி பயணிக்க விண்ணப்பிக்க முடியும். டிக்கெட்டை வேறொருவர் பெயருக்கு மாற்றிய பின் மீண்டும் அதே டிக்கெட்டை மற்றொரு பயணியின் பெயருக்கு மாற்ற இயலாது.

இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய திட்டமானது பயணிகள் பயனடையும் வகையில் அமைந்திருக்கிறது.

இதுபோன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழ் உடன் இணைந்திருங்கள்