• July 27, 2024

உலகையே புரட்டிப் போடும் அண்டார்டிகாவின் மர்மம் என்ன?  – விஞ்ஞானிகளின் கணிப்பு..

 உலகையே புரட்டிப் போடும் அண்டார்டிகாவின் மர்மம் என்ன?  – விஞ்ஞானிகளின் கணிப்பு..

Antarctica

அண்டார்டிகா பற்றி நாம் பேசும்போது உங்களுக்கு தெரிந்த விஷயம் அங்கு பனி நிறைந்த பாறைகளும், கடுமையான உறைந்த குளிர் காற்று வீசும் என்பதால் மனிதர்கள் பிழைக்க தகுதி இல்லாத இடம் என்பது அனைவருமே நன்றாக உணர்ந்த உண்மைதான்.

இந்த அண்டார்டிகாவில் ரஷ்யா மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அதிகளவு ஆய்வுகளை மேற்கொண்டு இருக்கிறார்கள். இதன் மூலம் பல புதிய தகவல்கள் மட்டுமல்லாமல் நம் கற்பனை செய்து பார்க்க முடியாத மர்மமான விஷயங்களுக்கும் விடை கிடைக்கும் என்று கூறலாம்.

நீண்ட நெடு நாட்களாகவே அண்டார்டிகாவில் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன? அந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகிறது என்று தெரியாமல் பலரும் பல விதமான கேள்விகளை எழுப்பி வரக்கூடிய நிலையில், சில ஆய்வாளர்கள் மட்டுமே அது பற்றி வாய் திறந்து உண்மையை பகிர்ந்து இருக்கிறார்கள்.

Antarctica
Antarctica

இதற்கு காரணம் அண்டார்டிகாவின் அடியில் ஏதோ ஒன்று உள்ளது என்பதுதான். ஆரம்பத்தில் ஆய்வாளர்கள் அண்டார்டிகாவின் அடியில் தண்ணீர் ஏரிகளை கண்டுபிடித்தார்கள்.

இது மட்டுமல்லாமல் சர்ச்சையை ஏற்படுத்தக் கூடிய வகையில் ரஷ்யாவை சேர்ந்த சில ஆய்வாளர்கள் இந்த பணி பிரதேசத்தின் கீழ் மற்றொரு கண்டம் மறைந்துள்ளது என்ற அதிர்ச்சிகரமான மர்மத்தை உடைத்தார்கள்.

இந்த கண்டத்தில் பழைய நாகரீகத்தை சேர்ந்த மனிதர்கள் மட்டுமல்லாமல் ஜீவராசிகளும் வாழலாம் என்று கூறியிருக்கிறார்கள். இது ஒரு தடை செய்யப்பட்ட இடம் என்பதாலேயே அரசாங்கங்களின் கண்டுபிடிப்புகள் ரகசியமாக இன்று வரை வைக்கப்படுகிறது.

அங்கு கண்டுபிடிக்கப்பட்ட ஏரிகளில் நீர்கள் உறைந்த நிலையில் கண்டுபிடிக்கப்படவில்லை. சுமார் பத்து மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக அது சுத்தமான நீரை கொண்டுள்ளது என்று தான் கூற வேண்டும். இதனை ஒரு துருப்பு சீட்டாக பயன்படுத்திக் கொண்ட விஞ்ஞானிகள் அந்த ஏரியை அடைய சுமார் பத்து வருடங்களை எடுத்துக் கொண்டார்கள்.

Antarctica
Antarctica

அதுமட்டுமல்லாமல் ரஷ்ய விஞ்ஞானிகள் அங்கு ஒரு பயங்கரமான ஜீவராசியான ஆர்கனிசம் என்ற ஒன்றை சந்தித்து இருக்கிறார்கள். இது 46பி என்று அழைக்கப்படுகிறது. இந்த உயிரினமானது தான் பிடிக்கும் இரையை ஒரே நேரத்தில் தூண்டுதுண்டாக பிரிக்கக்கூடிய திறன் கொண்டதாம்.

பார்ப்பதற்கு ஆக்டோபஸ் போன்று இருக்கும் இந்த உயிரினம் மொத்தம் 14 கைகளோடு படு பயங்கரமாக இருக்கும். சுமார் 150 அடி தொலைவில் இருந்தாலும் இதனால் வலுவான விஷத்தை வெளியிட்டு இரையை பிடிக்க முடியும்.

இந்த உயிரினத்தின் மூலம் ரஷ்ய குழுவின் உறுப்பினர் ஒருவர் இறந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த உருவம் தன்னுடைய உருவத்தை மாற்றக்கூடிய சக்தி கொண்டதால் பல வியப்பான விஷயங்கள் வெளிவந்துள்ளது.

அந்த வகையில் உருவத்தை மாற்றக்கூடிய திறன் கொண்ட மிமிக் ஆக்டோபஸ் இனத்தைச் சேர்ந்ததுதான், இந்த உயிர் என்றும் இது கடலில் மூழ்கி நிகழ்த்தப்பட்ட ஆய்வின் மூலம் நமக்கு வெளிவந்த தகவலாக உள்ளது.

இது மட்டுமா? அண்டார்டாச்சாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோட்டை போன்ற கட்டிடம் மனித குலம் வாழ்ந்ததை பறைசாற்றும் வண்ணம் உள்ளது. இந்த வட துருவ பனி பிரதேசமான அண்டார்டிகா பகுதியில் மோட்டி மற்றும் பெய்லி (Motte and bailey castle) எனப்படும் கோட்டை அமைப்பை போல உள்ளது. 

Antarctica
Antarctica

மேலும் இந்த கோட்டையை அமைக்க மண் மற்றும் மரக்கட்டைகளை பயன்படுத்தியதால் இதற்கு இந்த பெயரை வைத்திருக்கிறார்கள்.

ஆழமான பனி நிறைந்த பகுதியில் இந்த கோட்டை இருப்பதால் பழமையான நாகரீகம் ஒன்று இங்கு இருந்ததற்கு அடையாளமாக இதை பார்ப்பதோடு, இந்த கோட்டையானது மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளை கொண்டுள்ளது என்று கூறலாம்.

மேலும் இந்த கோட்டை, செயற்கைக்கோள் உதவியுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் மிக பெரிய கட்டிடம் சிதைந்து போன அடையாளங்களை தெளிவாக காட்டும் வகையில் உள்ளது. எனினும் சில அறிவியல் அறிஞர்கள் இயற்கையாக உருவாகும் சஸ்ட்ருகா (Sastruga) எனும் பனி படிவம் அமைப்பாக இருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்கள்.

ஆனால் இந்த பனி படிவ அமைப்பு, காற்று வீசும் திசைக்கு ஏற்ப அதனுடைய வடிவம் மாறுபடும். ஆனால் அத்தகைய மாற்றம் இந்த கோட்டையில் தென்படவில்லை என்பதால் இது மீண்டும் பல மர்மங்களுக்கு விடை சொல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.