• March 29, 2024

சித்தி என்ற சொல் எப்படி வந்தது ?

 சித்தி என்ற சொல் எப்படி வந்தது ?

இ என்பது பெண்பால் விகுதி.
அழகு + இ = அழகி
கண் + இ = கண்ணி


ஆண்பால் பெண்பால் விகுதிகளைக்கொண்டு பண்புப் பெயர்ச்சொல்லை முன்னொட்டாய்ச் சேர்த்து அப்பண்புக்குரிய உயர்திணைப் பெயரை உருவாக்கலாம்.

சிறுமை + அப்பா = சிற்றப்பா
சிறுமை + அன் = சிறியன்


சிறு என்பதனை முற்றியலுகரமாய்க் கொண்டு ‘வ்’ உடம்படுமெய் தோன்றச் செய்தால் சிறு வ் அன் = சிறுவன் ஆகும். அன் என்பது ஆண்பால் விகுதியாய் வந்ததுபோல, இ என்பது பெண்பால் விகுதியாய் வரும். இங்கே சிறுமை என்பது இளமை சார்ந்த பொருளில் வருவது.

சிறுமை + அன்னை = சிற்றன்னை
சிறுமை + இ = சிற்றி

சிற்றி என்ற தூய தமிழ்ச்சொல்லே பேச்சு வழக்கில்
‘சித்தி’ ஆயிற்று.

deep talks tamil

கவிஞர் மகுடேசுவரன்

Writer