ராவணன், மண்டோதரியை திருமணம் செய்த கோவில் எது தெரியுமா? அதுவும் தமிழ்நாட்டில் உள்ளதா..

Uthrakosamangai
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற ஒரு மகத்தான வாக்கியம் நம்மிடைய காணப்படுவது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.
அந்த வகையில் உலகிலேயே முதன் முதலாக ஏற்படுத்தப்பட்ட சிவன் கோயில் ஒன்று உண்டு என்றால் அது நம் தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் சிவன் கோயில் என கூறலாம்.

இந்தக் கோயில் ஆனது முதல் முதலாக தோன்றிய ஊர் எது? உலகில் உள்ள பல்வேறு ரிஷிகளும், முனிவர்களும் வாசம் செய்த ஸ்தலமாக இருப்பதற்கு காரணம் என்ன? என்பது பற்றிய விரிவான பதிவினை இந்த கட்டுரையில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
நீங்கள் இந்த கோயில் எங்கு உள்ளது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பீர்கள். இந்த கோயில் தமிழ்நாட்டில் உள்ள ராமநாதபுரத்தில் அமைந்துள்ள உத்திரகோசமங்கை கோயில் ஆகும். உலகிலேயே சிவபெருமான்காக கட்டப்பட்ட முதல் கோவில் என்பதற்காக சான்றுகளை இந்த கோயில் கொண்டுள்ளது.
இந்தக் கோயிலில் உத்திரகோசமங்கையில் அமைந்திருக்க கூடிய மங்கள நாதர் சுவாமி திருக்கோயில் உலகின் முதல் சிவன் ஆலயம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு தான் முதல் முதலாக சிவ ஆலயம் நிறுவப்பட்டதற்கான சான்றுகள் தற்போது கிடைத்துள்ளது.

இந்த கோயிலின் பெயர் காரணம் எதனால் ஏற்பட்டுள்ளது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? இதற்கான காரணம் என்னவென்றால் அம்மனுக்கு இறைவன் ஆனந்த தாண்டவத்தை ஆடி காட்டி பிரணவத்தை உச்சரித்ததோடு மட்டுமல்லாமல், அதன் பொருளையும் கூறியதின் காரணமாகத் தான் இந்தப் பெயர் ஏற்பட்டது. அதாவது உத்திரம் என்பது உபதேசம் என்றும் கோசம் என்பது ரகசியம் என்று பொருள் தரும்.
எனவே பிரணவ மந்திரத்தை உச்சரித்த இடம் என்பதால் தான் இது உத்திரகோசமங்கை என்ற பெயரை பெற்றுள்ளது. இந்த ஆலயம் 3300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த ஆலயத்தில் இருக்கும் சிவனின் அடி மற்றும் முடியை காணவே முடியாத சிறப்பு பெற்ற ஸ்தலமாக உள்ளது.

இந்த கோயிலை பொறுத்தவரை எட்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்றும், இங்கு இருக்கும் இலந்தை மரம் 3300 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனினும் இன்றுவரை பூத்துக் குலுங்குவது அதிசயமாகவும் அறிவியலால் கண்டுபிடிக்க முடியாத ரகசியமாகவும் உள்ளது.
இந்தக் கோவிலில் தான் மகாபாரத போர் நடந்த சமயத்தில் ராவணன் தனது மனைவியாகிய மண்டோதரியை திருமணம் செய்து கொண்டதற்கான சாட்சிகள் கல்வெட்டுகளில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த கோயில் எவ்வளவு தொன்மை வாய்ந்தது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த கோவில் ஏழு நிலை ராஜகோபுரங்களையும் மொத்தமாக 5 ராஜ கோபுரங்களையும் கொண்டுள்ளது. கோவிலில் இருக்கக்கூடிய சிற்பங்கள் அனைத்தும் தென்னிந்திய திராவிட கட்டிடக்கலையில் மிகவும் நேர்த்தியான முறையில் அமைந்துள்ளது.
இங்கிருக்கும் பெரிய மரகத பாறையில் ஐந்தரை அடி உயர நடராஜரை ஒன்றரை அடி உயர பீடத்துடன் ராஜ கோலத்தில் நாம் இங்கு தரிசிக்க முடியும். முடிந்தால் நீங்களும் ஒருமுறை இந்த கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து வரலாமே.