• May 12, 2024

எதற்காக மனிதர்களை நாய்கள் கடிக்கிறது? – ஏன் நாய் கடித்தால் உடனே மருத்துவம் பார்க்க வேண்டும்..

 எதற்காக மனிதர்களை நாய்கள் கடிக்கிறது? – ஏன் நாய் கடித்தால் உடனே மருத்துவம் பார்க்க வேண்டும்..

Dog

மனிதனின் உற்ற நண்பராக திகழ்வது நாய்கள்  நாய்கள் என்றாலே நன்றியுள்ள பிராணிகள் என்று நமக்கு நன்றாக தெரியும். இந்த உலகம் தோன்றி மனித நாகரீகம் தலை தூக்குவதற்கு முன்பாகவே வேட்டையாட நாய்களை மனிதன் பழகி அவற்றோடு ஒன்றாக வாழ்ந்து இருக்கிறான்.


எனவே மற்ற ஜீவராசிகளை விட நாய்க்கும் மனிதனுக்கும் இடையே உள்ள தொடர்பு பண்ணிடும் காலமாக இருந்துள்ளது என கூறலாம். அப்படி இருக்கக்கூடிய சமயத்தில் நாய்கள் எப்போதாவது மனிதர்களை கடிப்பது எதனால் என்பது பற்றிய விரிவான தகவல்களை இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

Dog
Dog

நாய்கள் ஏன் சில சந்தர்ப்பங்களில் மனிதர்களை கடிக்கிறது என்பதற்கான விபரத்தை கோவையைச் சேர்ந்த நாய்களுக்கான நடத்தை இயல் நிபுணர் ஸ்ரீதேவி மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். அவர் கூறும்போது ஒரு நாய் அச்சுறுதலுக்கு ஆளானாலும், தன்னை பாதுகாத்துக் கொள்ள நினைத்தாலோ கடிப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்ற முடிவினை எடுக்குமாம்.


அதுமட்டுமல்லாமல் அந்த சூழலை சமாளிக்க வெறித்தனமாக மாறிவிடுகிறது என்ற தகவலை கூறி இருக்கிறார். எப்படி மனிதர்களுக்கு சில நேரங்களில் கோபம் வந்தால் உணர்ச்சிவசையப்பட்டு சண்டை போடுகிறார்களோ, ஆக்ரோஷமாக கத்துகிறார்களோ அல்லது அடிக்கிறார்களோ அதே போல தான் விலங்குகளும் முதலில் குரைக்கும் பின் கடிக்கும் என்ற செய்தியை தெளிவு படுத்தினார்.

வீட்டில் வளர்க்கும் செல்ல நாய்கள் தெரு இருக்கும் நாய்கள் என்று வித்தியாசம் இல்லை. அந்த நாய்களின் மன நிலைக்கு ஏற்றபடி தான் அவை நடந்து கொள்ளும். வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு சரியான நேரத்தில் உணவு கிடைக்கும். எனவே அவற்றுக்கு உளவியல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் பிரச்சனைகள் ஏற்படுவது குறைவு. இதுவே தெரு நாய் என்றால் அவற்றுக்கு இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

Dog
Dog

அது மட்டுமல்லாமல் ஏதோ நடக்கப்போகிறது என்ற பய உணர்வு நாய்களிடையே எதிர் வினையாற்றி அவற்றை கடிக்க கூடிய சூழ்நிலைக்கு கொண்டு விடும்.

நாய்களுக்கு மனிதர்கள் மீது நம்பிக்கையும், மரியாதையும் உள்ளது. இவை இரண்டில் எது ஒன்று இழந்து விட்டாலும் எந்த சமயத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே நீங்கள் உங்கள் வளர்ப்பு நாய்கள் நம்பிக்கை இழந்ததை நீங்கள் மிகத் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.


பொதுவாக நாய்களுக்கு இன்ட்ரோவர்ட் மற்றும் எக்ஸ்ட்ராவர்ட் என்று இரண்டு வகையான குணங்கள் உள்ளது. எக்ஸ்ட்ராவர்ட் அந்த நாய்கள் இருக்கும் பட்சத்தில் சகஜமாக பழகக்கூடிய தன்மையோடு இருக்கும். அதுவே பயம் கொண்ட உணர்வோடு இருக்கக்கூடிய நாய்களை இன்ட்ரோவர்ட் என்று கூறுவார்கள். அது கடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாம்.

Dog
Dog

எவ்வளவு தான் வளர்ச்சி அடைந்திருந்தாலும் ஓநாய்களின் பரிமாணம் வளர்ச்சி தான் இந்த நாய்களுக்கு உள்ளது என்று கேள்விப்பட்டிருப்போம். பிற விலங்குகளை போல காட்டில் இருந்த போதும் நாய்களும் கூட்டமாக வேட்டையாடி வந்தது எனவே அந்த குணம் அவற்றை விட்டு போகாது.

சாதாரண மனநிலையில் இருக்கும் நாய்கள் கொட்டாவி விடும், கண்ணை இமைக்கும், காதை மூக்கால் நக்கும், கோபம் வந்தால் தலையை திருப்பிக் கொண்டு செல்லும், உடலை திருப்பிக் கொள்ளும், தரையில் அமர்ந்தபடி தனது காலை நாக்கால் நக்கும், அருகில் சென்றால் விலகிச் செல்லும்.


நடுத்தர மனநிலையில் இருக்கும் நாய்கள் பல்லாண்டு படுத்த படி காலை தூக்கி கொண்டு இருக்கும். பின் உடலை உயர்த்தி வளைத்து முன் உடலை குனிந்து நீட்டி வாலை பின் பக்கமாக உள்ளடக்கி ஒளித்து விடும்.

Dog
Dog

இதுவே மிகவும் ஆக்ரோஷமாக இருக்கக்கூடிய பட்சத்தில் இந்த நாய்கள் முறைத்தபடி நின்று உற்றுப் பார்க்கும். பற்களை கோரமாக காட்டி உருமும். சத்தமாக குறைத்து பாய்ந்தோடி கடிக்க வரும்.


உங்கள் வீட்டில் வளர்ப்பு பிராணிகள் இருக்கக்கூடிய பட்சத்தில் அவற்றுக்கு உரிய ஊசிகளை போட்டு அவற்றின் மனநிலையை அறிந்து வளர்க்க வேண்டும். உங்கள் வீட்டுக்கு யார் வந்தாலும் உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் நாயை தொட விடாதீர்கள்.