• July 27, 2024

 எதற்காக இந்த பப்பில் ராப் (Bubble Wrap) கண்டுபிடிக்கப்பட்டது.. விஷயம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்..

  எதற்காக இந்த பப்பில் ராப் (Bubble Wrap) கண்டுபிடிக்கப்பட்டது.. விஷயம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்..

Bubble Wrap

நண்பர்களே தூய தமிழில் இதனை குமிழி உறை என்று கூறலாம். 1957 ஆம் ஆண்டு ஆல்ஃபிரட் ஃபில்டிங் மற்றும் மார்க் சாவான்னெஸ் என்ற பொறியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த bubble wrap.

இந்த காகிதத்தை கொண்டு எலக்ட்ரானிக் பொருட்கள் பொதியப்பட்டிருக்கும். மேலும் இதை பொதிவதின் மூலம் உடையாமல் பாதுகாப்பாக எடுத்து வருவதற்கு பேக்கிங்கில் பெரும் பங்கு வகிக்கிறது.

Bubble Wrap
Bubble Wrap

இந்தக் காகிதத்தை தான் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் உடைத்து விளையாடுவதை இன்று வரை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.

உங்கள் வீட்டுக்கு பார்சலில் வரும் பொருட்கள் உடையாமல் இருப்பதற்காக இந்த bubble wrap போட்டு இருப்பார்கள்.இது அட்டைப் பெட்டிகளுக்கு அடுத்த படியாக அதிகளவு பேக்கேஜில் இடம் பிடித்துள்ளது.

ஆனால் இது உண்மையில் பேக்கிங்குக்காக கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் உண்மை வரலாறு என்ன என்பது உங்களுக்கு தெரிய வேண்டாமா?

Bubble Wrap
Bubble Wrap

இந்த குமிழி உறையை பாரம்பரிய வால்பேப்பரை விட தட்டினமான மற்றும் கடினமான ஒரு வால்பேப்பராக கண்டுபிடித்தனர். அதனை அடுத்து இவற்றுக்கு இடையே காற்றினை அடைத்து காற்றில் குமிழிகளாக மாற்றிவிட்டார்கள்.

வால்பேப்பராக வெளிவந்த இந்த தயாரிப்பு பெரும் அளவு வெற்றியை கொடுக்காமல் தோல்வியை அடைந்தது. அதன் பிறகு தான் இதை பேக்கேஜில் பயன்படுத்தக்கூடிய பொருளாக மாற்றி அமைத்தார்கள். இந்த யோசனை 1959 ஆம் ஆண்டு ஐபிஎம் என்ற புதிய கம்ப்யூட்டரை கண்டுபிடித்து இதை வணிகப்படுத்த அறிவித்த போது தான் தோன்றியது.

அது மட்டுமல்லாமல் ஐபிஎம் தங்கள் கம்ப்யூட்டர்களை ஏற்றுமதி செய்யும் போது அவற்றை பாதுகாப்பாக வைக்க இந்த காகிதங்களை பயன்படுத்தினார்கள். இதனை அடுத்து ஷாப்பிங் துறையில் அடிப்படை பொருளாக இந்த காகிதங்கள் மாறிவிட்டது.

Bubble Wrap
Bubble Wrap

தற்போது பேக்கேஜுக்கு ஏற்றபடி பலவிதமான மாடல்களிலும் ஸ்டைல்களிலும் இந்த bubbly wrap கிடைக்கிறது. எதற்கோ கண்டுபிடித்து அதை எதற்கோ பயன்பட்டது என்பது இந்த கண்டுபிடிப்புக்கு சான்றாக உள்ளது என கூறலாம்.

உங்களுக்கும் இந்த தகவல் பிடித்திருந்தால் நீங்கள் படித்த உடனேயே உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம். மேலும் இது போன்ற தகவல்கள் உங்களுக்கு தெரியுமானால் அவற்றை எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.