• July 27, 2024

“சடங்குகள் பற்றிய குறிப்புகள்..! – துருக்கியில் கண்டுபிடிக்கப்பட்ட களிமண் துண்டுகளில்..

 “சடங்குகள் பற்றிய குறிப்புகள்..! – துருக்கியில் கண்டுபிடிக்கப்பட்ட களிமண் துண்டுகளில்..

Ritual text

பன்னெடும் காலத்திற்கு முன்பு இருந்த எழுத்து உருவங்கள் தற்போது துருக்கியில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த எழுத்துருக்கள் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என்று வல்லுனர்கள் கூறி இருக்கிறார்கள்.

தற்போது இந்த எழுத்து வடிவங்கள் பயன்பாட்டில் இல்லை. இந்த ஆண்டின் முன்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் வடக்கு மற்றும் மத்திய துருக்கி பகுதியில் உள்ள போகஸ்காய் ஹட்டுசா பகுதி கிட்ட இந்த களிமண் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Ritual text
Ritual text

இந்தப் பகுதியானது கிமு 1600 முதல் கிமு 1200 வரை ஹிட்டைட் பேரரசின் தலைநகரமாக இருந்துள்ளது. தற்போது யுனெஸ்கோவின் பாரம்பரிய தளங்களில் ஒன்றாக இடம் பிடித்திருக்கும் இந்த ஹட்டுசா பல சிறப்புகளை கொண்டது.

ஜெர்மன் தொல்லியல் நிறுவனத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் தலைமையில் இங்கு ஆண்டுதோறும் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த அகழ்வாய்வின் போது தான் பல களிமண் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த களிமண் துண்டுகள் மிகவும் பழமையானவை எனவும் கியூனேபார்ம் எழுத்துருக்கள் இதில் உள்ளது என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

Ritual text
Ritual text

இந்த எழுத்து வடிவமானது மெசபடோமியாவில் வசித்த சுமேரியர்களால் 5000 ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த களிமண் துண்டுகள் குறித்து இதை ஆய்வு செய்த ஆய்வாளர் ஆண்டிரியாஸ் ஷாச்னர் கூறும்போது ஒரு சில கட்டிடங்கள் இருந்து இவை குவியலாக எடுக்கப்பட்டது என கூறியிருக்கிறார்.

மேலும் இந்த களிமண் துண்டுகளில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை தெளிவாக தெரியவில்லை. இங்கு கண்டெடுக்கப்பட்ட பெரும்பாலான இது போன்ற களிமண் துண்டுகளில் ஹிட் டைட்ர்ஸ் மொழியில் எழுதி இருக்கிறார்கள். இன்னும் சில களிமண் துண்டுகளில் வேறு மொழிகளும் உள்ளது என கூறி இருக்கிறார்.

பெரும்பாலான இந்த களிமண் துண்டுகளில் மத சம்பந்தமான சடங்குகள் குறித்த குறிப்புகள் எழுதப்பட்டுள்ளது என்பதை உறுதிபட தெரிவித்திருக்கிறார்.

Ritual text
Ritual text

மேலும் ஆய்வுக்காக இந்த களிமண் துண்டுகளை ஜெர்மனியில் உள்ள பகுப்பாய்வு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்க, அங்கு இருக்கும் பல்கலைக்கழக பேராசிரியர் டேனியல் ஆய்வுகளை மேற்கொண்டு களிமண் துண்டுகளில் எழுதப்பட்டு இருக்கும் ஹிட்டைட் எழுத்துக்களைக் கொண்டு அது கலாஸ்மா மொழி என்பதை கண்டறிந்து இருக்கிறார்.

 இந்த மொழியானது வடமேற்கு பகுதியில் புழக்கத்தில் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளது. எனினும் களிமண் துண்டுகளில் முழுமையாக என்ன செய்து உள்ளது என்பதை கண்டறிய முடியவில்லை. 

இதில் அந்தப் பகுதியில் உள்ள மதச் சடங்குகள் மட்டுமல்லாமல் வேறு சில பகுதிகளில் இருந்த மதச் சடங்குகளும் அந்நிய மொழி சடங்குகள் பற்றிய குறிப்புகளும் காணப்படுகிறது.

Ritual text
Ritual text

இதனை அடுத்து வெண்கல காலத்தின் பிற்பகுதியில் அழிவுக்கு உள்ளாகி இருக்கும் இந்த நகரத்தை விட்டு கிமு 1200 – களிலேயே மக்கள் வெளியேறி இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ள நிலையில், மத்திய தரை கடலின் கிழக்கில் இருந்து பழமையான நகரங்கள் அழிந்து போய் விட்டது. இந்த அழிவு “கடல் மக்கள் அழிவு” என்று அழைக்கப்படும். இது புலம் பயந்த அவர்களின் படையெடுப்பால் ஏற்பட்டு இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

இப்படி கூறப்பட்டிருக்கும் வேளையில் வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் தொல்லியல் துறையை சேர்ந்தவர்கள், இந்த விவாதங்களை தொடர்ந்து வரக்கூடிய நிலையில் அழிந்து போன மொழியில் இருந்து களிமண் துண்டுகள் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று ஆராய்ச்சியாளர் ஷாச்னர் உறுதி பட தனது கருத்தை பதிவு செய்து இருக்கிறார்.