“65000 ஆண்டுகளுக்கு முன் மனித இடப்பெயர்வு..!” – ஆஸ்திரேலியாவில் லெமூரியா வழித் தோன்றார்களா?
உலக வரலாற்றையே புரட்டிப் போடக் கூடிய வகையில் உலகில் இருக்கும் மனிதர்களில் பலரும் லெமூரிய வழித் தோன்றல்களாக இருக்கலாமா என்ற சந்தேகங்கள் தற்போது பலமாக ஏற்பட்டுள்ளது என்று கூறலாம்.
அதற்கு காரணம் தமிழ் இனம் உலகின் எல்லா பகுதிகளிலும் இன்று வரை கோலோச்சி இருக்கிறார்கள். அந்த வகையில் மனிதனின் பழங்கால வரலாற்றை கண்டுபிடிப்பதில் இன்று உலகெங்கிலும் இருக்கக்கூடிய பழங்குடியினரின் தோற்றத்தைப் பற்றி, அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது.
உலகில் பழங்குடியினரே முதல் சமூக அமைப்பு என்பதை யாரும் மறுக்கவில்லை. அவர்களின் நாகரிகம் மற்றும் அவர்கள் விட்டுச் சென்றிருக்கக் கூடிய தடயங்களை கொண்டு எளிதில் இதனை கண்டுபிடிக்க முடியும் என்று நம்புகிறார்கள்.
தற்போது உலகில் இருக்கக்கூடிய அத்தனை பழங்குடி மக்களும் இந்திய பழங்குடியினுடன் இணைக்கப்பட்டு இருக்கலாம் என்ற ஆச்சரியமான தகவல்களை வரலாற்று ஆய்வாளர்களும், மற்ற அறிஞர்களும் கூறுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய பழங்குடியினர் மட்டுமல்லாமல் வேதகால நாகரிகத்தோடும் இணைத்து இவற்றை நாம் பேசலாம். மேலும் பல ஆய்வுகளையும் செய்து பார்க்கலாம். அந்த வகையில் பழங்குடி நாகரிகமானது வேத நாகரீகத்திற்கும் முற்பட்டது என்று கூறலாம்.
மேலும் இந்த பழங்குடி நாகரீகமானது 230 மில்லியன் ஆண்டுகளை விட பழமையானது. இது 34 மில்லியன் சதுரம் மைல் வரை பரவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அப்படிப்பட்ட இந்த நிலப்பரப்பானது தற்போதைய ஆஸ்திரேலியா கண்டத்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது.
எனவே தான் ஆஸ்திரேலியாவில் இருக்கக்கூடிய பழங்குடி மக்கள் மத்தியில் வேத இந்திய கலாச்சாரத்தின் தாக்கங்களும் தடயங்களும் இன்று அளவும் காணப்படுகிறது.
இதற்கு உதாரணமாக அவர்கள் ஆட கூடிய திரு நேத்திர நடனம் அதாவது சிவபெருமானை போல் வேடமிட்டு நடனம் ஆடுவதை கூறலாம். அது மட்டுமல்லாமல் இவர்கள் நெற்றியில் விஷ்ணு முத்திரை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
இதனை அடுத்து ஆப்பிரிக்காவில் இருந்து தான் முதல் முதலாக மக்கள் இடம்பெயர்ந்து பல்வேறு பகுதிகளில் பரவினார்கள் என்ற கருத்தானது தவறு என்ற பார்வையை இது தற்போது ஏற்படுத்தி விட்டது.
இதனை உறுதி செய்யக்கூடிய விதத்தில் டிஎன்ஏ பரிசோதனைகள் லெமூரிய தமிழர்களே இடம்பெயர்ந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று இருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக உள்ளது என கூறலாம்.
அந்த வகையில் மதுரையில் கபாடபுரத்தில் இருந்து தான் தமிழ் நூல்கள் முதலில் தோன்றியுள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். உலகில் ஏற்பட்ட டெக்கானிக் மாற்றங்கள் மற்றும் கடல் மட்டங்களில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாக தமிழ் ராஜ்ஜியங்கள் ஆஸ்திரேலியாவிற்கு அருகில் இருந்திருக்க வேண்டும்.
ஆரம்பக் காலத்தில் ஆஸ்திரேலியாவானது லெமூரியா கண்டத்தோடு ஒட்டி இருக்கக்கூடிய சாத்திய கூறுகள் அதிகளவு உள்ளது. எனவே மனிதர்களின் முதல் இடப்பெயர்வானது ஆசியா மற்றும் யுரேஷியாவில் இருந்து 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் நடந்துள்ளது.
ராமு சென் மற்றும் பலர் மேற்கொண்ட மரபியல் ஆய்வில் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு பழங்குடியினரின் தலைமுடியில் குறைந்த ஐரோப்பிய கலவையுடன் உயர்ந்த டி என் ஏக்கள் மட்டுமே இருந்தது.
மேலும் இந்த பழங்குடி மக்கள் தொகையின் மூதாதையர்கள் யுரேசிய மக்களிடம் இருந்து 62 முதல் 75 BP வரை பிரிந்து உள்ளனர். அதே சமயம் ஐரோப்பா மற்றும் ஆசிய மக்கள் 25 முதல் 38 ஆண்டுகள் BP வரை பிரிந்து இருக்கிறார்கள்.
இதன் மூலம் 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு லெமூரிய பகுதியில் இருந்த மக்கள் தான் ஆஸ்திரேலிய பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றிருக்கிறார்கள் என்று நாம் கூறலாம்.