• September 21, 2024

“உங்களை ஊக்கப்படுத்தும் உன்னத வரிகள்..!” – வலிகளை விட்டு.. வெற்றியடைய வாசி..

 “உங்களை ஊக்கப்படுத்தும் உன்னத வரிகள்..!” – வலிகளை விட்டு.. வெற்றியடைய வாசி..

motivation

பொறுத்திருந்த காலங்கள் போதும்.. பொங்கி எழக்கூடிய நேரம் இது. நடந்த இழப்புக்களை மறந்து நாளைய வெற்றியை அடைய நீ தன்னம்பிக்கையோடு நடையிட உன்னை ஊக்கப்படுத்தும் வரிகள் இவையே.

வெற்றியடைய நீ ஆயுதம் ஏந்த வேண்டாம். உன் அறிவினை கூர்மையாக்கினாலே போதும். பல எதிரிகளையும், துரோகிகளையும் நீ சந்திக்கும் போது ஏற்படும் தோல்விகளை கண்டு துவலாமல் எப்படி வெற்றி கொள்ள வேண்டும் என்பதற்கான வியூகங்களை தொடர்ந்து வகுக்க வேண்டும்.

motivation
motivation

தொடர்ந்து அடி மேல் அடி உங்களுக்கு விழுகிறது என்றால் அதை பற்றி நீங்கள் கவலைப்படாமல், எதையும் தாங்கும் இதயத்தோடு நின்றால் அங்கு இருந்து தான் உங்களுக்கு வாழ்க்கை பாடம் துவங்குகிறது, என்பதை புரிந்து கொண்டாலே போதும் நீங்கள் வெற்றியை நெருங்கி செல்கிறீர்கள் என்று அர்த்தம் ஆகும்.

உங்கள் மனம் எப்போது நல்லதை நினைகிறதோ, அப்போது நல்லதே நடக்கும். மனித வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்ற நேர்மறை எண்ணத்தை உங்கள் மனதில் நீங்கள் வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.

உங்களை நோக்கி வந்த வாய்ப்புகள் விலகி ஓடினாலும், நீங்கள் அதைப் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. விதி என்ற ஒன்று உங்கள் வெற்றியை நிர்ணயிக்காது.

motivation
motivation

நம்பிக்கை என்ற சாவி உங்கள் மனதில் இருக்கும் வரை, உங்களால் நிச்சயம் வெற்றி என்ற கதவை திறக்க முடியும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கையை வைத்து விடுங்கள்.

வெற்றியின் மிகப்பெரிய ரகசியமே நீ அதை நேசித்து தொடர்ந்து செய்வதால் மட்டுமே உனக்கு கட்டாயம் கிட்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

உன் உழைப்பை அதிகமாகி அதில் முழு நேரமும் ஈடுபட்டு உன் சிந்தனையை உன் வெற்றியின் பக்கமே செலுத்துவதின் மூலம் எவ்வளவு பெரிய சோதனைகள் வந்தாலும், அதை எதிர்த்து நிற்கும் உன் தன்னம்பிக்கை உன்னை வெற்றியாளனாக விரைவில் மாற்றம்.

motivation
motivation

யாருக்காகவும் எதற்காகவும் உன் ஆசைகளை நீ புதைத்துக் கொள்ளாமல் உன் இலக்குகளை நோக்கி பயணம் செய்வதை உறுதியாக நீ மேற்கொள்ளும் போது வானம் உன் வசமாகும்.

உறக்கம் என்பது எப்படி ஒரு விழிப்பதற்கோ அது போலவே நீ வீறு கொண்டு எழுவதின் மூலம் உன் தோல்விகள் தவிடு பொடியாகி வெற்றியின் படிக்கட்டில் நீ நிற்பாய்.

உன் தகுதி உயரும்போது நீ மற்றவர்களை விட உறுதியாகவும், உயர்வாகவும் தோன்றுவாய். அதற்காக நீ உன் தகுதிகளை எப்போதும் வளர்த்துக் கொள்ள தயக்கம் காட்டாதே. மற்றவர்களை விட நீ தனித்துவமாக தெரிவதால் மட்டுமே வெற்றிகள் எளிமையாகும்.