“ஐயோ…நெஞ்சு பொறுக்கவில்லையே..!” – நாங்குநேரி சம்பவம்!

nanguneri-incident
எத்தனை கோடி ஆண்டுகள் கடந்தாலும் இந்த பூமியில் ஜாதி ஆதிக்கம் தொலையாதா? என்று நெஞ்சு பதறி புலம்பக் கூடிய வகையில் நாங்குநேரியில் நடந்திருக்கும் அதிர்ச்சி சம்பவத்தால் தமிழகமே பதறி உள்ளது என்று கூறலாம்.
பிஞ்சிலே இத்தகைய ஜாதி உணர்வுகள் எப்படி ஆழ ஊன்று இருக்கும் என்று தெரியாமல் அனைவரும் திக்கு முக்காட கூடிய வகையில் நடந்த சம்பவம் உள்ளது. அப்படி என்ன நடந்தது என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தெரு பகுதியை சேர்ந்த முனியாண்டி மற்றும் அம்பிகா தம்பதிகளின் குழந்தைகள் ஆன சின்னத்துரை வயது 17, சந்திரா வயது 14. இவர்கள் வள்ளியூரில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பில் படித்து வந்திருக்கிறார்கள்.

இதில் சின்ன துரையை அவருடன் பயிலும் சில மாணவர்கள் ஜாதி ரீதியாக துன்புறுத்தி இருப்பதை தெரிய வந்ததை அடுத்து பள்ளியில் இருக்கக்கூடிய தலைமை ஆசிரியரிடம் புகார் அளிக்க, அந்த தலைமையாசிரியரும் சின்னத்துரையை துன்புறுத்திய மாணவர்களை அழைத்து கண்டித்து புத்தி மதிகளை கூறியிருக்கிறார்.
எனினும் மனதுக்குள் தன்னை பற்றி புகார் அளித்து விட்டார்களே என்ற கோபத்தில் இருந்த இவர்கள், சின்னத்துரை குடும்பத்தாரை பழிவாங்க இரவு 10 மணி அளவில் வீட்டுக்குள் நுழைந்து சரமாரியாக அரிவாளால் வெட்டி இருக்கிறார்கள்.
இதனை அடுத்து அங்கிருந்த வயதான இவரின் தாத்தா கிருஷ்ணன் (59) மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்தார். மேலும் கடுமையான வெட்டு காயங்களோடு சின்னத்துரை மற்றும் சந்திரா பாளையங்கோட்டையில் உள்ள ஹை கிரவுண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சின்ன துறையின் வீட்டுக்குள் நுழைந்த மாணவர்கள் சரமாரியாக தன் அண்ணனை வெட்டுவதைப் பார்த்து தடுக்க வந்த தங்கையும் விட்டு வைக்காமல் கொலை வெறியோடு தாக்கி இருக்கிறார்கள்.
இதனை அடுத்து அறிவாளால் வெட்டிய மாணவர்களின் மீது நடவடிக்கை எடுத்த போலீசார் மேலும் ஒருவரை இன்று கைது செய்த நிலையில் மொத்தமாக இந்த வழக்கில் இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
பள்ளியில் நண்பர்களாக பழகி சிறகு விரித்து படிக்க வேண்டிய இந்த சிறுவர்களின் மனதில் ஜாதி என்ற நஞ்சை விதைத்து அதை ஆழமாக வளர்த்து கொலை செய்யும் அளவுக்கு அவர்களின் மனநிலை மாறி இருப்பதைப் பார்த்து தமிழகமே பதை, பதைத்து விட்டது என்று கூறலாம்.