• June 4, 2023

Tags :tamil kavithaigal

கவிதைகள்

கரம் தந்து முகவரி தந்த முதியோர்

வாங்கிய ஒரு வரமாய் பெற்றெடுத்த பிள்ளைகள்தாங்கிய படகு மரமாய் சென்று வந்த எல்லைகள் வாரிசுகள் என்றல்லவா வாரியணைத்து வளர்த்தார்கள்வாய் மொழிந்ததற்கே வாரியிறைத்து திளைத்தார்கள் வாலிபங்கள் வந்தேற வலிமை காலங்கள்வலைத்து கட்டிய கோலாகலத் திருமண விழா தருணங்கள் மருமகளாய் கால்வைத்தாள்மஹாலெட்சுமி மருமகள்தலையணை மந்திரங்களால் தலைவனை மந்திரிக்கஇல்லறமங்கே அறம்மாறிநல்லறமன்றே நரகமாய்.. கடும் வார்த்தைகளால் வீசிடும் புயலைப் போல் புதல்வர்கள்தாங்கிய தூண்களாய் சாய்ந்த தந்தை தாய் கள்ளமில்லா உள்ளமெல்லாம் முகம்மாறிய நடிப்புத் திரைகளில்வேறு வழியின்றி சரண் புகுந்த அநாதை இல்லங்கள் நினைவுகளோ […]Read More

கவிதைகள்

கண்களும் கண்ணீரும்!

காதலிப்பவர்களுக்குகண்களே கவிதை கவிஞர்களுக்கோ கண்களேகரு விதை கண் மருத்துவர்களுக்கோ கண்களே வாழ்க்கை கண் பார்வையற்றவர்களுக்கோகண்களே கனவு மேடை மனிதர்களுக்கு கண்களேஉன்னத கருவி இந்த எல்லா கண்களுக்கும் கண்ணீர்மட்டுமே ஆறுதல் அருவி ஏன் கடவுளுக்கும் கண்ணிருந்தால்அவனுக்கும் அது தான்ஆறுதல் என்று தெரிவிRead More

கவிதைகள்

இரு செவிகள் கேட்கும்படி பறை கொட்டுவோம்!

சாதியில்லா சமுதாயத்தை உருவாக்குவதுஇளைஞர்கள் கையிலே! மனிதன்,வீரத்திற்கு சிலை வைத்தான்,விடுதலைக்கு சிலை வைத்தான்,அழகுக்கு சிலை வைத்தான்,அறிவுக்கு சிலை வைத்தான், ஆனால்,அன்புக்கு சிலை வைக்கவில்லை,அன்பு ஓர் அற்புத உணர்வு!அது அனைத்து உயிர்களிடமும் உள்ளது… நிலத்தின் அடிப்படையாகநாடு பிரிக்கப்பட்டது,மொழியின் அடிப்படையாக,மாநிலம் பிரிக்கப்பட்டது, ஆனால்,மனிதனை அடிப்படையாக கொண்டு,எந்த மதமும், எந்த சாதியும் ,பிரிக்கப்படவில்லை என்பது, வெறும் கண்களால் காற்றைப்பார்ப்பதர்க்கு சமம்… அன்று எவனோ!திணித்த மூடநம்பிக்கை,சாதி, மதம், இனம்இவையெல்லாம் கலந்து,நம்மை களங்கப்படுத்துகிறதே! புள்ளிகள் இருந்தும்,கோலமிடமுடியாத, நட்சத்திரகூட்டங்களை போல,பல சாதிகள் கூட்டம், கூட்டமாக இருந்தும்..ஒன்று சேர்க்கமுடியாமல்,தவிக்குதே! […]Read More

சிறப்பு கட்டுரை

அப்பா – என்றுமே ஆச்சரியத்தின் அப்பப்பா

சிறு வயதில்..குறும்புகள், தவறுகள் செய்யும் போதெல்லாம், “இப்படியெல்லாம் செய்தால் பூதம் பிடித்து விடுமென்று” பலர் என்னை அதட்டியதுண்டு…! அன்றெல்லாம் என் அப்பாவின் விரல்களைப் பற்றிக் கொண்டு “எங்கே அந்த பூதங்களை வரச்சொல்லுங்கள்” என்று தைரியமாக நான் சொல்லியதுண்டு..!! அதிகம் பேசாத ஒரு அழகான உறவு அப்பா! ‘நிமிர்ந்த நெஞ்சும், நெருப்பு போன்ற பார்வையும் பாரதிக்கு தான் உண்டு’ என்று யார் சொன்னால், நம் அப்பாவுக்கும் உண்டு. ஒரு கண்ணில் கோபம் வந்தாலும், மறு கண்ணில் ஈரம் நின்றாலும், […]Read More

கவிதைகள்

அன்பே! நீ மாறிவிடு

அன்பே! நீ காற்றாய் மாறிடு!எனைத் தொட்டுத் தழுவி கிறக்கிடு!தலை கோதி வருடி மயக்கிடு!சுவாசக் காற்றில் கலந்து எந்தன்மூச்சாய் மாறி வாழ்ந்திடு! அன்பே! நீ நீராய் மாறிடு!மழைத் துளியாய் முத்தமிடு!இடி மின்னி முழங்கிப் பொழிந்திடு!அதிரடி அன்பில் நனையவிட்டுமேனி நடுங்கச் செய்திடு! அன்பே! நீ நெருப்பாய் மாறிடு!காதல் நெய்யில் நனைத்திடு!மோக நெருப்பில் கொளுத்திடு!செந்நீரும் வற்றிப் போகுமளவுக்குதாகத்தில் என்னைத் தவிக்கவிடு! அன்பே! நீ நிலமாய் மாறிடு!எங்கிருந்தாலும் ஏந்திடு!சலிப்பின்றி வளங்களை ஈந்திடு!தாயைப் போல என்னைத் தாங்கிஎனக்கே எனக்காய் வாழ்ந்திடு! அன்பே! நீ வானாய் […]Read More

கவிதைகள்

நீயே என் ஓளடதம்!!

எனக்கான உன் நினைவுகள்;வேதாளம் போல முதுகு மீதேறிஅமர்ந்து இறங்க மறுக்கின்றன…! நினைத்து புதைந்து போவதற்கானவரிகள்… எழுத்துக்கள்,லாவகமாக விரல் பிடித்துமார்பின் மீது தலை வைத்துசில்லென்ற ஸ்பரிசம் தொடுக்கின்றன…!! கண்ணீர் துளிகள்…பெருமூச்சுகள்,வாழாத வாழ்க்கையின் தேடல்கள்;யாருமற்ற தனிமையின் உணர்வுகள்;எல்லாவற்றிலும் எனதாகிப்போனவனேதூரத்தில் நின்று ஏன்வேடிக்கை பார்க்கிறாய்…?! என் பொழுதுகளைஆக்கிரமித்துக் கொள்ளும்,மறந்திருந்த…மறைந்திருந்தஉணர்வின் நினைவுகளைதட்டி எழுப்பும்… நீநீயே என் ஓளடதம்!!!Read More

கவிதைகள்

இல்லறம் ஆளும் பெண்ணே!

இல்லறம் ஆளும் பெண்ணே!நீ உன் உறவுகளின் நல்லறம் கருதிஉன்னைத் தொலைப்பது ஏனோ? திருமணம் என்னும் தூண்டிலில் நீ சிக்காமல்,உன் சிறகுகளை விரித்துஉன் திறமையை நோக்கி நீ செல்.. வானவில் உன் வாழ்வில்வண்ணம் தூவதூயவள் நீயும் தலைநிமிர்ந்து செல்..!Read More