காதலிப்பவர்களுக்கு
கண்களே கவிதை
கவிஞர்களுக்கோ கண்களே
கரு விதை
கண் மருத்துவர்களுக்கோ கண்களே வாழ்க்கை
கண் பார்வையற்றவர்களுக்கோ
கண்களே கனவு மேடை
மனிதர்களுக்கு கண்களே
உன்னத கருவி
இந்த எல்லா கண்களுக்கும் கண்ணீர்
மட்டுமே ஆறுதல் அருவி
ஏன் கடவுளுக்கும் கண்ணிருந்தால்
அவனுக்கும் அது தான்
ஆறுதல் என்று தெரிவி