சத்தமின்றி சாதனைகள் செய்வோம்!
வெடித்துச் சிதறிடும்
வரை தான் எரிமலை
வெடித்த பின்னே தரைமட்டமாகி
தனிந்திடும் அதன் நிலை
சீறிப் பாய்ந்திடும்
வரை தான் கடலலை
கரை தொட்ட பின்னே தன்னிலை மறந்தே பின்வாங்கிடும் அலை
உயிர் கொண்டாடும்
வரை தான் உடல் நிலை
உயிர் உதறிய பிறகு
சொல்லவே தேவையில்லை
மாற்றங்களை அப்படியே
ஏற்றுக் கொள்வோம்
எங்கே தேவையோ அங்கே சாந்தமாய் செல்வோம்
சத்தமின்றி சாதனைகள்
செய்வோம்
சாதனைகள் வழியே
உலகுள்ள வரை அழியாமல் வாழ்வோம்