இயற்கை கவிதை

இறைவா! உன்னை வேண்டுகிறேன்!!

விலங்காய் மனிதன் உருவெடுக்க,
விலங்கினும் மிஞ்சிய கொடூரனாய்…
தன் ஆறாம் அறிவினை மறந்து,
அடையாளத்தை துலைத்து,
ஆணவத்துடன்,
தன் ஆசைக்காக இச்சைகாக
பெண் பாலினத்தின் மேல்
படையெடுத்த அந்த நோடி…

நம்மை நாமே அழித்துக் கொள்ளும்
ஓர் இனமாய், வாழ்வதற்கு
நம் அறிவினை அகற்றி
ஐந்தறிவுடன், விலங்காய் பறவையாய்
தன் இனத்தை காப்பாற்றும்
ஓர் அறிய உயிரினமாய்,
வீடுதோறும் நன்றியுடன் நாயாய்,
பாசத்துடன் பானை வயிற்று யானையாய்,
பகுத்துண்டு வாழும் காக்கை
குருவியாய்,
உருவம் மாறி உலகினில் வாழ்ந்திட,
இறைவா! உன்னை வேண்டுகிறேன் !!!!

K. கார்த்திக்

K. கார்த்திக்

செஞ்சிக் கோட்டை,
விழுப்புரம் மாவட்டம்.


My Podcast

Instagram

Latest Posts

உங்கள் படைப்புகளை அனுப்ப