• April 10, 2024

இரு செவிகள் கேட்கும்படி பறை கொட்டுவோம்!

 இரு செவிகள் கேட்கும்படி பறை கொட்டுவோம்!

சாதியில்லா சமுதாயத்தை உருவாக்குவது
இளைஞர்கள் கையிலே!


மனிதன்,
வீரத்திற்கு சிலை வைத்தான்,
விடுதலைக்கு சிலை வைத்தான்,
அழகுக்கு சிலை வைத்தான்,
அறிவுக்கு சிலை வைத்தான்,

ஆனால்,
அன்புக்கு சிலை வைக்கவில்லை,
அன்பு ஓர் அற்புத உணர்வு!
அது அனைத்து உயிர்களிடமும் உள்ளது…


நிலத்தின் அடிப்படையாக
நாடு பிரிக்கப்பட்டது,
மொழியின் அடிப்படையாக,
மாநிலம் பிரிக்கப்பட்டது,

ஆனால்,
மனிதனை அடிப்படையாக கொண்டு,
எந்த மதமும், எந்த சாதியும் ,
பிரிக்கப்படவில்லை என்பது, வெறும் கண்களால் காற்றைப்பார்ப்பதர்க்கு சமம்…

அன்று எவனோ!
திணித்த மூடநம்பிக்கை,
சாதி, மதம், இனம்
இவையெல்லாம் கலந்து,
நம்மை களங்கப்படுத்துகிறதே!

புள்ளிகள் இருந்தும்,
கோலமிடமுடியாத, நட்சத்திர
கூட்டங்களை போல,
பல சாதிகள் கூட்டம், கூட்டமாக இருந்தும்..
ஒன்று சேர்க்கமுடியாமல்,
தவிக்குதே! நம் இந்தியா!!


அது போல் இல்லாமல்,

எறும்புகள் ஒன்றுசேர்ந்து,
புற்றை உருவாக்குகின்றன!

மழைத்துளிகள் ஒன்றுசேர்ந்து,
வெள்ளத்தை உருவாக்குகின்றன!


ஆறுகள் ஒன்றுசேர்ந்து,
சமுத்திரத்தை உருவாக்குகின்றன!

இளைஞர்கள் நாம் ஒன்றுசேர்ந்து,
மனிதத்தை உருவாக்குவோம்!


எழுந்துவா! இளைஞனே! எழுந்து வா!!!

சாதி என்னும் சாக்கடையில்,
மண்டியிட்டு கிடக்கும், மனிதர்களுக்கு ஒற்றுமையை புகட்டு,
இரு செவிகள் கேட்கும்படி, பறை கொண்டு
அவர்களை எழுப்பு..

பிரிந்தது போதும்,
அழிந்தது போதும்,
ஒற்றுமையாலே! இவுலகம் சேரும்….!


உன் சாதி கற்றுகொடுத்ததைவிட,
உன் மதம் கற்றுகொடுத்ததைவிட,
உன் கல்வி கற்றுக்கொடுத்த,
ஒற்றுமையை, ஆயுதமாக்கு..
சாதி மதத்தை காகிதமாக்கு….

அதை, கிழித்து ஏறி(ரி)..
இதற்கு மாணவர்களே! தீ பொறி…


மாணவர்கள் நினைத்தால்,
மதமும் மண்ணாகும்..!
சாதீயும் அது, சாம்பலாகும்…!!

S. Aravindhan Subramaniyan

கவிஞன் தில் சிவா

Writer




1 Comment

  • நிழல் தரும் மரமோ என்று நிமிர்ந்து பார்த்தேன்
    நீங்கள் ! மரமாய் அல்ல. வரமாய் !
    இதயத்தின் இருள் விடைக்கேட்டது.
    விரட்டிய விளக்கின் ஒளி தீபம் அல்ல. தீபன் ஒளி!
    உயிர்களும் உலகமும் பயன் பெற பொழியும் மழையில்….
    உங்கள் மலர்ந்த துளிகள் !
    உயிர்த்துளிகள்.
    மகிழ்வில்
    வாழ்த்துக்களுடன்
    சகோதரன்.
    தாயுமானவன் தாயுமானவன்
    முகநூல்

Comments are closed.