
கடந்த ஜூன் மாதம் லடாக்கில் உள்ள கல்வான் பகுதியில் சீனப் படையினர் இந்திய ராணுவ வீரர்களுடன் மோதிக் கொண்டதில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனிக்கு இந்திய அரசாங்கம் சார்பில் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அவரது மனைவி அவரது சார்பில் வாங்கிகொண்டார்.
சமீப காலங்களில் சீன ராணுவ படையினரும் இந்திய ராணுவ படையினருக்கும் அவ்வப்போது மோதலில் ஈடுபடுகின்றனர். நாட்டு எல்லையில் ராணுவ வீரர்கள் மாற்றி மாற்றி துப்பாக்கி சூடு நடத்திவந்தனர்.

கடந்த ஜூன் 15ஆம் தேதி லடாக்கின் கிழக்கில் உள்ள கால்வான் பகுதியில் இரு நாட்டின் ராணுவ வீரர்களுக்கும் இடையே பயங்கரமான மோதல் ஏற்பட்டது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 20 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அந்த வீரர்களின் வீர மரணத்தை கௌரவிக்கும் வகையில் இந்திய அரசு அவர்களுக்கு விருதுகளை வழங்கியது. இறந்து போன 20 வீரர்களில் ஒருவரான தமிழகத்தை சேர்ந்த பழனி அவர்களுக்கும் இந்த விருது அறிவிக்கப்பட்டது.

பழனியின் சார்பில் அவரை இழந்த அவரது மனைவி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து இந்த விருதை பெற்றுக்கொண்டார். பழனியோடு சேர்த்து 5 வீரர்களுக்கு வீர் சக்ரா விருதும் 15 பேருக்கு சேனா மெடல்களும் குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது.
- விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா?
- விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன?
- மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்!
- ‘அன்பே சிவம்’ என்ற திருமந்திரத்தின் ரகசியம் என்ன?
- ஆடிப்பெருக்கு அன்று பெண்கள் இதை ஏன் செய்கிறார்கள்? காரணம் தெரிந்தால் சிலிர்த்துப் போவீர்கள்!
கல்வான் மோதலில் உயிர் தியாகம் செய்த 20 இந்திய ராணுவ வீரர்களுக்கும் Deep Talks தமிழ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதுபோன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.