• September 21, 2024

சுட்டி குழந்தைக்கு தவழ்க்க கற்றுக்கொடுக்கும் குட்டி நாய் !!!

 சுட்டி குழந்தைக்கு தவழ்க்க கற்றுக்கொடுக்கும் குட்டி நாய் !!!

வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் செய்யும் சுட்டித்தனமான குறும்புத்தனம் அடங்கிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் எப்போதுமே வலம் வந்து கொண்டிருக்கும். அந்த வகையில் தன் வீட்டில் உள்ள குழந்தைக்கு தவழ்க்க சொல்லிக் கொடுக்கும் ஒரு செல்ல நாயின் வீடியோ தற்போது நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

குழந்தைகள் நடக்கக் கற்றுக் கொள்வதற்கு முன் தவழ்க்க முயற்சிக்கும். அப்படி தவழும்போது பெற்றோர்கள் குழந்தையை கண்காணித்து அதற்கு தவழ்க்க சொல்லிக் கொடுப்பார்கள். ஆனால் ஒரு நாய் குழந்தைக்கு தவழ்க்க சொல்லிக் கொடுக்கும் இந்த வீடியோ பார்ப்பவர்களுக்கு பெரும் வியப்பை உண்டாகிறது.

Viral video

இந்த வீடியோவில் கீழே விரிக்கப்பட்டுள்ள 2 mat-களில் நாயும் குழந்தையும் படுத்து இருக்கிறது. கஷ்டப்பட்டு தவழ்க்க முயற்சிக்கும் அந்த குழந்தையை பார்த்த நாய், “என்னை பார்த்து தவழ்க்க கற்றுக் கொள்.”, எனக் கூறுவது போல குழந்தைக்கு தவழ்ந்து காட்டுகிறது.

பின் அந்த குழந்தைக்கு அருகில் சென்று அந்த குழந்தையை கொஞ்சி விட்டு மீண்டும் தவழ்க்க சொல்லிக்கொடுக்கிறது. இந்த வீடியோ பார்ப்பதற்கே மிகவும் cute – ஆக இருக்கிறது.

இந்த வீடியோவைப் பார்க்கும் நெட்டிசன்கள் அந்த நாயின் செயலை பாராட்டி பல புகழ்ச்சி கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

வீட்டில் வளரும் செல்லப் பிராணிகள் அந்த வீட்டில் இருக்கும் குழந்தைகளை எந்த அளவிற்கு பாசத்துடன் பார்த்துக் கொள்கிறது என்பதற்கு இந்த வீடியோ ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

இந்த செல்ல நாய் குழந்தைக்கு தவழ்க்க சொல்லிக் கொடுக்கும் வீடியோவை கீழுள்ள டுவிட்டர் பதிவில் காணுங்கள்.

இது போன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.