
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சமீபத்தில் ஆன் குழந்தை பிறந்தது. ரசிகர்கள் பலரும் அவரை வாழ்த்தி வந்த நிலையில், இன்று தனது சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்ட பதிவு ரசிகர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பாக இருக்கிறது.
கடந்த ஜூலை 12-ஆம் தேதி தனக்கு மகன் பிறந்த செய்தியை ரசிகர்களுக்கு சந்தோஷமாக தெரிவித்தார் சிவகார்த்திகேயன். தன் தந்தையே மீண்டும் மகன் ரூபத்தில் பிறந்துள்ளார் என்பதை உணர்த்தும் வகையில் உருக்கமான சமூக வலைதள பதிவின் மூலம் இந்த அறிவிப்பை சிவா விடுத்திருந்தார்.

ஜூலை 12 அன்று சிவகார்த்திகேயன் வெளியிட்ட ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.
இதை தொடர்ந்து இன்று அவர் வெளியிட்டுள்ள பதிவில் தனது மகனின் பெயரை குறிப்பிட்டுள்ளார். சிவகார்த்திகேயன் அவரது மகனுக்கு “குகன் தாஸ்” என பெயர் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயனின் தந்தையின் பெயர் தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது அப்பாவின் பெயரை மகனுக்கு சூட்டி மீண்டும் தனது அப்பாவை குடும்பத்தினர் மன இல்லங்களில் கொண்டுவந்துள்ளார் சிவகார்த்திகேயன். அவர் வெளியிட்டுள்ள பதிவில் “எங்கள் அன்பு மகனை வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள், உங்கள் அன்போடும் ஆசையோடும் குகன் தாஸ் என பெயர் சூட்டி இருக்கிறோம் ” எனக் குறிப்பிட்டுள்ளார்.
- விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா?
- விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன?
- மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்!
- ‘அன்பே சிவம்’ என்ற திருமந்திரத்தின் ரகசியம் என்ன?
- ஆடிப்பெருக்கு அன்று பெண்கள் இதை ஏன் செய்கிறார்கள்? காரணம் தெரிந்தால் சிலிர்த்துப் போவீர்கள்!
இப்பதிவுடன் சேர்த்து தனது மகனை முத்தமிடும்படி இருக்கும் புகைப்படத்தை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். SK மற்றும் குட்டி SK வின் இந்த Cute ஆன புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயன் வெளியிட்ட Twitter பதிவை கீழே காணுங்கள்.