
தல அஜித் ரசிகர்களுக்கு திடீரென ஒரு இன்ப அதிர்ச்சியை ‘வலிமை’ படக்குழுவினர் கொடுத்துள்ளனர். வலிமை திரைப்படத்தின் First Look வெளியானதைத் தொடர்ந்து இப்படத்தை குறித்த அடுத்த Update இன்று வெளியாகியுள்ளது.
ஏற்கனவே வலிமை திரைப்படத்தின் First Look Motion Poster வெளியாகி இந்தியாவிலேயே அதிக Youtube பார்வைகளை பெற்ற Motion Poster என்ற சாதனையை படைத்திருந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் Single பாடலான ” நாங்க வேற மாரி” பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
பொதுவாக யுவன் சங்கர் ராஜாவும் தல அஜித்தும் இணைந்தாலே பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பும் என்பது எழுதப்படாத கோலிவுட் விதி. இவர்கள் கூட்டணியில் வெளிவந்த தீனா, பில்லா, மங்காத்தா, ஆரம்பம், நேர்கொண்ட பார்வை, போன்ற சூப்பர் ஹிட் Album-கள் வரிசையில் வலிமை திரைப்படத்தின் Album-ம் இணையும் என எதிர்பார்க்கலாம்.
இன்று வெளியாகியுள்ள ” நாங்க வேற மாரி” பாடலை குறித்த Tweet-ல் யுவன் சங்கர் ராஜா, தல அஜித்தின் 30 ஆண்டு கால திரையுலக பயணத்தை குறிக்கும் வகையில் இப்பாடல் வெளியிடப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார். “நாங்க வேற மாரி” பாடலை இப்படத்தின் இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து அனுராக் குல்கர்னி பாடியுள்ளார். சமீபத்தில் பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதி அசத்திய விக்னேஷ் சிவன் இப்பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளார்.
வலிமை திரைப்படத்தில் தல அஜித்துடன் இணைந்து ஹுமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகி பாபு, புகழ் மற்றும் பலர் நடித்துள்ளனர். “நாங்க வேற மாரி” பாடல் வெளியான சில நிமிடங்களில் இருந்தே தல அஜித் ரசிகர்களும் சினிமா ரசிகர்களும் இப்பாடலை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
இப்பாடலின் இசையையும், வரிகளையும் வைத்துப் பார்க்கும்போது இப்பாடல் வலிமை திரைப்படத்தின் Intro பாடலாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.
இப்பாடல் இன்று இரவு 10:45 மணிக்கு வெளியாக உள்ளது என்ற அறிவிப்பை ஒரு போஸ்டர் மூலமாக படக்குழுவினர் ரசிகர்களுக்கு தெரிவித்தனர். அந்த போஸ்டரில் தல அஜித்தின் தோற்றம் ரசிகர்களை உற்சாகத்தின் உச்சியில் அமர வைத்தது என்றே கூறலாம்.
மிகவும் இளமையான தோற்றத்தில் Mass-ஆக தல அஜித் கைகட்டி நிற்கும் படி ஒரு புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வலிமை திரைப்படம் விரைவில் ரசிகர்களுக்கு திரையில் விருந்து அளிக்கும் என எதிர்பார்க்கலாம்.
“நாங்க வேற மாரி” பாடலின் லிரிக் வீடியோவை கீழே காணுங்கள்.