• October 13, 2024

மக்கள் பொதுவாக அறிந்திராத இந்தியச்சட்டம் எது?

 மக்கள் பொதுவாக அறிந்திராத இந்தியச்சட்டம் எது?

கல்லூரி சேர்ந்த நீங்கள், புதிதாக பைக் ஒன்றை வாங்குகிறீர் என்று எண்ணிக் கொள்வோம். ஒரு நாள், உங்களின் நெடுநாள் நண்பன் பைக்கை ஓட்ட கேட்கிறான். நீங்களும் பழைய நன்றிக்காக கொடுத்து விடுகிறீர். அவன் ஓட்டிச் செல்லும் போது, ஒரு தண்ணீர் லாரியில் மோதி தலையில் அடிப்பட்டு மாண்டு போகிறான்.

இப்போது போலீஸ் வருகின்றனர். நடந்த சம்பவத்தை ஆராய்கையில், இறந்த இளைஞனுக்கு வயது 17 என்று அறிந்து கொள்கின்றனர். அவன் தலைக்கவசம் அணியவில்லை என்று தெரிகிறது.

வண்டியைக் கொண்டு மோதிய 40 வயது லாரி ஓட்டுனர் குடித்திருக்கவில்லை. இருக்கை பெல்ட்டு அணிந்திருக்கிறார். வேகமாக ஓட்டவும் இல்லை.

இப்போது காவலர்கள் யார் மீது வழக்கு போடுவார்கள்? சட்டப்படி கைது செய்யப்பட வேண்டியவர்கள் இரண்டு பேர்.

1 – லாரி ஓட்டுனர்

அலட்சியமாக வண்டி ஓட்டியதற்காக, 304 – ஏ பிரிவின் கீழ், இரண்டு ஆண்டுகள் வரை அவருக்கு தண்டனையோ அபராதமோ இரண்டுமோ வழங்கப்படும்.

2 – நீங்கள்

சாத்தியமான கொலைக் குற்றத்திற்காக, ஓட்டுனர் உரிமம் இல்லாத நபருக்கு உங்கள் வாகனத்தை ஓட்டக் கொடுத்தததற்காக 304 (II) பிரிவின் கீழ், ஆயுள் தண்டனையோ பத்து ஆண்டுகள் சிறையோ அபராதமோ இரண்டுமோ வழங்கப்படும்.[1]

பலருக்கு இரண்டாவதாகச் சொன்னச் சட்டத்தைப் பற்றி தெரிந்ததிருக்க வாய்ப்பில்லை. சமீபத்தில் ஐதராபாத்தில் இத்தகைய ஒரு நிகழ்வு நடந்தது. ஓட்டுனர் உரிமம் இல்லாத தனது தோழிக்கு வாகனம் ஓட்டக் கொடுத்தததற்காக ஒரு மாணவியின் மீது 304 (II) பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டது. [2]

எனவே, அடுத்த முறை உங்கள் வாகனத்தைக் கடன் கொடுப்பதற்கு முன் யோசியுங்கள்.

அடிக்குறிப்புகள்

[1] IPC Section 304 – Punishment for culpable homicide not amounting to murder
[2] Hyderabad: Student dies in accident, friend booked for giving bike | Hyderabad News – Times of India