• October 12, 2024

“எங்க ரெண்டு பேருக்கும் தங்கம் கொடுங்க sir”, Olympics-ல் நடந்தது என்ன ?

 “எங்க ரெண்டு பேருக்கும் தங்கம் கொடுங்க sir”,  Olympics-ல் நடந்தது என்ன ?

உலகில் உள்ள அனைத்து விளையாட்டு ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தும் வகையிலான ஒரு அதிசய நிகழ்வு நட்புக்கு இலக்கணமாக டோக்கியோ ஒலிம்பிக்ஸில் அரங்கேறியுள்ளது.

கடந்த ஆகஸ்ட்டு 1ஆம் தேதி ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டி Tokyo ஒலிம்பிக்ஸில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பல திறமையான வீரர்கள் கலந்துகொண்டனர். போட்டியின் முடிவில் கத்தார் நாட்டை சேர்ந்த முட்டாஸ் ஈஷா பார்ஷிம் மற்றும் இத்தாலி நாட்டை சேர்ந்த ஜியான்மார்கோ தம்பேரி ஆகிய இருவரும் சமமாக 2.37 மீட்டர் உயரத்தை தாண்டி நடுவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தினர்.

Mutaz Barshim Secures high jump Gold

யாருக்கு தங்கம் வழங்க வேண்டும் என முடிவெடுக்க முடியாமல் இருவரையும் மீண்டும் ஒரு முறை உயரம் தாண்டக் கோரி நடுவர் கேட்டபோது, கத்தாரை சேர்ந்த பார்ஷிம் நடுவரிடம் “இரண்டு தங்கப் பதக்கங்களுக்கு வாய்ப்பு இருக்கிறதா?” எனக் கேட்டார்.

நடுவரோ, “அது உங்கள் விருப்பம் உங்களுக்குள் பேசி முடிவெடுங்கள்” எனக்கூற, தம்பேறியும் பார்ஷிமும் ஒரு கண் அசைவில் தங்களது முடிவை எடுத்துவிட்டனர். இரண்டு தங்கப் பதக்கங்களை பெற்றுக்கொள்ள இரண்டு நாடுகளை சேர்ந்த வீரர்களும் சம்மதித்தனர்.

Just magical': joy for Tamberi and Barshim as they opt to share gold in  men's high jump | Olympic Games | The Guardian

இந்த நிகழ்வு அனைத்து தரப்பு விளையாட்டு வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் நெகிழ்ச்சி அளிக்கும் நிகழ்வாக மாறியது. இந்த நிகழ்வு நடைபெற்ற ஆகஸ்ட் 1-ஆம் தேதி நண்பர்கள் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகெங்குமுள்ள மக்களும் பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை பார்ஷிமுக்கும் தம்பேறிக்கும் தெரிவித்து வருகின்றனர். இது போன்ற நிகழ்வு விளையாட்டுத் துறையைச் சார்ந்த அனைவருக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பார்ஷிமும் தம்பேறியும் இரண்டு தங்கப் பதக்கங்களை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்த வீடியோவை கீழுள்ள ட்விட்டர் பதிவில் காணுங்கள்.