• October 3, 2024

சினேகா-பிரசன்னாவின் பெண் குழந்தையின் புகைப்படங்கள் வைரலாகின்றன

 சினேகா-பிரசன்னாவின் பெண் குழந்தையின் புகைப்படங்கள் வைரலாகின்றன

நட்சத்திர ஜோடிகளான சினேகா-பிரசன்னா இருவருக்கும், ஜனவரி 24ம் தேதி அன்று பெண் குழந்தை பிறந்தது. பிரசன்னாவின் பிறந்தநாளன்று, சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 7 மாத வயதுடைய தனது பெண் குழந்தையின் முதல் படத்தை பகிர்ந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு, நடிகர் பிரசன்னா தன் பெண் குழந்தையின் பெயர் “ஆத்யந்தா” என்று சமூக வலைத்தளத்தில் சொன்னார், அதை தொடர்ந்து, பெண் குழந்தையில் புகைப்படத்தை சினேகா முதலில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில் இவர்களின் மகனான விஹான் புகைப்படமும் இருக்கிறது. இந்த சிறிய குடும்பத்தில் இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

Sneha with her kids

பிரசன்னாவும் சினேகாவும் தனது அடுத்த குழந்தைக்கு ஆத்யா என்று பெயர் சூட்ட முடிவு செய்திருந்தார்கள். ஆனால் இரண்டாம் முறை பெண் குழந்தை பிறந்ததால், தம் வீட்டு பெரியவர்களுடன் ஆலோசித்து, ‘ஆத்யந்தா’ என்று பெயர் வைத்துள்ளனர். கடவுள் மஹாலக்ஷ்மியின் ஸ்லோகத்தில் வரும் இந்த பெயரின் பொருள் என்றென்றும் மற்றும் நித்தியம் என்பதாகும்.

இந்தியாவிலேயே முதல்முறையாக ரெட் ஒன் கேமராவின் படமாக்கப்பட்ட ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ திரைப்படத்தில் இருவரும் ஒன்றாக நடித்த பிறகு, 11 மே, 2012 அன்று சென்னையில் திருமணம் செய்து கொண்டனர்.

https://www.instagram.com/p/CEayQeYnuOC/