• December 3, 2024

23 வருட சூர்யாவின் திரைப்பயணம்!

 23 வருட சூர்யாவின் திரைப்பயணம்!

நடிகர் சூர்யா அவர்கள் திரைத்துறைக்கு வந்து இன்றோடு 23 வருடங்கள் ஆகிறது. அதை கொண்டாடும் வகையில் அவர்களின் ரசிகர்கள் சார்பாக #23YearsOfNerukkuNer கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இவர்களின் ரசிகர்களால் #Suriyaism எனப்படும் ஒரு Common DP சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

சூர்யாவின் முதல் திரைப்படமான ‘நேருக்கு நேர்’ வணிக ரீதியில் வெற்றி பெற்றது. 1997 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தை இயக்குனர் வசந்த் இயக்கியிருந்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்த நடிகர் சூர்யா அவர்கள். பல ஏற்றதாழ்வுகளை கடந்து ஒரு சில வெற்றிப் படங்களையும் தந்திருக்கிறார். 2011 ஆம் ஆண்டு அவர் நடித்த ‘பிதாமகன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு நடிகராக மட்டுமல்லாமல் கஷ்டப்படும் பல குடும்பங்களுக்கும், கஷ்டப்படும் பல பள்ளி மாணவர்களுக்கும் உதவி செய்து கொண்டிருக்கிறார்.

‘நேருக்கு நேர்’ திரைப்படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து, பூவெல்லாம் கேட்டுப்பார், பிரண்ட்ஸ், நந்தா, மௌனம் பேசியதே, காக்க காக்க, பிதாமகன், ஆயுத எழுத்து, கஜினி, ஆறு, சில்லுனு ஒரு காதல், வாரணம் ஆயிரம், அயன், ஆதவன், சிங்கம் 3 பாகங்கள், ஏழாம் அறிவு, தானா சேர்ந்த கூட்டம், நந்தகோபாலன் குமரன், காப்பான் வரை பல திரைப்படங்கள் நடித்துள்ளார்.

நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராக 36 வயதினிலே, பசங்க 2, 24, மகளிர் மட்டும், கடைக்குட்டி சிங்கம், உறியடி2, ஜாக்பாட், பொன்மகள்வந்தாள், சூரரைப்போற்று, திரைப் படங்களையும் தயாரித்துள்ளார்.