இன்றுவரை கண்டுபிடிக்க முடியாத ஒரு கொடூர கொலைகாரன் இவன்!
வித விதமான கொலை பண்ற படங்களை பார்த்து முதுகு சிலிர்த்து போயிருப்போம். அதுல பலது சினிமாக்காக யோசிச்ச கற்பனையா இருக்கும் இல்லையா!இன்னிக்கி நீங்க இங்கே படிக்க போற ஒரு மர்ம கொலைகாரனோட நோக்கம் உங்கள ஒருவழி ஆக்கிடும்.
வட கலிபோர்னியா மாகாணத்துல, 1960களின் இறுதியிலிருந்து 1970களின் தொடக்கம் வரை, குளிர் நடுங்கும் ஒரு டிசம்பர் மாதத்தில், யாரோ ஒருவரால் படு கொலைகள் நடக்க துவங்கின.
வழக்கம் போல, மூன்றாவது கொலையில்தான் கொலைகளுக்குள் உள்ள ஒற்றுமையும், பின்னணியும் அதிகாரிகளுக்கு புரிய துவங்கியது.
மிகவும் ஸ்மார்ட்டான கொலையாளிகளுக்கே உரிய “எங்கே என்னை கண்டுப்பிடி பாப்போம்” என சவால் விடும் குணம் இந்த முகம் தெரியாத கொலையாளிக்கு இருந்தது.
ஆனால் அவன் விட்டு செல்லும் குறிகளை புரிந்து கொள்ள முடியாமல் போலீஸ் தடுமாறியது. காரணம் அது கிரிப்டோகன் எனப்படும் பிரத்யேக மொழிக்குறிப்பில் இருந்தது. அதை புரிந்துகொள்வது என்பதே மிகவும் கடினம் போல.
இந்த குறிப்பில் அவனது பெயர், அவனது தொடர் கொலைகளுக்கான காரணம், அடுத்து யாரை கொலை செய்ய போகிறான் என்கிற தகவல் இருப்பதாக நம்பினார்களே ஒழிய, அதை இறுதி வரை தெரிந்து கொள்ள முடியாமல் தவித்தனர்.
ஒரு வழியாக திறமையை எல்லாம் உபயோகித்து அவர்கள் கண்டுபிடித்த பொழுது அதை படித்து அதிர்ந்து தான் போனார்கள். அதில் அவனது பெயர் சோடியாக் (Zodiac Killer) என்றும், அவனுக்கு மனிதர்களை கொலை செய்வது பெரும் மகிழ்ச்சியை அளிப்பதாகவும் இருந்தது.
ஏனெனில் மனிதர்கள் தான் இந்த உலகில் எல்லாவற்றை காட்டிலும் மிக மோசமான ஒன்று என்று எழுதி இருந்தான்.
சான் பிரான்சிஸ்கோ எக்ஸாமினேர் என்கிற செய்தித்தாளுக்கு கொலையாளியே குறிப்புகளை அனுப்பி வைக்க துவங்கியதால் தான் இந்த செய்திகள் கூட கிடைத்தது. அவனால் சுடப்பட்ட ஒன்றிரெண்டு பேர் உயிர் பிழைத்தாலும் அவர்களது உதவியால் எந்த துப்பும் கிடைக்க வில்லை. அவனை இதுவரை கண்டுபிடிக்கவும் முடியவில்லை.
இன்றும் இது கண்டு பிடிக்கபடாத மர்மமாகவே நீடிக்கிறது. சோடியாக் என்பவன் யார்? ஆணா? பெண்ணா? நிஜப்பெயரா?கற்பனையா? எதுவுமே தெரியாமல் போகும்போது அதை மர்மத்தில் ஒன்றாக சேர்க்க வேண்டியது தானே…!
மீண்டும் ஒரு மர்மத்தை அவிழ்ப்போம்…!