• September 10, 2024

இந்த ஒரு நாளைக்காக பல ஆண்டுகாலம் போராடிய தமிழர்கள். எதற்கு தெரியுமா?

 இந்த ஒரு நாளைக்காக பல ஆண்டுகாலம் போராடிய தமிழர்கள். எதற்கு தெரியுமா?

வரலாற்றை நாம் துல்லியமாக அறிவதற்கு, நமக்கு பெருந்துணையாக இருப்பதுதான் நாட்காட்டி. ஆங்கிலத்தில் Calendar என்று அழைப்பார்கள். ‘கலண்டே’ என்ன லத்தீன் மொழியில் இருந்துதான், calendar என்ற ஆங்கில வார்த்தை உருவாகி இருக்கிறது. கலண்டே என்றால், கணக்கினை கூட்டுவது என்று பொருள்.

அதேபோல்தான், தமிழில் ‘நாட்காட்டி’ என்பார்கள். அதாவது, நாட்களை காட்டுகின்ற, என்கின்ற பொருளின் அடிப்படையில், நாட்காட்டி என்று அழைக்கப்படும்.

வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு நடக்கிறது என்றால், அது எந்த ஆண்டில் நடைபெற்றது என்பதை, நாம் துல்லியமாக அறிவதற்குதான், இந்த ஆண்டு முறைகள் நமக்கு பயன்படுகிறது.

இப்பொழுது நாம் இருப்பது, 2022-ல். இதை, கிரிக்கோரியன் நாட்காட்டி என்று அழைப்பார்கள். இன்று உலகம் முழுக்க, பரவலாக பயன்பாட்டில் இருக்கும், ஒரு நாட்காட்டியாகும். அதாவது, இயேசு கிறிஸ்து பிறந்து, 2022 ஆண்டுகள் ஆகின்றன. அதை குறிப்பதுதான், இந்த 2022. இதை பொதுவாக, கிமு, கிபி என்று அழைப்போம். கிறிஸ்துவுக்கு பின், கிறிஸ்துவுக்கு முன், என்று அழைப்போம்.

இதையெல்லாம் நாம் பள்ளி காலகட்டத்திலேயே, படித்திருப்போம். இது உங்களுக்கு புதிதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நம்முடைய, பஞ்சாங்கத்தை நீங்கள் எடுத்துப் பார்த்தால் அதில் பல விதமான நாட்காட்டிகள் இருக்கும்.

உதாரணத்திற்கு, கலியுக ஆண்டு, சாலி வாகன ஆண்டு, கொல்லம் ஆண்டு, விக்கிரம சகாப்த ஆண்டு, சௌராஷ்டிர விஜய ஆண்டு, பசலி ஆண்டு, ஹெஜ்ரியா ஆண்டு, மகாவீர வருடம், விக்ரமாதித்ய வருடம், குருநானக் வருடம், விக்ரம சகாப்த ஆண்டு, திருவள்ளுவர் ஆண்டு என பல ஆண்டு முறைகள் இருக்கின்றன.

என்றைக்காவது நீங்கள், ஏன் இத்தனை ஆண்டு முறைகள் இருக்கின்றன? ஏன் ஒவ்வொரு ஆண்டு முறைகளும், ஒவ்வொரு விதமான எண்களை வழங்குகின்றன என்பதையெல்லாம் பற்றி நீங்கள் யோசித்ததுண்டா? யோசிக்கவில்லை என்றால், இதுவரை நீங்கள் எண்ணிப் பார்த்ததில்லை என்றால், இந்த கட்டுரை உங்களுக்கு ஒரு முழுமையான விளக்கத்தைக் கொடுக்கும்.

நாட்காட்டி என்பது, நாளை காட்டு என்ற ஒரு பொருள கொடுத்தாலும், இது உண்மையில் ஒவ்வொரு சமூகத்திற்கும், ஒவ்வொரு சமயத்திற்கும், ஒவ்வொரு இனத்திற்கும், ஒவ்வொரு நிர்வாகத்திற்கும் ஏற்றவாறு தான் calendar என்று சொல்லப்படும் நாட்காட்டியை வடிவமைத்திருக்கிறார்கள்.

உலகம் முழுக்க பல இனங்களிலும், பல சமயங்களிலும், பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நாட்கள், ஒரு வருடத்திற்கு 365 நாட்கள். இந்த 365 நாட்களை, 12 மாதத்திற்குள் அடக்கி விடுவார்கள்.
வரலாற்று நிகழ்வுகளை, சரியாக அறிவதற்கு அன்றாட பயன்பாட்டிற்கும், தொடர் ஆண்டு கணக்கு முறை, மிக அவசியமான ஒன்று.

தொடர் ஆண்டு என்றால், தொடர்ந்து ஒரு எண்களை வைத்துக்கொண்டு, ஆண்டுகளை கூட்டிச் செல்வது. நாம் முன்பே சொன்னது போல், ஒவ்வொரு மொழி பேசுபவர்களிடமும், ஒவ்வொரு இனத்தாருக்கும், ஒரு ஒரு சமயத்தாருக்கும், ஒவ்வொரு மதத்தினருக்கும், ஒவ்வொரு ஆண்டு முறைகளை, பின்பற்றி வருகிறார்கள்.

இதையெல்லாம், நீங்கள் நம்முடைய தமிழ் பஞ்சாங்கத்தில், பார்க்க முடியும். இந்த வருடங்களின் வரலாற்றை நாம் இங்கே தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான், இந்த கட்டுரையில் நோக்கம் உங்களுக்கு புரியவரும்.

சாலி வாகன ஆண்டு / சக ஆண்டு

சாலி வாகன என்கின்ற மன்னன், விக்ரமாதித்தனுக்கு எதிராக பெற்ற வெற்றியை கொண்டாடுவதற்காக, கிபி 78-ம் ஆண்டிலிருந்து, இந்த ஆண்டை அவர் உருவாக்கினார். எனவே, அன்றிலிருந்து, சாலி வாகன ஆண்டு என்கின்ற முறை, பின்பற்றப்பட்டு வந்தது. இதை பல கல்வெட்டுகளும், நாம் பார்த்திருக்க முடியும்.

கொல்லமாண்டு

இது நம் அண்டை மாநிலமான, Kerala-ல் பின்பற்றி வரும், ஒரு ஆண்டு முறையாகும். மலையாள வழக்கில், ஒரு ஆண்டு என்பதை, கொல்லம் என்று அழைப்பார்கள்.

நாம் எப்படி, தமிழ் மாதங்களை, சித்திரை, வைகாசி என்று அழைக்கிறோமோ, அது போல் அவர்கள், ராசிகளின் பெயர்களில் அழைப்பார்கள். அதாவது, மேஷம், சிம்மம், கடகம், தனுசு, துலாம் என்கின்ற ராசிகளின் பெயரைதான், அவர்கள் மாதங்களின் பெயராக அழைப்பார்கள்.

அதுபோல், அவர்களுக்கு கொல்லமாண்டு என்பது, ஆவணி முதல் தேதி பிறக்கிறது.
நாம் எப்படி ஆவணி என்று சொல்கிறோமோ, அவர்கள் அதை சிங்கம் என்று அழைப்பார்கள்.

இந்த கொல்லமாண்டு என்கின்ற ஆண்டுமுறை, கேரளாவில் மட்டுமல்ல, இன்றைய குமரி மாவட்டத்திலும், நெல்லை, தென்காசி பகுதிகளிலும், இந்த ஆண்டு முறையை கல்வெட்டுகளில் பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த ஆண்டு முறை, எப்படி உருவான என்று தெரியுமா?

வேணாட்டு அரசர், உதய மார்த்தாண்ட வர்மா என்பவர், இந்த ஆண்டினை உருவாக்கியிருக்கிறார்.
கிபி 823-ல், இந்த ஆண்டு தொடங்கியதாக அவர்கள் நம்புகிறார்கள்.

விக்கிரம சகாப்தம் ஆண்டு.

புராணகால அரசர்கள், கிமு 56-ல், சகர்கள் என்று அழைக்கப்பட்ட, வட நாட்டில் இருக்கின்ற, ஒரு நாடோடி இன மக்களை, அவர் வென்றதை தொடர்ந்து, அந்த வெற்றியை குறிப்பதற்காக, இந்த அரசரால் தொடங்கப்பட்ட ஆண்டுதான், விக்கிரம சகாப்த ஆண்டு. இதன் தொடக்கம், கிமு ஐம்பத்தி ஆறு.

சௌராஷ்டிர விஜய ஆண்டு.

தமிழகத்திற்கு சௌராஷ்ரியர்கள் வருகை தந்த ஆண்டை கணக்கில் வைத்து, இந்த ஆண்டு உருவானதாக, சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

பசலி ஆண்டு

அக்பர் காலத்தில், நிலவரி பணத்தை பிரித்து, கணக்கிடுவதற்கு வசதியாக, பசலை ஆண்டு முறை, வழக்கத்திற்கு கொண்டுவரப்பட்டது. முதலில், வட இந்தியாவில் மட்டுமே இருந்த நிலையில், காலப்போக்கில், தென் இந்தியாவிலும், அது பரவிவிட்டது.

அந்த காலகட்டத்தில், ஆடி மாதம் முதல் தேதி, பசலியாண்டு என்று கணக்கிடப்பட்டது. அதற்கு பின்பு வந்த ஆங்கிலேயர்கள், பசலி ஆண்டை ஜூலை முதல் தேதி தொடங்கி, அடுத்த ஆண்டு ஜூன் முடிய இன்று வரையறுக்கப்பட்டது. அந்த முறைதான், இன்றைய கால கட்டம் வரை, பின்பற்றப்பட்டு வருகிறது.

மகாவீரருடம்.

நாம் அனைவரும், கண்டிப்பாக மஹாவீர் ஜெயந்தி கேள்விப்பட்டிருப்போம். சமண மதத்தை உருவாக்கியவரும், அம்மத தலைவருமான, மகாவீரர் அவர்கள், பிறந்தநாளைக் கொண்டுதான், இந்த ஆண்டு, உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஆக, அந்த மதத்தை, பின்பற்றுபவர்கள், இந்த ஆண்டு முறையை, பின்பற்றுவார்கள்.
இவருடைய ஆண்டு கணக்கு, கிமு 597 என்று கணித்துள்ளார்கள்.

கௌதம புத்த வருடம்

பௌத்த சம பின்பற்றுபவர்கள், இந்த ஆண்டு முறைய பின்பற்றுகிறார்கள்.

குருநானக் வருடம்

சீக்கிய தலைவரான, குருநானக் அவர்கள், பிறந்தநாளைதான், அந்த இனத்தார்கள், குருநானக் வருடமாக, பின்பற்றி வருகிறார்கள்.

ஹிஜ்ரி ஆண்டு

இஸ்லாமியத்தை பின்பற்றுபவர்கள், இஸ்லாமிய சமய புனித நாட்களையும், பண்டிகைகளையும், கணக்கிட, முஸ்லிம்கள், உலகெங்கும் இந்த நாட்காட்டி, பயன்படுத்தி வருகின்றனர்.

இஸ்லாமிய இறைத்தூதர், முகமது நபி அவர்கள், சவுதி அரேபியாவில் உள்ள மக்காவில் இருந்து மதினாவிற்கு இடம்பெயர்ந்த ஆகும்.

ஹிஜ்ரத் என்ற அரபி வார்த்தைக்கு, இடம் பெயர்தல் என்று பொருள்படும். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வின் அடிப்படையில்தான் ஹிஜ்ரியாண்டு உருவானது. கலீபா உமர் அவர்கள் ஆட்சி காலத்தில்தான் ஹிஜ்ரியாண்டு தொடங்கப்பட்டது.

கலியுக ஆண்டு

இந்த ஆண்டைப் பற்றி, பல விதமான கருத்துக்கள் இருக்கின்றன. அவ்வளவு ஏன்? கிட்டத்தட்ட கிமு 3002-ல், இந்த ஆண்டு துவங்கியதாக வரலாற்று ஆசிரியர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த கலியுகா ஆண்டு என்கின்ற பெயர், நம் சித்தர்களும், சங்ககால அரசர்களும், பல கல்வெட்டுகளில் இருக்கிறார்கள். இந்த கலியுக ஆண்டை பற்றி, நாம் வேறொரு கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.

தமிழர்களுக்கென ஒரு ஆண்டு முறை

இதுவரை, நீங்கள் பார்த்த பல ஆண்டுமுறைகளை நம் தமிழர்களும், சித்தர்களும், பல அரசர்களும், பல கவிஞர்களும், கல்வெட்டின் வழியாக, பாடலின் வழியாக இதையெல்லாம் பதிவேற்றம் செய்திருக்கிறார்கள்.

இப்பொழுது, நீங்கள் பார்த்த ஒவ்வொரு ஆண்டின் வரலாற்றில், ஒவ்வொரு இனம் இருக்கிறது.
ஒவ்வொரு மதம் இருக்கிறது. மேலும், நிர்வாகத்திற்காக, உருவாக்கப்பட்ட முறைகளும், இருக்கின்றன. ஆனால், இந்த எந்த நாட்காட்டியிலும், கலியுக ஆண்டை தவிர, தமிழர்கள் நேரடியாக உருவாக்கியதில்லை.

அவ்வளவு ஏன்? இன்று நாம் பின்பற்றி வரும் இந்த calendar முறை கூட கிறிஸ்தவர்களால் துவக்கப்பட்ட ஆண்டு முறைதான்.

இதுவரை நீங்கள் பார்த்த நாட்காட்டிகள் எதுவுமே, தமிழர்களுக்கு தனித்துவமானவை அல்ல.
தமிழர்களுக்கு என்று ஒரு ஆண்டு முறை வேண்டும் என்கின்ற ஒரு கோரிக்கையும், அறிஞர்கள் மத்தியில் எழுந்தது.

தமிழர்களுக்கென, ஒரு சிறப்பான நாட்காட்டியை, உருவாக்க வேண்டும் என்று அவர்கள் எண்ணினார்கள். ஆக இந்த முக்கியமான முடிவை எடுப்பதற்காக, 1921-ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில், மறைமலை அடிகள் தலைமையில், தமிழ் அறிஞர்கள் ஒன்று கூடினார்கள்.

அதில் பல அறிஞர்கள் ஒன்று கூடி, தமிழர்களுக்கென ஒரு ஆண்டு முறைய உருவாக்க வேண்டும் என்று ஆலோசித்தார்கள். ஒவ்வொரு மதமும், இனமும், மொழி பேசுபவர்களும், ஒரு நபரை வைத்துதான், அந்த ஆண்டு முறைய உருவாக்கி இருக்கிறார்கள்.

அப்படி என்றால், நம் தமிழினத்திற்கு என்று ஒரு நபரை தேர்வு செய்ய வேண்டும் என்றால், யாரை தேர்வு செய்வது என்கின்ற அந்த குழப்ப அங்கு நீடிக்கவில்லை. ஏனென்றால், அனைவருடைய மனதிலும், ஒருவருடைய பெயர் மட்டுமே இருந்தது. அவர் யார் தெரியுமா?

திருவள்ளுவர் ஆண்டு

இறந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் என, ஒவ்வொரு காலத்தையும், பிரித்து, பிரித்து ஆராய்ந்தவர். முக்காலமும் உணர்ந்த, ஞானியாக இருந்தவர். காலம் ஒரு மனிதனுக்கு, எவ்வளவு இன்றியமையாத ஒன்று என்பதை, குறிப்பதற்காகத்தான், காலம் அறிதல் என்கின்ற, ஒரு அதிகாரமே, இவர் வரையறுத்தார். அவர்தான் நம் திருவள்ளுவர்.

மறைமலை அடிகள், தெ. பொ. மீனாட்சிசுந்தரம், திருவிக அவர்கள் முன்னிலையில் திருவள்ளுவர் தினம் தொடங்கப்பட்டது.

ஒரு வருடத்தை உருவாக்க வேண்டும் என்றால், அதற்கொரு வருட கணக்கு தேவைப்படுகிறது. ஆக, திருவள்ளுவர் பிறந்த ஆண்டு என்று, ஏற்கனவே மறைமலை அடிகள் ஒரு வருடத்தை கணித்து வைத்திருந்தார். அதுதான், கிமு 31. அன்றைய பல அறிஞர்கள், ஏற்றுக்கொண்டார்கள்.

அதன் அடிப்படையில், கிறிஸ்துவ ஆண்டுடன், ஒரு 31 வருடத்தை, கூட்டி வருகின்ற ஆண்டை, திருவள்ளுவர் ஆண்டு என்று, கணக்கிட்டார்கள். (2022+31 = 2053)

காரணம்

திருவள்ளுவர் ஆண்டை, இவர்கள் உருவாக்க ஒரு ஆகப்பெரிய காரணம் இருந்தது. சமஸ்கிருத பெயரில் இருக்கின்ற, அந்த அறுபதாண்டு சுழற்சி முறைதான், காலம் காலமாக பின்பற்றி வந்தார்கள், நம் சங்ககால புலவர்களும், சான்றோர்களும்.

தமிழ் மொழி, மரபு, மானம், பண்பு, வாழ்வு ஆகியவற்றை அனைத்தையும், இந்த அறுபது ஆண்டு பெயர்கள் வழியாகவும், அந்த முறைகள் வழியாகவும், ஒரு அழிவிற்கும், இழிவிற்கும் உண்டாவதை எண்ணிப் பார்த்துதான், அறிஞர்களும், சான்றுகளும், புலவர்களும், இந்தத் திருவள்ளுவர் ஆண்டு முடிவை எடுத்தார்கள்.

ஆனால், அதற்குப் பிறகு, அது மெல்ல, மெல்ல வழக்கொழிந்து வந்த நிலையில், போ ரத்தினம் அவர்கள் 1952-ல் எடுத்த முயற்சியின் பயனாக தமிழகத்திலும், இலங்கையிலும், Myanmarலும், அது மட்டும் இல்லாமல், தமிழர்கள் எங்கெங்கெல்லாம் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம், திருவள்ளுவர் ஆண்டு, மீண்டும் புத்துணர்ச்சி பெற்றது.

அவர்கள் முடிவெடுத்தது என்னவோ, 1921-ம் ஆண்டுதான். அதன் பின், கிட்டத்தட்ட பதினைந்து வருடத்திற்கு பிறகு, அப்போதைய திமுக அரசு, திருவள்ளுவர் திருநாளை, தைத்திருநாளோடு இணைத்து, திருவள்ளுவர் ஆண்டு என்ற ஆண்டு தொடரை, அறிமுகப்படுத்தியது.

அதன் அடிப்படையில், 1971-ல், திருவள்ளுவர் ஆண்டு, தமிழ்நாட்டு அரசிதழில் வெளியாகி, 1972-ல், நடைமுறைக்கு வந்தது. ஆனால், அதற்கு பிறகும், ஒன்பது ஆண்டுக்கு பிறகுதான், 1981-ல், மதுரை உலகத் தமிழ் மாநாட்டில், அப்போதே முதல்வராக இருந்த, MGR அவர்கள், அதை சகல அரசு ஆவணங்களிலும், அதிகாரபூர்வமாக பயன்படுத்துவதற்காக, அரசாணையை பிறப்பித்தார்.

ஏன் தை மாதம்

இவ்வாறுதான், அன்றிலிருந்து இன்று வரை, திருவள்ளுவர் தினத்தை, திருவள்ளுவர் ஆண்டாக தை இரண்டாம் நாள் இருந்து நாம் கொண்டாடி வருகிறோம்.

இதன் அடிப்படையில், திருவள்ளுவர் ஆண்டின் முதல் மாதம் தை என்றும், இறுதி மாதம், மார்கழி என்றும் முடிவெடுத்தார்கள்.இந்த திருவள்ளுவர் ஆண்டை, தை மாதத்திற்கு வைக்கவும், ஒரு ஆகச்சிறந்த காரணம் இருந்தது.

தைத்திங்களில்தான், உழவர்களின் விளைபொருள், களஞ்சியத்திற்கு வருகிறது. பொருளாதார திட்டம் வகுக்கும் காலமே, தை மாதம்தான். கிராமத்தினர், ஊர் சொத்தை, குத்தகைக்கு விடும் காலமும், தைத்திங்களாகவே இருக்கிறது.

ஆக, இந்த தை இரண்டாம் நாள் ஏதோ ஒரு விடுமுறை நாள் மட்டும் அல்ல மக்களே! அதற்குப் பிறகு ஒரு மிகப் பெரிய ஆராய்ச்சி இருக்கிறது. அதை எல்லாம் விட நம் தமிழ் இனத்திற்காக ஒரு வரலாற்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் இது உருவாக்கப்பட்டிருக்கிறது.

நம் இனத்தின் வரலாறு மிகப் பெரியது, நீண்டது, நெடியது, இந்த ஆண்டு முறைய பயன்படுத்த வேண்டும் என்பது நம்முடைய கடமைதான். ஆனால், அதை விட ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டியது என்பது, நம் கடமையோடு சேர்த்து, நம் கூடுதல் பொறுப்பு.

கூடுதல் செய்தி

பல மாவட்டத்திலிருந்து, சென்னைக்கு வரும் பல மக்கள், சென்னை வந்தாலே, கடற்கரையை பார்த்துவிட்டு, இரண்டு, மூன்று mallகளை பார்த்துவிட்டு, ஊருக்கு சென்று விடுகிறோம். ஆனால், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை, நாம் மறந்து போயிருக்கிறோம்.

சுமார், 600 ஆண்டுகளுக்கு மேலாக, ஒரு பழமை வாய்ந்த ஒரு கோவில் இருக்கிறது. அந்த கோவில், யாருக்கானது தெரியுமா? நம் திருவள்ளுவருக்கான கோவில் அது.

சென்னை, மயிலாப்பூரில்தான், திருவள்ளுவருக்கு என்று, ஒரு கோவிலே இருக்கிறது. நீங்கள், சென்னை வந்தால், கண்டிப்பாக, திருவள்ளுவருக்கு என்று கட்டப்பட்டிருக்கும், அந்த கோவிலை பார்த்து விட்டு செல்லுங்கள்.

123 movies
google maps for web site

“ஊரோடு ஒத்துப்போ” என்கின்ற அந்த பழமொழிக்கு ஏற்ப, நடைமுறைக்கு நாம், ஆங்கில ஆண்டுதான் பயன்படுத்தியாக வேண்டும். ஆனால், நம் இனத்தையும், வரலாற்றையும், அதற்காக உருவாக்கப்பட்ட, இந்த ஆண்டு முறைய நாம் மறந்து விடக்கூடாது.

இது போல, பல வரலாற்று நிகழ்வுகளையும், தமிழ் பெருமைகளையும், தன்னம்பிக்கை பதிவுகளையும், தெரிந்து கொள்ள www.deeptalks.in வலைத்தளத்தை பின்பற்றுங்கள்.

இந்த பதிவை வீடியோவாக பார்க்க!