• March 18, 2024

குமரிக்கண்டத்தில் என்ன மொழி பேசியிருப்பார்கள் என்பதற்கு ஆதாரம் இதோ!

 குமரிக்கண்டத்தில் என்ன மொழி பேசியிருப்பார்கள் என்பதற்கு ஆதாரம் இதோ!

திருக்குறளில் திருவள்ளுவர், தென்புலத்தார் என்று கூறியிருப்பதை, யார் தெரியுமா?


எந்த ஒரு இடம், எந்த ஒரு கண்டம் இருக்கிறது? என்று நாம் போராடிக் கொண்டு இருக்கிறோமோ, அது அழிஞ்சு போனதற்கான ஆதாரங்களை மட்டும் வைத்துக் கொண்டு, அதில் இருந்த இனம் நம் தமிழ் இனம் என்பதை நிரூபிக்க போராடிக் கொண்டிருக்கும் இந்த காலத்தில், நீங்கள் தினமும் படிக்கும் அந்த திருக்குறளில், நீங்கள் தினமும் கேட்கும் அந்த திருக்குறளில் கூட, குமரிக்கண்டத்தின் ஒரு வெளிச்சம் அதில் பதிந்திருக்கிறது.

திருவள்ளுவர் கூட, இறந்த முன்னோரை தென்புலத்தார் என்று கூறி, வணங்கத்தக்கவர் வரிசையில் இறைவனுக்கு அடுத்து வைக்கிறார். அது ஏன் தெரியுமா?



குமரிக்கண்டத்தில் வாழ்ந்த, பல நூறாயிரம் மக்கள் கணநேரத்தில் அந்த காலத்தில் உருவான, கடல் ஊழி என்று சொல்லப்படும், சுனாமியில் இறந்து போயிருக்கிறார்கள். ஒரே நேரத்தில், தெற்கு திசையில் ஏற்பட்ட அந்த மிகப்பெரிய கடல்கோளினால் குமரிக்கண்டமும், குமரிக்கண்டத்தின் சில பகுதிகளும், அதில் இருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்து போனதால், அவர்களை போற்றும் வகையில், அவர்களை தினமும் வழிபடும் வகையில், அவர்களை இறைவனுக்கு அடுத்த வரிசையில் வைத்து, தென்புலத்தார் என்று கூப்பிடுகிறார். இது மட்டுமல்ல, தெற்கு திசையை கூற்றவன் திசை என்றும் கூறுகிறார்கள்.

குமரிக்கண்டத்தில் பிறந்த நம் தமிழ் மொழி

அங்கு அடிக்கடி ஏற்படும், கடல் கோளினால் அங்கிருந்து புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் எங்கெல்லாம் சென்றார்கள்? எந்த நாடுகளுக்கெல்லாம், நம் தமிழ் மொழிய பரப்பினார்கள்? அந்த நாடுகளில் எல்லாம் நம் தமிழ் மொழி, இப்பொழுது எப்படி இருக்கிறது? என்றும், உலகில் உள்ள எம்மொழிக்கும், நம் தமிழ் மொழிதான், தாய்மொழி என்பதற்குமான, பல சான்றுகளோடு, இந்த கட்டுரையில் பார்ப்போம்.

இந்திய துணைக் கண்டத்தின், இன்றைய தெற்கு முனைக்கு அப்பால் விரிந்து பரந்திருக்கும் கடல் பரப்பில்தான் நம் மூதாதையர்களின் இனம் நம் முன்னோர்களின் இடம் குமரிக்கண்டம் இருந்தது.

குமரிக்கண்டத்தில் வாழ்ந்தவர்கள் நம் தமிழர்கள்தான் என்பதற்கான பல ஆதாரங்களை நான் சேகரித்து கொண்டிருக்கும் பொழுது, திரு. சாத்தூர் சேகரன் அவர்களின் பதிவும் அவர் எழுதிய பல புத்தகங்கள் வழியாக பல தகவல்களை திரட்டி, இந்த பதிவை வழங்குகிறேன்.


குமரிக்கண்டத்தில் வாழ்ந்த மக்கள், தமிழ் மொழியைத்தான் பேசினார்கள் என்பதற்கும், பல தமிழ் சொற்களை அறிவியல் விதியுடன் எடுத்து தெளிவாக காட்டியவர் சாத்தூர் சேகரன்.

குமரிக்கண்ட மக்கள் அங்கிருந்து வெளியேறிய காலம். முதல் கடல்கோள் நிகழ்ந்த காலம்தான். இத்தகைய கடல்கோள்கள், அதாவது சுனாமிகள், அப்போதைய குமரிக்கண்டத்தில் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்திருக்கிறது. முதல் கடல்கோள் நடைபெற்ற காலம், ஏறத்தாழ ஐம்பத்தி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்கிறது ஒரு ஆராய்ச்சி.

அந்த காலகட்டத்தில், குமரிக்கண்டத்தில் இருந்து அவ்வப்பொழுது வெளியேறிய தமிழ் மக்கள் Australia கண்டத்திலும், America கண்டத்திலும், Africa கண்டத்திலும் குடியேறி இருக்கிறார்கள். அவர்கள் Australia பழங்குடி மக்களும், America செவ்விந்திய மக்களும், Africa பழங்குடியினரும் ஆவார்கள்.


அவர்கள் பேசுகின்ற மொழிகளிலும், தமிழ் சொற்கள் ஏராளமாக காணப்படுகின்றன. குமரிக்கண்டத்தில் வாழ்ந்த மக்கள் பலர், நிலத்தின் வழியாக வட இந்தியா முதலிய பல இடங்களில், குடியேறி இருக்கிறார்கள். அவர்கள் இந்தியாவுக்கு, வடகிழக்கே இருக்கும் தாய்லாந்து, Indonesia, Malaysia, சீனா முதலிய நாடுகளிலும், குடியேறியிருக்கிறார்கள்.

இந்தியாவிற்கு, வடக்கிலும், வடமேற்கில் உள்ள நாடுகளிலும், மத்திய ஆசிய முதலிய நாடுகளிலும், குடியேறி இருக்கிறார்கள். இப்படி இவர்கள் குடியேறிய நிகழ்ச்சி, இன்றிலிருந்து இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து ஏழாயிரம் ஆண்டு வரையில், நடைபெற்று இருக்கலாம். இவர்கள் பேசுகின்ற மொழி, குமரிக்கண்ட தமிழ் மொழியிலிருந்து, சிறிது வேறுபட்டு இருப்பதை காண முடிகிறது.


இவ்வாறு பல இடங்களில் குடியேறிய நம் தமிழ் மக்கள், தங்கள் தாய் மொழியுடன் தங்கள் தமிழ் மொழியுடன் அவர்களின் மொழியும் சேர்த்து பேச வேண்டிய சூழலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அதனால்தான், குமரிக்க தமிழ் சொற்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

பழங்கால தமிழர்கள், நிலவை உவா என்றும், உவப்பு என்றும் அழைத்து வந்தனர் ஏறத்தாழ, ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், குமரிக்கண்ட தமிழ் மக்கள். அவர்கள் இன்றும் நிலவு என்ற தமிழ் சொல்லையும், மாதம் என்ற தமிழ் சொல்லையும், குறிப்பிடுவதற்காக, உவா என்ற பழந்தமிழ் சொல்லைத்தான் வழங்கி வருகிறார்கள். இந்த சொல்லை, இன்று மேற்கு ஆசிய பகுதிகளிலும், பிற இடங்களிலும் உ என்ற எழுத்து மறைந்து, வாவு என்று தெரிந்திருக்கிறது.

இப்பொழுது, வழக்கில் இருக்கும் தமிழில் கண் என்ற சொல்லுக்கு மட்டும், முப்பதிற்கும் மேற்பட்ட சொற்கள் இருக்கின்றன. குலம் என்பது, கண்ணைக் குறிக்கும் பழந்தமிழ்ச் சொல். இதை மொழி ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். தெளிவாகக் கூற வேண்டும் என்றால், புலன் விசாரணை என்றால் கண்ணால் பார்த்து அதன் மூலம் விசாரணை செய்யப்படுவது. இதைத்தான், புலன் விசாரணை என்பார்கள். Australia பழங்குடியினர், இன்றும் கண் என்பதற்கு புலம் என்ற சொல்லைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.


இவ்வாற ஏறத்தாழ ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் குமரிக்கண்டத்தை விட்டு America-ல் குடியேறிய மக்களை, அந்த நாட்டு பழங்குடி மக்கள் என்றும், அவர்கள் செவ்விந்தியர்கள் என்றும் அழைத்து வருகிறார்கள்.

செவ்விந்தியர்கள், அம்மா என்ற சொல்லை அன்னை என்று அழைக்கிறார்கள். ஆனால் நாமோ அன்னையை, ஒரு இலக்கிய சொல்லாக மாற்றி, அதை நாடகங்களிலும், காவியங்களிலும், கதைகளில் மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். அந்த காலகட்டத்தில், Africaவில் குடியேறிய, குமரிக்கண்ட தமிழர்கள், இன்றும் அதி அற்புதமான தமிழ் பயன்படுத்தி வருகிறார்கள்.


தானி என்ற ஒரு தெலுங்குச் சொல், தமிழில் ஒரு பழமையான சொல். சீன மொழியில், இறைச்சி என்ற தமிழ்ச் சொல் றச்சி என்றும், இரங்கல் என்ற தமிழ்ச் சொல் ரங் என்றும், பூ என்ற தமிழ் சொல் ஹூ என்றும் வழங்கி வருகின்றனர். இதே போல், இன்னும் பல தமிழ்ச் சொற்கள் கன்னடத்தில் சிதைந்து ஒலிக்கின்றன.

ப என்ற தமிழ் எழுத்தை, ஹ என்று கன்னட மொழியில் வழங்கி வருகிறார்கள். எடுத்துக்காட்டாக, பத்து என்பது “ஹத்து” என்றும், பல் என்ற தமிழ் சொல் “ஹல்” என்றும் கன்னட மொழியில் இன்றும் வழக்கில் இருக்கிறது.



கண் என்ற தமிழ்ச் சொல் கண் என்றும், கான் என்றும் சீன மொழியில் இன்றும் வழக்கத்தில் இருக்கின்றன. சீன மொழியில், ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் சொற்கள் அங்கு சிதைந்து உச்சரிக்கப்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட முன்னூறுக்கும் மேற்பட்ட தூய தமிழ் சொற்கள் சீன மொழியில் இன்றும் வழக்கில் உள்ளன. இந்த அனைத்து தூய தமிழ் மொழியையும், சீன மொழியிலிருந்து நீக்கிவிட்டால் அந்த மொழி இயங்காது என்பதே உண்மை.

தமிழில் குதிரையை மா என்று சொல்வோம். தாய்லாந்து மொழியிலும், சீன மொழியிலும், குதிரையை மா என்று சொல்கிறார்கள். மேற்கு ஆசிய மக்களுக்கு, எழுதுவதற்கு பனை ஓலை கிடைக்கவில்லை. அதனால், எளிதாகவும், மலிவாகவும் கிடைத்த ஈரக்களி மண்ணில் எழுதி இருக்கிறார்கள்.


ஈரக்களி மண்ணை ஏடு போல செய்து அதில் நீண்ட மூங்கில் களி அல்லது மரக்குச்சி கொண்டு எழுதி இருக்கிறார்கள். தன்னுடைய கைத்தடம், ஈரக்களி மண்ணில் படாமல் இருப்பதற்காக, இடமிருந்து வலமாக எழுதுவதைக் காட்டிலும், வலமிருந்து இடமாக எழுதுவது அவர்களுக்கு சுலபமாக இருந்திருக்கிறது. இதனால், பல தமிழ் எழுத்துக்கள் மறைந்து பல புதிய எழுத்துக்களை உருவாக்கியது.

நம்முடைய உயிரெழுத்துக்கள் போல் இல்லாமல், அவர்கள் எழுதும்போது உயிர் எழுத்திற்கு மேலேயும் கீழேயும் பல குறியீட்டை இட்டு எழுதியிருக்கிறார்கள். இந்த இரண்டு கருத்துக்களையும் உள்ளடக்கியது தான், பிம்ப விதி என்று சொல்வார்கள். அதாவது law of mirror image. பிறழ்ச்சி விதி என்பார்கள். உலக அறிஞர்கள் மொழியியலில், இது ஒரு மாபெரும் கண்டுபிடிப்பு.



வ் + ஆ = வா. வட இந்தியர்கள், பல இடமாக எழுதியதால், ஆவ் எழுதி இருக்கிறார்கள். வட இந்திய மொழிகளில், பலவற்றில் ஆவ், ஆவோ, என்றால் வா என்பதுதான் பொருள். இதே போல், அரபி மொழியில், அதற்கு முன்பாக, ஜ் என்ற வார்த்தையை சேர்த்து ஜ்-ஆவ் என்று அழைக்கிறார்கள்.

ம் + ஆ = மா, என்றால் மாம்பழம் என்று, நமக்குத் தெரியும்.
வட இந்தியர்கள் ஆ + ம் = ஆம் என்கிறார்கள்.

சமஸ்கிருத மொழியில் கூட, ஆம்ப்ரா என்றால், மாம்பழம் என்று பொருள்.

பண்டையத் தமிழில், அம்பு என்பதற்கு தண்ணீர் என்று பொருள். அதே போல், பழைய இலக்கிய அரபி மொழியில், அம்பு என்ற சொல், பிற புரட்சி விதிப்படி, மா என்று மாறி, அதற்கு அரபி மொழியில் தண்ணீர் என்று பொருள்.


அரேபிய பேச்சு மொழியில் கூட, தண்ணீர் என்பதை, மை அல்லது மொய் என்று பிரித்து ஒலிக்கிறார்கள்.

அவ்வளவு ஏன்?


அல்ல என்ற தமிழ்ச்சொல், அல் என்று குறுகி, பிறர்ச்சி விதிப்படி அரபி மொழியில், ல என்று மாறி, அது இல்லை என்ற பொருளையே தருகிறது. லாலா என்றால், அரபி மொழியில் “இல்லை இல்லை” என்று பொருள்.


அதே போல், தமிழில் பெண்களை குறிப்பிடுவதற்கு, பெண்டு என்ற பயன்படுத்தி இருக்கிறோம். இது குமரிக்கண்ட காலத்திலிருந்து வழங்கி வரும் ஒரு தமிழ்ச்சொல். பெண்டு என்பது அரபி மொழியில், பின்ட் என்று திரிந்து ஒலிக்கிறது.

அதே போல், எழில் என்ற தமிழ்ச் சொல், அரபி மொழியில், ஜமீல் என்று வழங்குகிறது. எழிலான பெண்டு என்ற தமிழ்ச் சொல், பின்ட் ஜமீலா என்ற அரபி மொழியில் திரிந்து போகிறது.

இதைத் தவிர, ஏன்டா, ஏண்டு, இன்று நாம் என்று அழைக்கிறோமே, இதைக் கூட, அரபி மொழியில், அந்தா, அந்தி என்று கூறுகிறார்கள்.


நம் தமிழின் வசவுச் சொல்லைக் கூட, உலக மொழிகள் இலக்கிய சொல்லாக வைத்திருக்கின்றன. ஏனென்றால், உலக மொழி இலக்கணங்கள் எல்லாம், தமிழில் இருந்து பெறப்பட்டவைதான்.

இப்படிப்பட்ட பல நூறு செய்திகள், பல ஆதாரங்கள் ஒவ்வொன்றாக குமரிக்கண்டத்தில் இருந்த தமிழுக்கும், அங்கிருந்து உலகம் முழுவதும் பரவிய, குமரிக்கண்ட தமிழர்களுக்கும், இருக்கின்ற சான்றுகள் ஒன்றுடன் ஒன்று ஒத்து போகின்றன.

ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னாலும், குமரிக்கண்டத்தில் இருந்து தமிழர்கள் மட்டுமல்ல, தம் தாய்மொழி தமிழையும் சேர்த்துக்கொண்டு பல நாடுகள் சென்று, பல கண்டங்கள் சென்று, அங்கிருக்கும் மக்களோடு பழகி, தமிழ் மொழியை அவர்கள் மொழிகளோடு சேர்த்து அதை வாழ வைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

இந்த உலகில் நீங்கள் எங்கு சென்றாலும், எந்த நாட்டிற்கு சென்றாலும், எந்த மொழியாக இருந்தாலும், அவர்களுடைய ஒரு சொல்லில் ஆவது நம் தமிழ் மொழி இருக்கும் என்பது நமக்கு பெருமையே.

என்ன தவம் செய்தோமோ, நாம் தமிழனாய் பிறப்பதற்காக. அதுவும், நம் தமிழ்நாட்டில் பிறப்பதற்காக.


இந்த கட்டுரையை, வீடியோவாக பார்க்க.