• November 5, 2024

உலகின் மூத்த மொழி என்று நாம் வெறும் பெருமைக்காம மட்டும் சொல்லவில்லை. இதை பாருங்கள்!

 உலகின் மூத்த மொழி என்று நாம் வெறும் பெருமைக்காம மட்டும் சொல்லவில்லை. இதை பாருங்கள்!

வரலாறுகள் செறிந்த, இலக்கியங்கள் நிறைந்த, தனித்தன்மை பொருந்திய, படிக்க பழக இனிமையான மொழி, செம்மொழிகளில் மூத்த மொழி, அது நம் தாய்மொழி, தமிழ் மொழி என்பதில் ஒவ்வொரு முறையும் உணர்ந்து பெருமைப்பட 1000 விஷயங்கள் இங்கு உண்டு.

“ஆங்கிலம் என்பது, ஒரு மொழி; அது, அறிவு அல்ல” என்பதை நாம் உணர வேண்டும். ஆங்கிலம் நன்கு தெரிந்தும் கூட, காந்தியடிகள், சுயசரிதையை தனது தாய்மொழியான குஜராத்தியில் தான் எழுதினார். எத்தனை மொழி கற்றவராக இருந்தாலும், சிந்தனை என்பது தாய்மொழியில் தான் எப்பொழுதும் இருக்கும்.

“ஒருவருக்கு தெரியும் மொழியில் பேசும் பொது அந்த செய்தி அவரின் மூளைக்கு செல்கிறது. அதுவே அவரின் தாய்மொழியில் போசும்போது, அந்த செய்தி அவரின் இதயத்திற்கு செல்கிறது” என்று தாய்மொழியின் அவசியத்தை சொல்கிறார் நெல்சன் மண்டேலா.

3000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட தமிழ் நூலான தொல்காப்பியம் இன்றும் நம்மிடையே உள்ளது. அதற்கு முன்னும் பல இலக்கண நூல்கள் இருந்துள்ளன என்பதை தொல்காப்பியமே கூறுகின்றது. உலகில் உள்ள அனைத்து செயலுக்கும், தமிழில் பெயரும் உண்டு, பொருளும் உண்டு.

உதாரணமாக எண்களை எடுத்துக்கொள்வோம்!

ஆங்கிலத்தில் எண்களில் லட்சத்திற்கு மேல், மில்லியன், பில்லியன், ட்ரில்லியன், இறுதியாக குவன்றிலின் இவ்வளவு தான் இருக்கின்றன. ஆனால், தமிழில் எண் ஒலிப்பு முறையில் ஒன்றிலிருந்து பிரமகற்பம் எனும் முக்கோடி வரை ஒவ்வொன்றிற்கும் தனி தனி பெயர்கள் இருக்கின்றன.

  • 1 – ஒன்று
  • 10 – பத்து
  • 100 – நூறு
  • 1000 – ஆயிரம் எனப்படும் சகசிரம்
  • 10,000 – பத்தாயிரம் எனப்படும் ஆயுதம்
  • 1,00,000 – லட்சம் எனப்படும் நூறாயிரம்
  • 10,00,000 – பத்து நூறாயிரம்
  • 1,00,00,000 – கோடி
  • 10,00,00,000 – அற்புதம்
  • 1,00,00,00,000 – நிகற்புதம்
  • 10,00,00,00,000 – கும்பம்
  • 1,00,00,00,00,000 – கணம்
  • 10,00,00,00,00,000 – கற்பம்
  • 1,00,00,00,00,00,000 – நிகற்பம்
  • 10,00,00,00,00,00,000 – பதுமம்
  • 1,00,00,00,00,00,00,000 – சங்கம்
  • 10,00,00,00,00,00,00,000 – வெள்ளம்(சமுத்திரம்)
  • 1,00,00,00,00,00,00,00,000 – அந்நியம்
  • 10,00,00,00,00,00,00,00,000 – (அர்த்தம்)
  • 1,00,00,00,00,00,00,00,00,000 – பரார்த்தம்
  • 10,00,00,00,00,00,00,00,00,000 – பூரியம்
  • 1,00,00,00,00,00,00,00,00,00,000 – பிரமகற்பம் (கோடிக்கோடி-முக்கோடி)

இவ்வாறு ஒவ்வொன்றிக்கும் ஒவ்வொரு பெயரை வைத்தவன் தமிழன். இது மட்டும் அல்ல, ஒன்றிற்கு கீழ் உள்ள இறங்குமுக எண்ணுக்கும் பெயர் வைத்திருக்கிறான் தமிழன். கேட்டால் ஆச்சரியத்தில் உறைந்து போய்விடுவீர்கள்!!

1 – ஒன்று

3/4 – முக்கால்

1/2 – அரை

1/4 – கால் (இதுவரை அனைவர்க்கும் தெரியும். இனி கேளுங்கள்)

1/5 – நாலுமா

3/16 – மூன்று வீசம்

3/20 – மூன்றுமா

1/8 – அரைக்கால்

1/10 – இருமா

1/16 – மாகாணி(வீசம்)

1/20 – ஒருமா

3/64 – முக்கால்வீசம்

3/80 – முக்காணி

1/32 – அரைவீசம்

1/40 – அரைமா

1/64 – கால் வீசம்

1/80 – காணி

3/320 – அரைக்காணி முந்திரி

1/160 – அரைக்காணி

1/320 – முந்திரி

1/102400 – கீழ்முந்திரி

1/2150400 – இம்மி

1/23654400 – மும்மி

1/165580800 – இன்று நானோ எனப்படும் அணு. (அணுவுக்கும் கீழும் அளந்துள்ளான் தமிழன்)

1/1490227200 – குணம்

1/7451136000 – பந்தம்

1/44706816000 – பாகம்

1/312947712000 – விந்தம்

1/5320111104000 – நாகவிந்தம்

1/74481555456000 – சிந்தை

1/489631109120000 – கதிர்முனை

1/9585244364800000 – குரல்வளைப்படி

1/57511466188800000 0 – வெள்ளம்

1/57511466188800000 000 – நுண்மணல்

1/23238245302272000 00000 – தேர்த்துகள்.

இன்னும் இது போல எத்தனை எத்தனையோ செயல்களுக்கு பல பல பெயர்களை வைத்து, அதை புழக்கத்தில் வைத்திருந்தான் அன்று நம் தமிழன்.

உலகின் மூத்த மொழி என்று நாம் வெறும் பெருமைக்காம மட்டும் சொல்லவில்லை. பல சான்றுகளோடும், ஆவணங்களோடும் ஆணித்தரமாக சொல்கிறோம். மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி, நம் தமிழ் மொழி என்று இனி இறுமாப்புடன் சொல்வோம்.