• May 10, 2024

நடுக்கடலில் திடீரென காணாமல் போன 7 பேர். அப்படி என்ன ஆனது அந்த மர்ம கப்பலில்..?

 நடுக்கடலில் திடீரென காணாமல் போன 7 பேர். அப்படி என்ன ஆனது அந்த மர்ம கப்பலில்..?

டிசம்பர் 4, 1872. அட்லாண்டிக் கடலோட நட்ட நடுவில ஒரு பெரிய சொகுசு கப்பல் நின்று கொண்டிருந்தது. அதோட பேரு மேரி செஸ்ட்டா. (Mary Celeste)


உள்ள போய் பாத்தா, அங்கே ஒரு பிரச்னையும் இருக்கற மாதிரி தெரியல. எல்லாம் சரியா அதது இடத்துல அப்டியப்டியே இருந்துது. கப்பலோட கார்கோ எல்லாம் சரியா இருந்துது. ஒண்ணே ஒன்னு தான் கப்பல்ல மிஸ்ஸிங். அது என்னன்னா, ஆபத்துன்னா தப்பி போக உதவும் ஒரு சிறு படகு.

அன்னிக்கி நியூயார்க்கிலிருந்து இத்தாலி நோக்கி பயணத்தை ஆரம்பிச்சது அந்த சொகுசு கப்பல். கேப்டன் பெஞ்சமின் என்பவர் 7 பேர் கொண்ட குழுவோடு அதை இயக்கினார். அந்த 7 பேர்ல அவரோட அன்பு மனைவியும் 2 வயது அழகான குழந்தையும் அடக்கம்.



6 மாசத்துக்கு தேவையான பொருட்கள் எல்லாம் நிரம்பி இருந்தன. பொழுதுபோக்குக்காக ஒரு பியானோ, பின் அந்த சீமாட்டிக்காக ஒரு அழகிய தையல் எந்திரமும் கூட இருந்தது.

கப்பலின் ஒவ்வொரு நடவடிக்கையும் பதிவு செய்யும் லாக் புத்தகத்தில் கூட ஒரு அசாதாரண பதிவும் தென்பட வில்லை. திடீர் என எந்த பிரச்னையும் நடந்திருக்கவில்லையென ஆய்வுகள் வேறு சொல்கிறது.

வைத்தது வைத்த இடத்தில அப்படியபடியே இருக்க எங்கே போனார்கள் இந்த 7 பேரும்?!! இதுதான் இன்று வரை நிலவும் விடை தெரியாத மர்மம்.


கலகம் எதுவும் வந்திருக்கலாம், கடல் கொள்ளையர்கள் வந்திருக்கலாம், ராட்சச ஆக்டோபஸ் அல்லது கடல் பிசாசுகள் கொண்டு போயிருக்கலாம் என்பது வரை எத்தனை எத்தனையோ கற்பனைகள் அனுமானங்கள்.

கடைசியாக இது சாராயத்தால் நிகழ்ந்த தீ விபத்தாக இருக்கலாம். ஆனால் சேதம் ஏதும் ஆகாமல் கூட போயிருக்கலாம் என்றார்கள்.

மர்மம் என்னவென்றால், எப்படி எந்த ஒரு முனையளவு சேதமின்றி 7 பேரும் எங்கே போனார்கள்? அவர்கள் இருக்கிறார்களா இல்லையா.. அதுவே இன்றுவரை விடை தெரியாத மர்மம். இன்றும் இந்த கப்பலை பேய்க்கப்பல் என்றே அழைத்து வருகிறார்கள்.


மீண்டுமொரு மர்மத்தை அடுத்த முறை அவிழ்ப்போம்.