• October 5, 2024

புத்தனும் பித்தனாய் மாறும் மர்மம்!

 புத்தனும் பித்தனாய் மாறும் மர்மம்!

கண்கள் வாசிக்க கவிதையாய் நீ!
இதயம் நேசிக்கும் இனிமையாய் நீ!!

கனவில் வருகின்ற கடவுளாய் நீ!
உன்னை யாசிக்கும் பக்தனாய் நான்!!

வானில் ஒளிரும் திங்களாய் நீ!
உன்னை தீண்டும் மேகமாய் நான்!!

நீ என் உயிரில் நிறைந்திருக்க
காற்றும் மழையும் கதை சொல்ல
புத்தனும் பித்தனாய் மாறினேனே!