• April 11, 2024

உயிரை காப்பாற்றிய Smart Watch !!!

 உயிரை காப்பாற்றிய Smart Watch !!!

தொழில்நுட்பம் நாளுக்கு நாள் எண்ணிப் பார்க்க முடியாத வளர்ச்சியை எட்டி வரும் சூழலில் தன் கையில் கட்டிய Smart Watch மூலம் உயிர் தப்பிய ஒரு சிங்கப்பூர் நபரின் கதை நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. விஞ்ஞானத்தின் வளர்ச்சி மனித உயிரை காப்பாற்றும் அளவுக்கு வளர்ந்துள்ளது.


சிங்கப்பூரில் வசித்து வரும் முஹம்மது என்பவர் வேன் தன் மீது மோதியதால் விபத்துக்கு உள்ளாகி சுயநினைவை இழந்துள்ளார். இந்நிலையில் அவர் கட்டியிருந்த ஆப்பிள் Smart Watch தானாகவே அவர் ஆபத்தில் இருப்பதை அறிந்து அவருடைய நண்பர்களுக்கும் எமர்ஜென்சி சேவையான ஆம்புலன்ஸ்-ற்கும் தகவலை தெரிவித்துள்ளது.

Apple Watch SE Review: Best Smartwatch For IPhone Or Should You Pick Apple  Watch Series 6?

ECG sensor வசதி கொண்டிருந்த இந்த ஆப்பிள் வாட்ச்சால் முஹம்மதின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. அவர் கையில் கட்டியிருந்தது ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்-ன் series 4 என்பது குறிப்பிடத்தக்கது.


இது போன்ற மக்களுக்கு பயனுள்ள வசதிகள் ஸ்மார்ட் வாட்ச்சில் வந்துள்ளது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. அளவுக்கு மீறி விஞ்ஞானம் வளர்ந்துள்ளதால் நிறைய ஆபத்துகள் இருக்குமோ என்ற சந்தேகம் நிலவி வரும் இக்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் விஞ்ஞானத்தின் வளர்ச்சி மனித உயிரையே காப்பாற்றக் கூடும் என்பதை நிரூபித்துள்ளது.

Apple delivers smart watch, but you might want to think twice about getting  one

ஆபத்தில் உதவும் நண்பனாக இருந்த ஆப்பிள் Smart watch-ஐ பாராட்டி நெட்டிசன்கள் பல பதிவுகளை இந்த சம்பவத்திற்கு பிறகு சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உபயோகிக்க வேண்டிய முறையில் உபயோகித்தால் தொழில்நுட்பம் நம் தோள் கொடுக்கும் நண்பனே என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது.


இதுபோன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.