Kit Kat-ஐ கத்தியாக உபயோகிக்கலாமா ???
நம்மில் நிறைய பேர் கிட் கேட் சாக்லேட்-ஐ விரும்பி சாப்பிடுவது உண்டு. அப்படிப்பட்ட கிட் கேட்டை கத்தி போல உபயோகிக்கும் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நீங்கள் வழக்கமாக சமூக வலைதளங்களில் உலா வருபவர் என்றால் உங்களுக்கு ஆயிரக்கணக்கான கேள்விகளை எழுப்பும் சில வினோதமான வீடியோக்களை நீங்கள் அவ்வப்போது காண்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். அப்படி உங்களுக்குள் கேள்வியைக் எழுப்பும் ஒரு வீடியோவை பற்றிய பதிவுதான் இது.
இந்த வீடியோவில் ஒரு நபர் கிட்கேட் சாக்லெட்டை நன்கு கூர்மையாக்கி அதை கத்தியாக பயன்படுத்துவதையும், அதை வைத்து தக்காளி நறுக்குவதையும் காணலாம். இந்த வீடியோ பார்ப்பவர்களுக்கு, “ஒரு சாக்லேட் எப்படி கத்தியாக இருக்க முடியும்?” என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
இந்த வினோதமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட Like-களையும், நூற்றுக்கணக்கான சுவாரசியமான கருத்துக்களையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் ஒவ்வொருவரும் நிச்சயம் வியப்பில் மூழ்குவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஒரு சிலர் இந்த வித்தியாசமான பரிசோதனையை விரும்பினாலும், நிறைய பெயர் இந்த வீடியோ குறித்த கேள்விகளை எழுப்பி இந்த வீடியோ போலியானது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது போலியானதா இல்லையா என்பதை ஆராய்ச்சி செய்வதைத் தாண்டி பார்ப்பதற்கு வேடிக்கையாகவும், நகைச்சுவையாகவும் இருக்கிறது என்பதே உண்மை.
உண்மையில் ஒரு சாக்லேட் கத்தியாக மாறும் திறனுடன் இருந்தால் அதை சாப்பிடுபவர்களுக்கு நிச்சயம் அது ஆபத்தையே விளைவிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கிட்கேட் சாக்லேட்டை கத்தியாக உபயோகிக்கும் வீடியோ அடங்கிய இன்ஸ்டாகிராம் பதிவை கீழே காணுங்கள்.
இதுபோன்ற தகவல்களுக்கு deep talks தமிழுடன் இணைந்திருங்கள்.